பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


வெள்ளி சுத்தி முறை

                    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

                    இன்னாவாம் இன்னா செயின்.

                                                                                    - திருக்குறள்.

நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதேயாகும்.அதுபோல சுற்றத்தார் நன்மை இனிதாயினும், அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அது இன்னாதாயே விடும். 

                                                                                    - மணக்குடவர் உரை.

Silver
வெள்ளி


             அழகிய ஆபரணங்களைச் செய்யும் வெள்ளி எடை குறைவானதாகவும், நீளும் தன்மையுடனும் இருக்கிறது. வெள்ளியைச் சுத்தி செய்யாமல் மருந்துகளில் பயன்னடுத்தினால் வாழ்நாள், வெண்ணீறு எனப்படும் விந்து, உடல் பலம் முதலிய நல்லவற்றைக் குறைத்து மலக்கட்டு, அதீத உடல் எரிச்சல்       ( Intense burning sensation asin an intoxicated person) இவற்றினால் உற்பத்தியாகும் பிணிகளைத் தோற்றுவிக்கும். அதுவே சரியான முறையில் வெள்ளியைச் சுத்தி செய்து மருந்துகளை முறைப்படி முடித்து அருந்தினால் அதன் பெருமை சொல்லில் அடங்காது.

சுத்தி முறை 1. 

            சரிகை வெள்ளியை உருக்கி ஊத்தி தகடாய் தட்டி உலையில் வைத்து  காய்ச்சி மணத்தக்காளிச் சாற்றில் தோய்க்கவும் இப்படியே வெள்ளி மடியும் வரை காய்சிக் காய்ச்சி மணத்தக்காளிச் சாற்றில் தோய்க்க சுத்தியாகும்.


சுத்தி மறை 2 .

            2. சரிகை வெள்ளியை உருக்கி தகடாய்த் தட்டிக் காய்ச்சி பழுபாகல் கிழங்கின் சாற்றில் தோய்த்து எடுக்கவும். இப்படியே ஏழு முறை செய்ய சுத்தியாகும்.

Palu pagal Kai
பழுபாகல் காய்

சுத்தி முறை 3

                வெள்ளிச் சரிகையை உருக்கித் தட்டித் தகடாக்கி சூடு செய்து மகிழம் பூச்சாற்றிலாவது அல்லது பிரமதண்டு இலைச் சாற்றிலாவது வெள்ளி மடியும் வரை தோய்த்து கழுவி எடுக்கச் சுத்தியாகும்.

Brama thandu chedi
பிரமதண்டு

Magila maram
மகிழமரம்


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி