பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கண்டங்கத்திரி இளகம்

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று,

            தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்து போய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து , அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளோர் துன்பமமாயினும், இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன்உள்ளக் கருத்தை சோரவிடாதவன் ஒற்றன் என்றவாறு.
                            
 - திருக்குறளும், மணக்குடவர் உரையும்

Kandangathiri
கண்டங்கத்திரி



                    கண்டங்கத்திரி இளகம்
                                    ஆத்ம ரட்சாமிர்த வைத்திய சாரசங்கிரகம் 


தேவையான பொருட்கள் 

1. இஞ்சிச் சாறு                         - 1400 மிலி
2, கண்டங்கத்திரிச் சாறு     - 1400 மிலி
3. நெருஞ்சிச் சாறு                   - 1400 மிலி
4. முள்ளங்கிச்சாறு                   - 1400 மிலி
5. ஆவின் பால்                            - 2800 மிலி
6. கருப்புக்கட்டி(வெல்லம்)    - 280 கிராம்
7. சுக்கு                                            - 35 கிராம்
8, மிளகு                                          - 35 கிராம்
9. திப்பிலி                                       - 35கிராம்                                                                 
10. சீரகம்                                        - 35  கிராம்
11. ஏலம்                                           - 35 கிராம்
12. வாயுவிளங்கம்                      - 35 கிராம்
13, கிராம்பு                                    - 35 கிராம்
14. தாளிசபத்திரி                        - 35 கிராம்
15, பசுவின் நெய்                         - 700 கிராம்
16. தேன்                                           - தேவையான அளவு

செய்முறை

                ஒரு மட்கலத்தில் எண் 1-4  உள்ள சாறுகளை விட்டு, மேலும் அதில் ஆவின் பால் விட்டு, அதில் கருப்புக்கட்டியைப் போட்டு கரைத்துக் காயச்சி, பாகுபதம் வந்தவுடன்  சுத்தி செய்து, பொடித்து, துணியிலூட்டி வடித்து வைத்திருக்கும் 7 முதல் 14 வரையிலான  சரக்குகளைத் தூவிக்கிண்டி , மெழுகு பதத்தில் கிண்டி, தேன்விட்டுப் பிசைந்து  பத்திரப்படுத்த வேண்டும்.



தீரும் நோய்கள்

1. வாதம்
2. பித்தம்
3.வாந்தி
4.சூலை  - குன்மத்தால் கீழ்வயிறு பக்க விலாவில் வாயு தங்கி குத்தலை உண்டாக்கும் ஓர் நோய்.
5. இசிவு -  உடம்பில் பல இடங்களில் ஏற்படும் வலிப்பு - Tetanus.
6. அரோசியம்  - பசி இனமை
7. அன்னத் துவேஷம்  -  உணவு வெறுப்பு.
8. குன்மம்  -  click
9.  பொருமல்  - வயிற்றுப் பொருமல் - flatulency.
10. விக்கல் -  ஈரல்தாங்கி எனும் சதைக்காவது , அத்ச சதையைச் சார்ந்தாவது, நெருங்கியாவது இருக்கும் இருக்கும் உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டானால் விக்கல் ஏற்படும்.  - Hiccups.
11. பித்த எரிவு -  பித்தாதிக்கத்தினால் உடம்பில் பல இடங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு.  - burning sensation Caused in several parts of the body due to excess of bile in this system. 
12. கடுப்பு  - வேதனை, அழற்சி, வலி, உளைதல் முதலியவற்றை குறிக்கும் பொதுச் சொல் ,   a comman term indicating inflammation, irritation,rheumatic pain,vital actions i muscles etc.
13. கபால குத்து - கொடிய தலை நோய்
14.மயக்கம் 


சித்தம்,

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி