பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


ஒதிய மரம்

 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.

            உட்பகைக்கு  அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சைப் பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.

                                                                    - திருக்குறளும், கலைஞர் கருணாநிதி உரையும்.

                                    ஒதிய மரம் ( Odina wodier )

உதிய மரம்
ஒதிய மரம்

                இது உதியமரம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் உயரமும் பருமனுமுள்ளது. இம்ரம் வலு இல்லாது இலேசாக இருக்கும். இதன் பூக்கள் சிறியதாக இருக்கும். ஒன்றுக்கும் உதவாத ஒதிய மரம் என்னும் சொலவடை இருந்தாலும் இம்மரம் வைத்தியத்திற்கு உதவும்.

ஒதியம் பட்டை

                இதன் பட்டையை இடித்துக் காய்ச்சிய குடிநீரை  மேகவீக்கத்திற்கும், கிராணி, அதிசாரம் முதலியவைகளுக்கு கொடுக்கப் படுகிறது.

                இதன் குடிநீரை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு, வெள்ளைக்கும் வெளிப்புறமாக பயன்படுத்த நலம் தரும்.

ஒதியன்
ஒதிய மரம்
 ஒதிய மர பிசின், வேர்

            இதன் பிசினுக்கும், வேருக்கும் துவர்ப்புக் குணமுள்ளதால் சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுப்போக்கு முதலியவைகளுக்கு கொடுக்கப்படுகிறது. வாய் புண்ணுக்கு கொப்புளிக் கொடுக்கலாம். வெளிப்புண்களைக் கழுவவும்  பயன்படும்.




சித்தம்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி