பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


உகா மரம்

     ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

      ஒரு வெற்றியினைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி, நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் பெறும் வழி ஏது?  

                                                        - திருக்குறளும், கலைஞர் கருணாநிதி உரையும்.

                         உகா மரம் (Dillenia Indica alias D.speciosa )

            காமரம் , உவாமரம், சிறு களர்வா, கார்கொள் மரம், உகாத் தேக்கு என்னும் பெயர்களுமுண்டு. 

                    

உகா பூ, பழம்
உகா மரம்

            ம்மரம் 8 மீட்டர்  முதல் 10 மீட்டர் வரை வளரும்.பட்டை பக்கு விட்டு சொறசொறப்பாக இருக்கும், அதனாலயே ஆங்கிலத்தில் இதை Sand paper tree என்றழைப்பர். கிளைகள் மகுதியாகப் பரவி முனையில் தொங்கும். இலைகள் காம்புகளில் நேராகவும், மிருதுவாயும்இருபக்கமும் பளபளப்புடனும் இருக்கும். இலைகளில் நரம்பிருக்காது. பசுமையான சின்னப் பூக்கள் மிகுதியாயிருக்கும்.  காய் சிகப்பாயும், சாறு உள்ளதாகவும் இருக்கும். இது கடலோரத்திலும், ஆந்திரத்திலும் அதிகமாய் காணப்படுகிறது.

              லைகளை மூல முளை முதலானவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும்.கொழுந்து இலை உண்ணக் காரமாயிருக்கும். கீரையாக சமையலில் பயன்படுத்தலாம்.  இம்மரத்தின் இலைச் சாற்றால் கெந்தியும், ரசமும் செந்தூரமாகும்.    

                லை மற்றும் பட்டை குணங்கள்   சுவை  - துவர்ப்பு    ,     வீரியம் - வெப்பம்.   செய்கை - துவர்ப்பி. 

உகா பட்டை
உகா மரப்பட்டை

              து சாதாரணமாய் எங்கும் காணப்படாது. இதன் பட்டை சொற்ப சுரத்திற்குக் குடிநீராகவும், சூதகத் தடைக்கு மருந்தாகவும் பயன்படும்.

            வேர்ப்பட்டை உறைப்பாயிருக்கும், ஆகையாலிதை இடித்து வைத்துக் கட்ட வெந்து கொப்புளங்களை ஏற்படுத்தும்.

            கா மரத்தின் காய்கள் வாசனையாகவும், ஒருவித உறைப்பாயு மிருக்கும்.

            

            பழத்தின் பண்புகள் சுவை - இனிப்பு, வீரியம்  -  சீதம், செய்கை - மலமிளக்கி. பழத்தை பயன்படுத்தி வயிற்றுக் கிருமிகளை வெளியேற்றி , கசடுகளை நீக்கலாம் மேலும்  முத்திரத்தை அதிகமாய் வெளிப்படுத்தும்.

            பழத்தின் சாற்றைப் பிழிந்து சிறிது சருக்கரையும், தண்ணீரும் கலந்து சாப்பிட இருமலையும், சுரத்தையும் தணிக்கும். குளிர்ச்சி தரும். இச்சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் பேதியை உண்டாக்கும்.

            ளங்கொம்பு, வேர்க்கொம்பு இவைகளை பற்குச்சியாகப் பயன்படுத்தலாம்.

            ம்மரத்திலிருந்து எண்ணெய் எடுப்பதும் உண்டு.

            விதையைச் பொடித்து முத்தோட குற்றங்களுக்கும் குடுக்கலாம்.



நன்றி Raju saravanan  - Youtube.

சித்தம்.


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி