உன்னதமான சித்தர்கள்

பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு

                      "போகர் கருக்கடை நிகண்டு 500

"

"சித்தியாம் வுப்பெடுத்து சிவன்தான் சொன்னார்

          தேவிசொன்னாள் திருமூலர் சொன்னார்

நித்தியமாநந்தி சொன்னார் மச்சர் சொன்னார்

            ரிஷிபோகப் பதஞ்சலியுங் கோரக்கர் சொன்னார்

நந்தியாம் நாகாரச் சுனராம்தேவர்

           நலமான சித்தர்களும் வுப்பே சொன்னார்

பெத்தியா மென்னுப்பு காலங்கி சொல்லப்

         பிசகாமல் பார்த்திட்டுப் பிதற்றினேனே       

                                                                      பாடல் எண் 147"

"

பார்த்திட்ட வுப்பேது வென்றேயானால்

            பாக்குப்போல் கல்லுப்பை யுடைத்துக்கொண்டு

ஏர்த்திட்ட பழச்சாற்றில் தோய்த்துத் தோய்த்து

         ஏழுநாள் ரவிதனிலே யுலரப்போட்டு

கார்த்திட்ட கட்டுககொடி சிறுகல்லூரி

             கனத்தகுப்பை மேனியிலை சமனாய்ச் சேர்த்து

ஆர்த்திட்ட பழச்சாற்றி லரைத்துமைபோ

       லடைவாக சேறுபோற் குழப்பிவையே 


"

"

 வைத்த பின்பு முன்காயஞ் சவட்டுப்புமேலே

         வளமான புழுகோடு வீரஞ்சீனம்

வைத்த பின்பு வெள்ளையென்ற பாஷாணந்தானும்

           வராகனெடை பலத்துக்கு நிறுத்துக்கொண்டு

நைத்த பின்பு நாற்சாமங் கல்வத்திட்டு 

         நலமான பழச்சாறு விட்டு ஆட்டி

வைத்த பின்பு வுப்பின்மேலே பேசி

யுரப்பான ரவிதனிலே காயப்போடே            150"

"

வாங்கியே மேற்கவசந் தள்ளிப்போட்டு

            மறுபடியு   மிலியரைத்து அடையாய்த் தட்டி

ஓங்கியே வுப்பையதின் மேலே வைத்து

             வுணர்வான அடைமுடி யொக்கப் பண்ணி

தேங்கியே சீலைசெய்து ஓட்டில்வைத்து

          சிறப்பான குக்கிடத்தில் புடமாய்ப் போட்டு

ஆங்கியே ஆறவிட்டு அடையைத் தள்ளி 

அரைத்து முன்னிலைபோல் கவசங்கட்டே             151"

"

 கட்டியே முன்போலக் கவசமாய்போட்டு

       கவசமெல்லாந் தள்ளியே காயப்போடு

  வெட்டியே வெள்ளையென்ற பாஷாணந்தான்

        வீரமொடு வெண்மலமும் புழுகுபூரம்

  கட்டியேகடனுரைஞ்சீனங்கட்ட

        கனமான மதியுப்புச் சாரந்தானும்

  தட்டியே வகைவகைக்குப் பலங்கால்கூட்டி  

         சம்பிரப் பஞ்சாற்றா லரைத்திடாயே         152"

"

அரைத்திட்டு நால்சாம முப்பிலப்பு

     ஆண்மையா ரவிதனிலே காயப்போட்டு

கரைத்திட்ட கல்லூரிகட்டுக்கொடிமேனி     

       கனியவே சுட்டு நன்றய்ச் சாம்பலாக்கி

இரைத்திட்டு யெலுமிச்சஞ் சாற்றிலரைத்து

      ஏற்றமாம் வுப்பின்மேல் கவசங்கட்டி

பரைத்திட்டுப் பாண்டத்தில் பண்பாய் வைத்துப்

    பாங்கான வோடுகொண்டு பதிய  முஊடே

 "

"

பதியவே வோடுமுஊடிச் சீலைசெய்து 

     பாங்கான குழிவெட்டி முழங்கால் மட்டும்

புதியவே பெரும்புடமாய் போட்டெடுத்து 

      பேராக வெடுத்துப்பார் வெளுப்பாய்க் காணும்

கதியவே கரியில் வைத்து வுருக்கிப்பாரு

     கண்விட்டு ஆடுமே பொன்போல்தானும்

எதியவே யிந்தவுப்புக் கொப்பேதென்றா

     லென்தாயார் மனோன்மணிக்கு யினையுமாமே."

  - சித்தம்.

லிங்கக் கட்டு

 கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

        வேண்டுமளவு குடுத்தலும், இன்சொற் கூறுதலும் செய்வானாயின் தனக்கு முன்னாகியும், பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன். இது ஒழுகுந் திறம் கூறிற்று.

                                 - திருக்குறளும், மணக்குடவர் உரையும்.

                                    லிங்கக் கட்டு        

லிங்கம்
லிங்கம்
    

            கட்டு என்பதன் இயல்பு , மருந்துப் பொருட்களை நெருப்புக்கு எதிர் நிற்கும் (ஓடாமல்) தன்மையுடையதாய்ச் செய்தலே ஆகும்.

            இது , பாடாணங்களைத் தனித்தனியேயாவது , இரண்டு முதல் சில சரக்குகள் சேர்ந்து இறக்கப்பட்ட புகைநீரிலாவது, மூலிகைச்சாறிலாவது, குடிநீரிலாவது, தாய்ப்பாலிலாவது, தேனிலாவது, தனிச் சரக்குக் குழிப்புட நெய்யாலாவது , சில சரக்குகள் சேர்ந்த குழிப்புட நெய்யாலாவது சுருக்குக் குடுத்துக் கட்டிக் கொள்வதாகும்.

            கட்டுகள் மாத்திரைக் கல் எனப்படும்.

            சாதிலிங்கம் இது ஒரு பிறவிச் சரக்கு, இது இரசம் எடுக்கப்படும் சுரங்கங்களில் இருந்து கிடைக்கப்படுகிறது. இது சிவப்பு நிறத்திலும் , அதிக எடை உள்ளதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

              வைப்புச் சரக்காக  உலாந்தா லிங்கம் ,உலந்தா தேசத்திலிருந்து வருவதால் அப்பெயர் பெற்றதாம். அது பவளம்போல சிவப்பாகயிருந்தால் அதற்கு பவளமனோசிலை எனவும், சாதிலிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அதற்கு வடமொழியில் தரதம் அல்லது  இங்குளம் அல்லது இங்குலிகம் என்றும் பெயர். இதனின்று எடுத்த ரசத்தை வெகுசுத்தம் என்றெண்ணி சித்த வைத்தியர்கள் மருநது செய்ய உபயோகிப்பர்.  இதை பற்பம், செந்தூரம், சுண்ணம் முதலின செய்வர்.

தேவையான பொருட்கள் 

1. இலிங்கம்                                     35 கிராம்

2.  பளிங்குச் சாம்பிராணி        35 கிராம்

3. கற்பூரம்                                        35 கிராம்

4. தாய்ப்பால்                                தேவையான அளவு


செய்முறை 

                இலிங்கத்தைத் தாய்ப்பாலில் போட்ட ஊறவைத்து பத்துநாள் கழித்து எடுத்து ( பத்து நாளும் புதிய புதிய பாலை மாற்றுவதும் உண்டு) கழுவி, உலர வைக்கவும். லிங்கத்தின் எடைக்கு எடை பளிங்குச் சாம்பிராணியையும், கற்பூரத்தையும் எடுத்து கல்வத்திலிட்டு, மெழுகாகும்படி அரைத்து, சூடாக வழித்துப் பத்துப் பங்காக்கி , ஒருபங்கைச் சீலையிலூட்டி, இலிங்கத்தை உருட்டி விளக்கில் கொளுத்தவும்.ஆறியபின் எடுத்துக் கரியைச் சுரண்டி எடுத்துவிடவும்.பிறகு மற்றைய ஒன்பது பாகங்களையும் தனித்தினியே முன்போவலே செய்து எடுக்கவும்.  (மூளை உள்ள பிள்ளை வென்று பிழைக்கும்.) 

மருந்தின் அளவு 

            இரண்டு அல்லது மூன்று இழைப்புகள் , ஒரு நாளைக்கு இருவேளை.


துணை மருந்துகளும் தீரும் நோய்களும்.

I   வாய்வு  - வாயுநோய் இது எண்பது (80 ) வகைகாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்தை தேனில் இழைத்து நக்க வாயுநோய்கள் போம்.

II. திரிகடுகில் மருந்து அருந்த

        1. சந்நிதோடம் - ஜன்னி தோஷம்  - சன்னி தீரும்

        2. பொல்லாத மாரடைப்பு

        3. மூர்ச்சை  - மயக்கம்

        4. கழிச்சல்

        5. வயிறூதல்  - உணவு உண்ட பின் வயிறு பெரியதாதல்.

III . இஞ்சிச் சாறில் மருந்தருந்த        

            1. சூலை

            2. அழல் - சுரம்  - காய்ச்சல்

            3. வெளுப்பு

            4. விடபாகம்

           5. வயிற்றுவலி  -  மலச்சிக்கல்   உண்டாகி, மூலத்தில் கனல் மிகுந்து குடல் முறுக்கி , கத்தியில் குத்தியது போன்று வலி ஏற்படும் பிணி.

                6. ஊதல் 


பா.சி.ம.செ.பெ.மு.

சித்தம்.


                




பறங்கிப்பட்டை இரசாயனம்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

            தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

                               -  திருக்குறளும், சாலமன் பாப்பையா ஐயா உரையும்.


                          பறங்கிப்பட்டை இரசாயனம்

                                    ( அகஸ்தியர் வைத்ய ரத்னச் சுருக்கம்)

            பறங்கிப்பட்டை  இது சீனப்பட்டை, பறங்கிச் சக்கை என்றழைக்கப்படும், சீனம் மற்றும் ஜப்பானில் காணப்படுவது. நம் நாட்டில் கிடைக்காது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் சரக்காகையால் இது பறங்கிச்சக்கை என பெயர் பெற்றது. சித்த மருத்துவர்கள் இதை நாட்பட்ட மேக வியாதிக்குப் பயன்படுத்துவர். இதன் குடிநீர் வாதநோய்கள், பிரமேகம் போன்ற பிணிகளைப் போக்கும். இதைச் சூரணித்து திரிபலையோடு கலந்து குடுக்க வாதப்பிணிகள், மூலம், பவுத்திரம், பிளவை, நீரழிவு, சிரங்கு, குஷ்டம், விந்து நட்டம், கடிவிடம், முடவாதம் முதலியவைகள்போம். பாலில் சிறு துண்டுகாளக வெட்டிப்போட்டு , பாலைக் காய்ச்சி எடுத்து ஊலர வைக்க சுத்தியாகும். சுத்தி செய்யாமல் பயன்படுத்தக் கூடாது.

சீனப்பட்டை
பறங்கிப்பட்டை
        

தேவையான பொருட்கள்


1. பறங்கிச் சக்கை                                                        10 மடங்கு
2. அமுக்கராக் கிழங்கு                                                10 மடங்கு
3. நிலப்பனைக்கிழங்கு                                              5 பங்கு
4. தண்ணீர்விட்டான் கிழங்கு                                   2 பங்கு
5. நன்னாரி வேர்ப்பட்டை                                          1 பங்கு
6.  சங்கம் வேர்ப்பட்டை                                              1 பங்கு
7. கடுக்காய்                                                                     1 பங்கு
8. நெல்லிக்காய்                                                              1 பங்கு
9. தான்றிக்காய்                                                              1 பங்கு
10. இலவங்கப்பத்திரி                                                   1 பங்கு
11. சிறுநாகப்பூ                                                                1பங்கு
12. கண்டங்கத்திரி வேர்                                             1 பங்கு
13. கொடிவேலி வேர்ப்பட்டை                                  1 பங்கு
14. விலாமிச்சு வேர்                                                       1 பங்கு
15. தக்கோலம்                                                                 1 பங்கு
16. வால்மிளகு                                                                 1 பங்கு
17. வாய்விடங்கம்                                                          1 பங்கு
18. கொத்துமல்லி விதை                                             1 பங்கு
19. சீரகம்                                                                            1 பங்கு
20. கருஞ்சீரகம்                                                                1 பங்கு
21. குரோசாணி ஓமம்                                                   1 பங்கு
22. ஓமம்                                                                              1 பங்கு
23. சிற்றரத்தை                                                                1 பங்கு
24. சந்தனத்தூள்                                                              1 பங்கு
25. சிறுதேக்கு                                                                   1 பங்கு
26. திராட்சை                                                                     1 பங்கு
27. பேரீச்சங்காய்                                                             1 பங்கு
28. வெட்பாலையரிசி                                                     1 பங்கு
29. தாமரைக் கிழங்கு                                                    1 பங்கு
30. சாதிக்காய்                                                                   1 பங்கு
31. இலவங்கம்                                                                   1 பங்கு
32. சாதிப்பத்திரி                                                              1 பங்கு
33. கறிவேப்பிலை                                                            1 பங்கு
34. சுக்கு                                                                                1 பங்கு
35. மிளகு                                                                               1 பங்கு
36. திப்பிலி                                                                           1 பங்கு
37. இலவங்கப்பட்டை                                                     1 பங்கு
38. பால்                                                                                  160 பங்கு
39. சர்க்கரை                                                                       32 பங்கு
40. தேன்                                                                                 40 பங்கு
41. நெய்                                                                                 20 பங்கு
42. குங்குமப்பூ                                                                    1/8 பங்கு
43. கோரோசனை                                                             1/8 பங்கு
44. பச்சைக் கற்பூரம்                                                       1/8 பங்கு    


செய்முறை

            தூய்மை செய்து, சுத்தி செய்த எண் 37 வரையிலான சரக்குகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து , சலித்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பேற்றிச் சிறு தீயில் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் சலித்து வைத்த சரக்குகளை சிறிது சிறிதாகத் தூவி நன்றாகக் கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி முதலில் நெய்விட்டுக் கிண்டி பின் தேனும் சேர்த்துக் கிண்டி இளஞ்சூட்டில் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கற்பூரம் இவைகளைப் பொடித்துப்போட்டுக் கலந்து பத்திரப்படுத்தவும். 

அளவு

                5 கிராம் , காலை மாலை இருவேளை.

தீரும்நோய்கள்


1. மார்புநோய்  

2. மேகம் 

3. பறங்கிப்புண்  - கிரந்தி ; ஒரு வகைக் கிரந்தி நோய், இது பறங்கியர்களால் இங்கு பரவிய நோய் , இது கொறுக்கைப் புண் வகையைச் சார்ந்தது.   இது நோயுள்ளவருடன் உடலுறுவு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆண்குறியின் மொட்டு அல்லது சளிச் சவ்வில் பரு போன்று உருவாகி அது கடினமாகி, சீழ் பிடித்து சீழுடன் உடையும். காய்ச்சலடிக்கும், எடை குறையும் , நாக்கில் அழுக்குக் படிந்து , தலை வலியுடன் காணப்படும். கவனியா விடில் உடல் முழுவதும் புண் உருவாகி, எலும்புப் பொருத்துகளில் வலி உண்டாகும். மூக்கின் சளிச் சவ்வு பாதித்து, வாசனையுணர்வு போய்விடும். முற்றிய நிலையில் தொழுநோய் ஏற்பட்டு  அழுகத் தொடங்கும். இவை எளிதில் பரவுவதால் நோயாளியின் குடும்பத்திற்கும் குறிப்பாக அவர்தம் குழந்தைகளுக்கு ஆபத்தாக அமையலாம்.

4. கண்டமாலை  - தாய் தநதையரின் உடலின் பண்பு நலன் பாகுபாட்டினாலும், இரத்தக் கேட்டினாலும்,  கழுத்தைச் சுற்றியிருக்கும் கோளங்கள் வீங்கி வலித்துச் சீழ்கொண்டு உடைநது இரணமாகி, நெடு நாளைக்கும் ஆறாமலே கிளைத்துக் கொண்டு துன்புறுத்தும் ஒரு நோய். இது கழுத்தைச் சுற்றி மாலைபோல பிறப்பதால் இப்பெயர் பெற்றது. கண்டமாலை விரணம் போக்கி என்று செம்மந்தாரை மூலிகை இதன் புண் ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.

5. ஆண்குறிப்புற்று

6. பெண்குறிப்புற்று

7. மேகப்புண்

8. கிரந்தி

9. சூலை

10. வாயு

11. வளி (வாதம்) 

12. வெள்ளை

13. ஐயநோய்  -  96 . கபம்  - 96    


சித்தம்



திப்பிலி இரசாயணம்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

            காமம் அனுபவத்தற்குறிய இருவருள்ளும், " யாம் மிக்க காதலுடையோம் " எனக் கருதி " யாரினும் காதலம்" என்று சொன்னேன், அப்படி நினைக்காமல் " என்னால் காதலிக்கப்பட்ட பலருள்ளும் நின்கண் அதிகக் காதலுடையேம்" என்று கூறினேன் என்பதாகக் கருதி அவள் ஊடினாள்.

                                    - திருக்குறளும், திருக்குறளார் வீ.முனுசாமி ஐயா உரையும்.

                                    திப்பிலி இரசாயணம்

                                                    ( அகஸ்தியர் பரிபூரணம் - 400 )

பிப்பிலி
திப்பிலி


தேவையான பொருட்கள்

1. திப்பிலி                                                    10 பங்கு
2. மிளகு                                                        5 பங்கு
3. சுக்கு                                                         5 பங்கு
4. சீரகம்                                                       1 பங்கு
5.  கருஞ்சீரகம்                                          1 பங்கு
6. ஓமம்                                                         1 பங்கு
7. குரோசாணி ஓமம்                              1 பங்கு
8. சிற்றரத்தை                                           1 பங்கு
9. பேரரத்தை                                             1 பங்கு
10. கடுக்காய்த்தோல்                            1 பங்கு
11. நெல்லிக்காய்த் தோல்                    1 பங்கு
12. தான்றிக்காய்த்தோல்                     1 பங்கு
13. இலவங்கம்                                           1 பங்கு
14. இலவங்கப்பத்திரி                            1 பங்கு
15. தாளிச பத்திரி                                    1 பங்கு
16. கொடிவேலி வேர்ப்பட்டை            1 பங்கு
17. ஏலம்                                                        1 பங்கு
18. இலவங்கப்பட்டை                            1 பங்கு
19. சருக்கரை                                             35 கிராம்
20. தேன்                                                        தேவையான அளவு     


செய்முறை


            சுத்தி செய்யப்பட்ட சரக்குகளில் எண் 1 முதல் 18 வரை உள்ள சரக்குகளை, இளவறுப்பாக வறுத்து , சலித்து  சீனி சேர்த்துக் கலந்து, தேன் விட்டுப்பிசைந்து , பீங்கானில் பதப்படுத்தவும்.

அளவு 


            அரை முதல் ஒரு கிராம்

தீரும் நோய்கள்


I. நாட்பட்ட இருமல்

II. மந்தார காசம்  - மந்தார ( மேகம் சூழ்ந்த மழைவரும் ) காலத்தில் காணும் ஒருவகைக் காசநோய் ;  The type of Asthma which is accompained by such systemps as thirst, perspiration, vomittig and a rattlin sound in the throat. ; இவை கண்டத்திலிருந்து சளி அல்லது கோழையை வெளிப்படுத்தும் வரை பலமுறை இருமுதலால் உண்டாகும் இளைப்போடு கூடிய மேல்மூச்சு (தமரக சுவாசம்). 

 காசநோய் என்பது இரைப்பும், இருமலோடும் கூடிய  கடின மூச்சு. இது இருவகைப்படும் 1. ஈளை அல்லது கோழை காசம்இ 2, வரட்சி காசம். காசம் கன்மநோய் ( முற்பிறவிக் குற்ற) ஆயினும் வைத்திய நூற்படி உயிர்வளி (பிராணவாயு) கோளாறடைந்து, வாதபித்த கபத்தில் கலப்பதால், கோபம் அல்லது அச்சம், மலச்சிக்கல், மிகு ஊட்டம்,வாயு, குன்மம், சூலைப்பிடிப்பு, நெஞ்சு தளர்ச்சி, முதலிய குற்றங்கள் உண்டாவதாய் தெரிகிறது. இதுமட்டுமல்லாமலும் தொண்டையிலுண்டாகும் கரகரப்பினாலும், நரம்பிற்கு காணும் அதிர்ச்சியாலும் இந்நோய் உண்டாகலாம்.

            காசத்தின் வகைககள்

        1. சுவாச காசம்
        2. மந்தார காசம்
        3. இரத்த காசம்
        4. நீல காசம்  - Asthma vommiting blue bile
        5. சிலேட்டும காசம்
        6. பித்த காசம்
        7. வாத காசம்
        8. பால காசம்
        9. விரண காசம்
        10. கர்ப்ப காசம்
        11. கோழை அல்லது ஈளை காசம்
        12. தொந்த காசம்
        13. பக்க காசம் - Asthma affecting Intercoastal muscles
        14. பக்க மந்தார காசம்
        15. சுடர் காசம் 
        16. பீநச காசம்  - Asthma from spasmodic catarrah  - or coryza - Catarrahal Asthma.
        17.  நாத காசம்  - Sexual Asthma
        18. வலி காசம்  - spasmodic Asthma
        19. அடைப்புக் காசம் - stone Asthma
        20. குன்மகாசம்  - Asthma due to Dys.Peptic disorder.  
        காச நோயின் வகைகள்  ஆகும்.


IV. இளைப்பு

V,  கக்கல்

VI. ஐயம் 96  - கபம் 96

VII. இருமல்

கந்தக இரசாயணம்


                                    கந்தக இரசாயணம்

                                                            (புலிப்பாணி  - 500)

             இராசயணம் என்பது சரக்குகளைச் சூரணம் செய்து, சர்க்கரையும் நெய்யும் எடைப்படி சேர்த்து,  இளகலாகப் பிசைந்து எடுத்து வைத்துக்கொள்வதாகும். இவை 6 மாதங்கள் வன்மை உடையது.


Sulphar
கந்தகம்


தேவையான பொருட்கள்

1. சுக்கு                                                                    16.8 கிராம்

2. மிளகு                                                                  16.8 கிராம்

3. திப்பிலி                                                               16.8 கிராம்

4. கிராம்பு                                                              16.8 கிராம்

5. ஏலம்                                                                    16.8 கிராம்

6. இலவங்கப்பட்டை                                         16.8 கிராம்

7. இலவங்கப்பத்திரி                                         16.8 கிராம்

8. சாதிக்காய்                                                       16.8 கிராம்

9. தாளிசப் பத்திரி                                             16.8 கிராம்

10. சிறுநாகப்பூ                                                   16.8 கிராம்

11. விலாமிச்சம் வேர்                                        16.8 கிராம்

12.  பெருஞ்சீரகம்                                               16.8 கிராம்

13. குரோசாணி ஓமம்                                      16.8 கிராம்

14. சிற்றரத்தை                                                   16.8 கிராம்

15. சித்திர மூலம்                                                16.8 கிராம்   

16. திப்பிலி மூலம்                                              16.8 கிராம்

17. பூலாங்கிழங்கு                                             16.8 கிராம்

18. ஆனைத் திப்பிலி                                         16.8 கிராம்

19. கருஞ்சீரகம்                                                   16.8 கிராம்

20. கூவை நீர்                                                        16.8 கிராம்

21. திராட்சை                                                       16.8 கிராம்

22. சந்தனம்                                                          16.8 கிராம்

23. தக்கோலம்                                                     16.8 கிராம்

24. அதிமதுரம்                                                     16.8 கிராம்

25. கோரைக்கிழங்கு                                        16.8 கிராம்

26. சடாமாஞ்சில்                                                16.8 கிராம்

27. கொத்தமல்லி                                               16.8 கிராம்

28. பேரீச்சம் பழம்                                              16.8 கிராம்

29. நெல்லிக்காய்                                               16.8 கிராம்

30, கடுக்காய்                                                       16.8 கிராம்

31. தான்றிக்காய்                                               16.8 கிராம்

32. சாதிப்பத்திரி                                                16.8 கிராம்

33. வெட்டிவேர்                                                    16.8 கிராம்

34. குங்குமப் பூ                                                    16.8 கிராம்

35. நிலப்பனை                                                    16.8 கிராம்

36.  அமுக்கிறா                                                    16.8 கிராம்

37. நெருஞ்சி முள்                                               16.8 கிராம்

38. நீர்முள்ளி விதை                                          16.8 கிராம்

39. பூனைக்காலி விதை                                  16.8 கிராம்

40. ஓமம்                                                                 16.8 கிராம்

41. பரங்கிச்சக்கைத் தூள்                             700 கிராம்

42. நாட்டுச் சர்க்கரை                                      700 கிராம்

43. சீனி                                                                    350 கிராம்

44. கந்தகம்                                                            140 கிராம்

45, தண்ணீர்விட்டான்  கிழங்குச்சாறு     8.4 லிட்டர்   

46. நெய்                                                                 1.4 லிட்டர்       

47. தேன்                                                                1.4  லிட்டர்.  

செய்முறை

                தண்ணீர்விட்டான் கிழங்குச் சாற்றில் நாட்டுச் சருக்கரை, சீனி இவைகளை இட்டுக் கரைத்து, வடிகட்டி, அடுப்பேற்றி பாகு செய்து . அதில் சுத்தி செய்து பொடித்துச் சலித்த, எண் 1 முதல் 41 வரை உள்ள சரக்குகளைத் தூவி மேலும் கந்தகப் பொடியையும் தூவிக் கலந்து  நெய்விட்டு கிளறி , இறக்கி சிறிது ஆறியபின் தேன் கலந்து நெல்புடம் பத்துநாள் வைத்து எடுக்கவும்

               நெல் புடம் என்பது , நன்கு காயவைத்த புது நெல் குவியலின் நடுவே, செய்த மருந்தை வைத்து குறிப்பிட்ட நாள் கழித்து எடுப்பதாகும்.

அளவு                     

                 3 கிராம்.

தீரும் நோய்கள்

1.      வளி 80  - வாதம்  -   உந்தியின் கீழ் பிறந்து உடம்பு முழுவதும் பரவி, சுவாசம்,  பசி, தாகம், முதலியவைகளுக்கு ஆதாரமாக விருந்து கொண்டு பல விகாரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முப்பிணிகளில் ஒன்று. இது 80 வகைப்படும்.

2.     அழல்  - 40  (வெப்பு நோய்கள், வெப்பு -  சுரநோய்கள்)

3.  நீர்ச் சுருக்கு  -  6. 

4. கிரந்தி  

5. சூலை  - 18      - குன்மத்தினால் கீழ்வயிறு பக்கவிலாவில் வாயு தங்கிக் குத்தலையுண்டாகும் ஓர் நோய். இவ்வலி பொதுவாக  விலாப்பக்கம், முதுகு, இடுப்பு இவ்வடங்களிற் காணும். இந்நோய் உடம்பிற்கு ஒவ்வாத உணவுப் பொருட்களைத் தின்பதாலும் மற்றும் வேறுவகைக் காரணங்களினாலும் உடம்பில் வாயுகதித்து அதனால் ஏற்படும். அப்பொழுது உடம்பில் குத்தல், வலி, இசிவு முதலியனவுண்டாகி உள்ளுறுப்புளைத் தாக்குவதால் சூலத்தால் குத்துவதைப்போல் காணப்படும்.  இதனால் மூச்சுத் திணறும்.

6.  குன்மம்  

7. வெளுப்பு 

8. ஊதல் 

9. இருமல்

10. மேகம்

11. பசி மந்தம். முதலிய நோய்கள் தீரும்.

   

சித்தம்.