பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


ஆலமரம்

                              அறனழீஇ  அல்லவை செய்தலின் தீதே

                                புறனழீஇப்  பொய்த்து நகை 

        ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது  பொய்யாகப் பேசி சிரித்து விட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப்பொல்லாங்கு பேசுவது, அறவழியைப் புறக்கணித்துவிட்டு , அதற்கு மாறான செயல்கள் செய்வதை விட கொடுமையானது.

ஆல மரம்
ஆலம் பழம்

        ஆலமரத்தின் படங்கள் மேலும் காண

            மிகப் பெரிதாய் விரிந்து பரந்து வளரும் மரம் இது. இதன் விழுதுகள் மரத்திலிருந்து பூமிக்குள் பாய்ந்து பருத்து தூண்களைப்போல் இம்மரத்தைச் சுற்றிலும் பரவி இருக்கும். இதன் விதை மருந்திற்கு உபயோககப்படும். இதன் பாலும் , பட்டையும் துவர்ப்பானவைகள். 

            ஆலமரத்தின் வேறு பெயர்கள் அன்னப மரம்,  காதலம், கொளி, தொன் மரம், நற்பால் மரம், பழு மரம் , பாலி, பூதம், வடமரம், வானோங்கி.

ஆலமரத்தை  11 வகையாகப் பிரிப்பர்,

1, கல்லால்                stone banyan

2. குறுவால்               short banyan

3. இச்சியால் (அ) இந்தியால்  Chinese banyan

4. சிற்றால்                Short banyan

5. கொடியால்           Creeping banyan

6. சீமையால்            Indian caoutchouc ; Ficus- elastica

7. கருணியால்

8.கோனியால்        Ficus callosa

9. பேரால்                 Ficus Bengalensis

10. காட்டால்            Ficus citrifolia alias Ficus Mysorensis

11. நீரால்                    Ficus Nervosa.     

ஆலம் பால்

               ஆலமரத்துக் கிளை, இலைகளை, விழுது இவைகளை உடைத்தால் வெள்ளை நிறமான திரவம் வெளிப்படும், இது ஆலம் பால் எனப்படும். ஆலம்பால் துவர்ப்புச் சுவை உடையது. பல் வலிக்கும் இடத்திற் உட்பிரயோகமாக ஆலம் பாலைத் தடவி வர பல்வலி  குறையும். ஆலம்பாலை வெடிப்பிற்குப் பூசிவர பித்த வெடிப்பு மறையும். தலைக்குக் குளிர்ச்சி தரும் . 

நாக்குவெடிப்பு(Leukoplakia). 

மூத்திர கிரிச்சரம்(பிரமேகம்) (gonorrhoea), 

தாதுநட்டம்   முதலிய நோய்கள் தீரும். 

ஆலமரத்துப்பட்டை

                ஆலமரத்துப்பட்டை துவர்ப்புச் சுவை உடையது. பட்டையை குட்டத்திற்கும் (Leprosy), நீரிழிவுக்கும், வாத நோய்களுக்கும் வைத்தியர்கள் மருந்தில் மற்ற சேர்மானங்களோடு சேர்த்து செய்வர் . 

                ஆலம்பட்டையை குடிநீராக்கி கொப்புளித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், நாக்கு வெடிப்பு, ஈறுப்புண் முதடிலய பிணிகள் தீரும்.

                ஆலமரத்து வேர்ப்பட்டையை முறைப்படி குடிநீராக்கி பாலுடன் கலந்து கொடுக்க வெள்ளை (Orchitis) தீரும். 

ஆல மரத்து விழுது

                இதை அளவாக நறுக்கி நன்கு மென்று tooth bruush  போல பல் தேய்க்கப்  பயன்படுத்துவர். ஆலம் விழுது பல் ஈறினை பலப்படுத்தி பல்லை இறுக்கிக் கட்டும்.

ஆல் இலை 

               -   கட்டிகளுக்கு ஆல இலையை வதக்கிக் கட்டுவர்.

                -    கரப்பான் வியாதிக்கு ஆலமரத்தின் பழுப்பு இலையைச் சுட்டுக் கரியாக்கி  நல்லெண்ணெயில் கலந்து பூசக் குணமாகும்.

                 -  ஆலம் பழுப்பிலையை, அரிசிப் பொரியோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடுக்க வியர்வை அதிகரிக்கும்.

ஆலம் பிசின்

                ஆலம் பிசினை எண்ணெயுடன் கலந்து பதமாகக் காய்ச்சி, காதுக்குள் வரும் புண்ணிற்கும் , செவிடு (காது கேளாமை) நோயிற்கும் பயன்படுத்துவர். 

ஆலம் விதை

                வயிறைக் கழிக்கும், உடல் பலத்தை உண்டாக்கும். 

சமூலம் 

            ஆலமரத்தின் சமூலத்திற்கு ( வேராதி முழு மரம் ) மேகம் வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோய்களைப் போக்கும் தன்மை உடையது.



சித்தம்

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி