பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


பறங்கிப்பட்டை இரசாயனம்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

            தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

                               -  திருக்குறளும், சாலமன் பாப்பையா ஐயா உரையும்.


                          பறங்கிப்பட்டை இரசாயனம்

                                    ( அகஸ்தியர் வைத்ய ரத்னச் சுருக்கம்)

            பறங்கிப்பட்டை  இது சீனப்பட்டை, பறங்கிச் சக்கை என்றழைக்கப்படும், சீனம் மற்றும் ஜப்பானில் காணப்படுவது. நம் நாட்டில் கிடைக்காது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் சரக்காகையால் இது பறங்கிச்சக்கை என பெயர் பெற்றது. சித்த மருத்துவர்கள் இதை நாட்பட்ட மேக வியாதிக்குப் பயன்படுத்துவர். இதன் குடிநீர் வாதநோய்கள், பிரமேகம் போன்ற பிணிகளைப் போக்கும். இதைச் சூரணித்து திரிபலையோடு கலந்து குடுக்க வாதப்பிணிகள், மூலம், பவுத்திரம், பிளவை, நீரழிவு, சிரங்கு, குஷ்டம், விந்து நட்டம், கடிவிடம், முடவாதம் முதலியவைகள்போம். பாலில் சிறு துண்டுகாளக வெட்டிப்போட்டு , பாலைக் காய்ச்சி எடுத்து ஊலர வைக்க சுத்தியாகும். சுத்தி செய்யாமல் பயன்படுத்தக் கூடாது.

சீனப்பட்டை
பறங்கிப்பட்டை
        

தேவையான பொருட்கள்


1. பறங்கிச் சக்கை                                                        10 மடங்கு
2. அமுக்கராக் கிழங்கு                                                10 மடங்கு
3. நிலப்பனைக்கிழங்கு                                              5 பங்கு
4. தண்ணீர்விட்டான் கிழங்கு                                   2 பங்கு
5. நன்னாரி வேர்ப்பட்டை                                          1 பங்கு
6.  சங்கம் வேர்ப்பட்டை                                              1 பங்கு
7. கடுக்காய்                                                                     1 பங்கு
8. நெல்லிக்காய்                                                              1 பங்கு
9. தான்றிக்காய்                                                              1 பங்கு
10. இலவங்கப்பத்திரி                                                   1 பங்கு
11. சிறுநாகப்பூ                                                                1பங்கு
12. கண்டங்கத்திரி வேர்                                             1 பங்கு
13. கொடிவேலி வேர்ப்பட்டை                                  1 பங்கு
14. விலாமிச்சு வேர்                                                       1 பங்கு
15. தக்கோலம்                                                                 1 பங்கு
16. வால்மிளகு                                                                 1 பங்கு
17. வாய்விடங்கம்                                                          1 பங்கு
18. கொத்துமல்லி விதை                                             1 பங்கு
19. சீரகம்                                                                            1 பங்கு
20. கருஞ்சீரகம்                                                                1 பங்கு
21. குரோசாணி ஓமம்                                                   1 பங்கு
22. ஓமம்                                                                              1 பங்கு
23. சிற்றரத்தை                                                                1 பங்கு
24. சந்தனத்தூள்                                                              1 பங்கு
25. சிறுதேக்கு                                                                   1 பங்கு
26. திராட்சை                                                                     1 பங்கு
27. பேரீச்சங்காய்                                                             1 பங்கு
28. வெட்பாலையரிசி                                                     1 பங்கு
29. தாமரைக் கிழங்கு                                                    1 பங்கு
30. சாதிக்காய்                                                                   1 பங்கு
31. இலவங்கம்                                                                   1 பங்கு
32. சாதிப்பத்திரி                                                              1 பங்கு
33. கறிவேப்பிலை                                                            1 பங்கு
34. சுக்கு                                                                                1 பங்கு
35. மிளகு                                                                               1 பங்கு
36. திப்பிலி                                                                           1 பங்கு
37. இலவங்கப்பட்டை                                                     1 பங்கு
38. பால்                                                                                  160 பங்கு
39. சர்க்கரை                                                                       32 பங்கு
40. தேன்                                                                                 40 பங்கு
41. நெய்                                                                                 20 பங்கு
42. குங்குமப்பூ                                                                    1/8 பங்கு
43. கோரோசனை                                                             1/8 பங்கு
44. பச்சைக் கற்பூரம்                                                       1/8 பங்கு    


செய்முறை

            தூய்மை செய்து, சுத்தி செய்த எண் 37 வரையிலான சரக்குகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து , சலித்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பேற்றிச் சிறு தீயில் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் சலித்து வைத்த சரக்குகளை சிறிது சிறிதாகத் தூவி நன்றாகக் கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி முதலில் நெய்விட்டுக் கிண்டி பின் தேனும் சேர்த்துக் கிண்டி இளஞ்சூட்டில் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கற்பூரம் இவைகளைப் பொடித்துப்போட்டுக் கலந்து பத்திரப்படுத்தவும். 

அளவு

                5 கிராம் , காலை மாலை இருவேளை.

தீரும்நோய்கள்


1. மார்புநோய்  

2. மேகம் 

3. பறங்கிப்புண்  - கிரந்தி ; ஒரு வகைக் கிரந்தி நோய், இது பறங்கியர்களால் இங்கு பரவிய நோய் , இது கொறுக்கைப் புண் வகையைச் சார்ந்தது.   இது நோயுள்ளவருடன் உடலுறுவு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆண்குறியின் மொட்டு அல்லது சளிச் சவ்வில் பரு போன்று உருவாகி அது கடினமாகி, சீழ் பிடித்து சீழுடன் உடையும். காய்ச்சலடிக்கும், எடை குறையும் , நாக்கில் அழுக்குக் படிந்து , தலை வலியுடன் காணப்படும். கவனியா விடில் உடல் முழுவதும் புண் உருவாகி, எலும்புப் பொருத்துகளில் வலி உண்டாகும். மூக்கின் சளிச் சவ்வு பாதித்து, வாசனையுணர்வு போய்விடும். முற்றிய நிலையில் தொழுநோய் ஏற்பட்டு  அழுகத் தொடங்கும். இவை எளிதில் பரவுவதால் நோயாளியின் குடும்பத்திற்கும் குறிப்பாக அவர்தம் குழந்தைகளுக்கு ஆபத்தாக அமையலாம்.

4. கண்டமாலை  - தாய் தநதையரின் உடலின் பண்பு நலன் பாகுபாட்டினாலும், இரத்தக் கேட்டினாலும்,  கழுத்தைச் சுற்றியிருக்கும் கோளங்கள் வீங்கி வலித்துச் சீழ்கொண்டு உடைநது இரணமாகி, நெடு நாளைக்கும் ஆறாமலே கிளைத்துக் கொண்டு துன்புறுத்தும் ஒரு நோய். இது கழுத்தைச் சுற்றி மாலைபோல பிறப்பதால் இப்பெயர் பெற்றது. கண்டமாலை விரணம் போக்கி என்று செம்மந்தாரை மூலிகை இதன் புண் ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.

5. ஆண்குறிப்புற்று

6. பெண்குறிப்புற்று

7. மேகப்புண்

8. கிரந்தி

9. சூலை

10. வாயு

11. வளி (வாதம்) 

12. வெள்ளை

13. ஐயநோய்  -  96 . கபம்  - 96    


சித்தம்



No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி