பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


ஆயா மரம்

 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்

            நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும், நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலமை. 

                                                                                                - திருக்குறள்.


Ayil maram
ஆயா மரம்

ஆயா மரத்தின் மேலும் படங்கள்

                ஆயாமரம் , இது ஆயில் மரம், ஆவி மரம், ஆயி மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது வறட்சியான, வெப்ப மண்டல காடுகளில் வளர்கிறது. இது மிக உயரமான மரமாக வளருகிறது.

                இம்மரம் முக்குற்றங்களையும் ,மூன்று நாளைக்கு ஒரு முறை வரும்  முறைக்காய்ச்சலையும் போக்குவதாயும் இருக்கிறது .

ஆயாமரப் பட்டை 

            இம்மரப்பட்டையை நிழலிலுலர்த்தி இடித்துத் தூள்செய்து, அதில் 35 கிராம் எடுத்து ஒரு மட்பாண்டத்திலிட்டு ஒரு படி நீர் விட்டு , ஒரு நாள் முழுதும் சூரியபுடம் ( சுத்தமான துணியால் பானையின் வாய்க்கு வேடுகட்டி வெயிலில் வைத்தல்) வைத்து , பின் 4 கிராம் திரிகடுகுத் தூள் சேர்த்து , கமலாக்கினியாக எரித்து 150மி,லியாகச் சுண்ட வைத்து , வடிகட்டிக் குடித்து  வர வாதாதி தோடங்கள் தம் இயல்பிலிருந்து மிகுந்திருந்தால் இயல்பாகும்.

            முக்குற்றங்களைப் போக்கும் தைலங்களிலும், வாத கோபங்களைப் போக்கும் தைலங்களிலும் இப்பட்டையைச் சேர்ப்பர். 

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி