பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கடுவெளிச் சித்தர் பாடல்கள் - சமூக நலன் (வகுப்பு)

Thiru Valluvar
திருவள்ளுவர்



பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் 
கோபஞ் செய்யாதேயமன் கொண்டோடிப் போவான்
 பாபஞ் செய்யாதிரு மனமே

சொல்லறுஞ் சூதுபொய் மோசம்  -  செய்தால்
    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசுவாசம் -  எந்த
      நாளும் மனிதற்கு நன்மையாய்  நேசம்.                       2.

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
        நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி  - மெத்தக்
      கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி           4.

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
      நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட 
      பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே   7.

காசிக்கோ டில்வினைபோமோ ?- அந்தக்
        கங்கை யாடில்கதி தானுமுண்டாமோ
பேசுமுன் கன்மங்கள் சாமோ?  -  பல 
        பேதம் பிறப்பது  போற்றினும் போமோ?                15.

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
        போதகர் சொற்புத்தி போத வாராதே
மைவிழி மாதரைச் சாராதே  - துன்
    மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே                24.

வைதோரைக் கூட வையாதே  -  இந்த
        வையம் முழுதும் பொய்த்தும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
        வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே                                25.

பாம்பினைப் பற்றி யாட்டாதே  - உன்றன்
        பத்தினி மார்களைப் பழித்துக் காட் டாதே
வேம்பினை யுலகிலூ ட்டாதே  -  உன்றன்
        வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே                           27.

போற்றுஞ் சடங்கை நண்ணாதே  -  உன்னைப்
            புகழ்ந்து  பலரிற் புகல வொண்ணாதே
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே -  பிறர்
            தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே                    29.

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
        காட்டி மயங்கிய கட்குடி யாதே 
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
        அற்றவஞ் ஞானத்தி நூல்படி யாதே                                    30.

எவ்வகை யாகநன் நீதி  - அவை
        எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
        ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி                            33.

கள்ளவே டம்புனை யாதே - பல
          கங்கையி லேயுன் கடம் நனையாதே
கொள்ளைகொள் ளநினையாதே - நட்புக்
        கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே                        34. 
          (கடம்   - பாவம்)

-சித்தம்.
        



No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி