பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இலந்தை மரம்

 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி

            ஒருவருக்கு கைப்பொருள் ஆவதற்கான ஊழினால் முயற்சி தோன்றும்.பொருள் அழிவதற்கான ஊழினால் சோம்பல் தோன்றும்.

                             - திருக்குறளும், திருக்குறளார் ,முனுசாமி ஐயா உரை.

இலந்த வடை
இலந்தை மரம்

மேலும் இலந்தை மர படங்கள்

          இலந்தை ஒரு வளைந்த முள் உடைய மரம். இம்மரம் 16 அடி உயரம் வரை வளருகிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாகவும், பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமாக பூக்கும். இதன்  பழங்கள் உருணடையாய், சிறியதாய்  சுண்டைக்காயை ஒத்து இருக்கும். பழத்தினுள் குறைந்த அளவே  பிசுபிசுப்புடன்ன சதையுடனும் விதை பெரியதாகவும் இருக்கும்.

            இதன் வேறு பெயர்கள் இச்சத்தி , இரதி மாமரம், இந்துரு, இரதி, இலவை, குல்லரி, குலவலி, கொண்டை, கோ, கோடலி, கோத்தகொடி, சஞ்சரிகை, சீவகம், பகண்டை, வக்கிரகண்டம், வவ்வாலொட்டி.

            இதன் முட்கிளைகளை வெட்டி வௌவால் பறக்கும் இடங்களில் கட்டி வைக்க, வௌவால்கள் அதில் சிக்கிக் கொள்ளும், அதனாலேயே இதற்கு வவ்வாலொட்டி எனப்பட்டது.

இலந்தை இலை

            நீர்ச் சுருக்கு ( நீர்க் கடுப்பு ; dysurea - ardor urinae ) பிணிக்கு இதன் இலையை அரைத்து சிறுநீரகப் பகுதிகளில் பற்றுப்போட சரியாகும்.


இலந்தைக் காய்கள், பழம்

            காய் , பழங்கள் இரத்த சுத்திக்கும், செரிமானத்திற்கும் உதவும்.

            பழம் இயல்பாகச் சாப்பிடலாம், துவையல் செய்யலாம்.

            இதன் காய்களை பாலில் கொதிக்க வைத்து  குடிநீராகச் செய்து , வடிகட்டிக் குடிக்க, தொண்டைப் புகைச்சல், இருமல் போன்ற பிணிகள் தீரும்.

            இதன் இலையை பாலில் கொதிக்க வைத்து குடிநீராக்கி கொடுக்க வெள்ளை நோய் ( இரத்தம் வெண்மையாக மாறி ஒழுக்கப் பெற்ற ஒரு நோய் ; leucorrhoea. gonnorhoea ) குணமாகும்.

இலந்தை வடை 

                இலந்தைப் பழத்தை மசித்து காயவைத்து செய்யப்பட்டை அடை, இதை பள்ளிகளின் வெளியில்  குறிப்பாக விற்பர், இது பெண்களின் கர்ப்பப் பையைப் பலப்படுத்தும் .


இலந்தைப் பட்டை

            இதன் பட்டையிலிருந்து துவர்ப்பு சுவையுடைய சத்து எடுப்பர்.


இலந்தைக் கட்டை

            இலந்தைக் கட்டையை அடுப்பில் வைத்து எரிக்கும்போது கட்டையின் மறு முனையில் தைலம் இறங்கும், இது வெண்குட்டத்தின்மேல் தடவ நிறம் மாறும், 


இலந்தை வேர்

            இதன் வேர்ப்பட்டையை தூளாக்கி சிலந்தி மற்றும் பழைய புண்கள் மீது தூவ குணமாகும்.

            வேர்ப்பட்டையை குடிநீர் செய்து கொடுக்க காய்ச்சலுக்கும், குடல் கோளாறுகள் குணமாகும்.


இலந்தை 15 வகைப்படும்

1. நரியிலந்தை  - Zizyphus albens

2. கொட்டை இலந்தை - Zizyphus Xylopyrus.

3. கொடி யிலந்தை  - Sentia Indica  alias S. rheediana.

4. சிற் றிலந்தை  - small bair

5. நில விலந்தை - zizyphus jujube

6. காட் டிலந்தை  - Zizyphus nummularia rugosa

7. ஆற் றிலந்தை  - river jujube

8. சுரை யிலந்தை  - gourd jujube.

9. நா யிலந்தை  - Zizyphus horrdia

10. பாதிரி யிலந்தை - Another variety

11. சீமை யிலந்தை  - Zizyphus Mauritiana

12. பே ரிலந்தை  - Same As No.11.

13. சூரை யிலந்தை  - Zizyphus oenoplia

14.  புளியிலந்தை - Sour jujube

15. வரி யிலந்தை  - Another Vareity.



சித்தம்


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி