பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


சுக்கு

  சுக்கு   

      நல்ல பருமனான, சதைப்பற்று நிறைந்த இஞ்சியை நீர் அற காயவைக்கப் பட்டதே சுக்கு .  

         கிராமங்களில் ஒரு பொருளை மிக நன்றாய் வெயிலில் காய வைக்கணும் என்பதை சுக்காய் காயணும் என்பர் . அதிலிருந்து இஞ்சியிலிருந்து நீரை வரற்ற வேண்டியதின் இன்றியமையாமை உணரலாம்.

 மஞ்சள்,  சிற்றரத்தை போன்ற கிழங்கு வகையைச் சார்ந்தது.  சதைப்பற்றான, உலர்ந்தபின் மாவு போன்ற கொழுமையான சுக்கே மருத்துவத்திற்கு சிறந்தது.

சுக்கின் மருத்தவ தன்மைகள்

              சுக்கு வயிற்றில் சூட்டினை உருவாக்கி வாயுவினைக் கண்டிக்கும். வாயின் உமிழ் நீர் சுரத்தலை அதிகரிக்கும், வயிற்றில்  பசி மந்தத்தினைப் போக்கி பசி எடுக்கச் செய்யும்.


சுத்தி

          சுக்கின் மேல்தோல் அறவே கழிக்கப்பட வேண்டியது.  கடுக்காய் அகணி நஞ்சு, சுக்கு புறணி நஞ்சு எனும் சித்தர்கள் சொல்வாக்கின்படி கடுக்காயின் விதையையும், சுக்கின் மேற்றோலையும் அறவே நீக்க வேண்டும். சுக்கின் நார் போன்ற நரம்புகளைத் தவிர்த்தல் நலம்.

        சுத்தி எனப்படும் தூய்மைப்படுத்தும் செயல் மிகவும் முக்கியமா? எனக்கேட்டால், ஆம் மிகமிக முக்கியம். வெங்காயத்தினை தோலோடு சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு உண்டாக்கி துன்பம் குடுக்கும். அதுவே தோல் எடுத்து கழுவி,  சாறெடுத்து தேன்கலந்து சாப்பிட்டால் இணைவிழைச்சலின் (இணை கூடுதல், உடலுறவு) போது இழந்த சக்தியைக் கூட சமப்படுத்தி உற்சாகம் சேர்க்கும். சுத்தி என்பது 100% மிகச் சரியாக செய்ய வேண்டியதாகும்.

         சுக்கின் வேறு பெயர்கள்      ( மறைமொழிகள்) - வேர்க்கொம்பு, சுண்டி, நாகரம், அருக்கனி, அதகனி, ஆர்த்திரகம், சுக்கான்கல், தண்டு, கடுபத்திரம், உபருல்லம், செளவர்ணம், செளபன்னன், கொண்டி, நீர்சுண்டி, விடமுடிய அமிர்தம், மாஎஹளவிதம், நாகறாநாகரம், சுச்சி, அ,  அஞ்சத்தம், zingiber officinale என தமிழ் முதலான மொழிகளில் அதன் வேறு பெயர்கள்.

சுத்தி முறைகள்

1. சுக்கு மேல்தோலினைச் சீவி முழுக்க நீக்கி,  அதைக் கல்சுண்ணாம்பு நீரில் கரைத்து , ஒருஇரவு தெளிய விட்டு,  தெளிவு இறுத்த சுண்ண நீரில் ஒரு மணி நேரம்  சுக்கினை ஊறவைத்து பின் எடுத்து துடைத்து உலர்த்தி, இடித்துத் துணியிலூட்டி வைத்துக் கொள்ளவும்.

2.  சுக்கின் மேல்த்தோலை செதுக்கி அகற்றி,  அரைத்த உப்பு அல்லது சுண்ணாம்பை,  குறைந்த அளவு நீர் சேர்த்துக் குழைத்து சுக்கிற்கு தழும்பப் பூசிய பின் சிறிது  நேரம் நிழலில் உலர்த்தி, அதனை நெருப்பு ஆறவிட்ட அடுப்பு கங்குக்குள் புதைத்து வைத்து,   கருகும் வாசம் வரும் முன் எடுத்து,  பூசிய கவசம் நீக்கி,  இடித்துத் துணியிலூட்டி (வஸ்திரகாயம்) வைத்துக் கொள்ளவும். 

       சுக்கு இல்லாத பெரிய மருந்துகளே இல்லை எனலாம், எனவே மருந்துகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. மற்ற மூலப் பொருட்களில் குறிப்பிட முயல்வோம். 

தனித்த சுக்கின் மருத்துவ முறை.

          தாங்க முடியாத தலைவலி, கண் இமைகளின் வீக்கத்துடன் கூடிய தலைவலி, தலையில் நீரேற்றம் ஆகிய பிணிகளுக்கு தோல் எடுத்த சுக்கைப் பொடித்து , ஒரு பாத்திரத்திலிட்டு சிறிது  தண்ணீர் விட்டு அடுப்பேற்றி கொதிப்பித்து, சந்தனக் குழம்பு பதத்தில் வரும் வேளையில் இறக்கி, தாங்கக் கூடிய சூடு வரை அறவிட்டு அக்குழம்பை நெற்றியில் பத்துப் போட்டு (சாம்பிராணிப் புகையோ,  சிறிதளவில் நெருப்பனலோ காட்ட ) சிறிது நேரம் ஓய்வெடுக்க, பற்று காயும் நேரத்தில் நல்ல தூக்கம் வரும், தூங்கி எழுந்திரிக்க தலைவலி நீங்கி இருக்கும். 

முகப்பரு கரைய

  பருக்கள் கரைய

          துத்தி இலைகளை கழுவித் துடைத்து,  அரைத்து , பருக்களின் மேல் தடவ கரையும்.


துத்தி

துத்தி

        





 நாயருவிச் செடியின் வேர், ,  வேர் தலா  8 கிராம்  மேலும் அவிக்காத பச்சை நெல் வெறுகடி அளவு, வெள்ளைப் பூண்டு இரண்டு பல்,  மிளகு 2,  சிறு துண்டு வசம்பு, சின்ன வெங்காயம் 2 இவைகளை நன்கு சிதைத்து ஒரு சுத்தமான புது மண் பாண்டத்தில்  ஒரு படி விளக்கெண்ணை விட்டு, அதில் மேற்சொன்ன சிதைத்தவைகளைப் போட்டு அந்த மண்கலத்தின் வாயை சுத்தமான துணியால் மூடிக் கட்டி (வேடு கட்டுதல்) வெயிலில் வைத்து , இந்தப்படியே பத்து நாட்களுக்கு மேல் வைத்து எடுத்து சுத்தமான பாட்டிலில் வடித்து ஊற்றி,  பரு மருந்து என எழுதி ஒட்டவைக்கவும்.

           இந்த மருந்தை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் தடவி, பருவின் மேல் பற்றுப்போட. தீரும்.

நாயுருவி
நாயுருவி




           



இம்மருந்தால் , மூடுபரு, உதட்டுப்பரு, மூக்குப்பரு, கன்னப்பரு, காணாப்பரு முதலிய பருக்கள் தீரும்.

          தோலின் பிரச்சனைக்கு போடும் மருந்துகளை முதலில் சிறிதளவாக உடல் பாகத்தில் எங்கேனும் போட்டுப் பார்த்து, ஒவ்வாமை இருக்கின்றதா எனப் பார்த்த பின்புதான் போடவேண்டும். இம் மருந்தையும் அவ்வாறே போட வேண்டும். 

           சித்த மருத்துவத்தில் பத்தியம் இருந்தால்தான் முழு குணம் காணலாம். இம்மருந்துக்கு உப்பு புளி சேர்க்காமல் கடும் பத்தியம் இருக்க வேண்டும்.










                 வசம்பு


கிராம்பு -பயன்

            இலவங்க மரத்தின்( கருவாய் மரம்) பூவின் காம்பே கிராம்பு என்றழைக்கப் படுகிறது. இம்மரம் 16 முதல் 20 மீட்டர் உயரம் வளரக் கூடியது.கூட்டுப் பூக்கள் அமைப்பில் பூக்கிறது. இம்மரத்தின் இலையை இலவங்கப் பத்திரி ( பிரிஞ்சி இலை) எனவும், மரப்பட்டையை லவங்கப்பட்டை எனவும்  அழைக்கின்றனர். மிகுந்த வாசனையுள்ளதால் கந்தக்காம்பு (கந்தம் - வாசனை) என்பர்.

கிராம்பின் வேறு பெயர்கள்

         வசியம், வாடுகி, இலவங்கம், சதேகபுட்பம், சிரங்காரம்,மாதவி, இடங்கம், இடவகம், சித்தராகம், பாங்கம். 








தன்மைகளும் நன்மைகளும்

      மனதிற்கினிய மனமும், காரமும் உடைய கிராம்பை வாயில் அடக்கி இருந்தாலே, சிறு உற்சாகம் தொற்றிக்  கொள்ளும்.

      பித்தம் அதிகரித்ததால் வந்த மயக்கத்தைத் தீர்க்கும்.

       மலத்தினைக் கட்டும்.

       விந்து அழிதலைத் தடுத்து விந்து ஊறச் செய்யும்.

        வாந்தியாவதைத் தடுக்கும்

        இரத்தக் கடுப்பு தீரும்

        வயிற்றில்  சொற்பச் சூட்டை உருவாக்கி, அங்குள்ள வாயுவைக் கலைக்கச் செய்து வெளியேற்றும்.

        உமிழ்நீரைச் சுரக்கச் செய்து, செரிமானத்தை முறைப்படுத்தும்.


சுத்தி முறை

        கிராம்பின் மேல் பகுதியில்உள்ள மென்மையான மொட்டு போன்ற பகுதியை நீக்கவும். 

        

      பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது வயிற்று வலியால் அவதிப் படுவர். அவர்களுக்கு  கிராம்பினை சுத்தி செய்து பொடித்து, அதே எடை பனை வெல்லத்தைச் சேர்த்து மத்தித்து 5 கிராம் எடை அளவில் பீரியட்ஸ் காலங்களில் காலை, மாலை  3 நாட்கள் எடுத்துக்கொள்ள வயிற்றுவலி தீரும். சூதகக் கட்டு எனப்படும் மாதவிடாய் தடையும் நீங்குவதால் மக்கட் பேறு  உண்டாகும்.


        நாட்பட்ட பல்வலி இருந்தாலும் பச்சை இலவங்க இலை (கிடைக்காவிடில் பிரிஞ்சி இலை), கிராம்பு,  கொய்யா இலை இவைகளை மென்று சாற்றினை வலிக்கின்ற பற்களின் ஈறுகளில் படுமாறு அரைமணி நேரம் ஒரு மணிநேரம் வைத்து வர பல்வலி குணமாகும். 4 அல்லது 5 நாட்கள் செய்ய வேண்டும்.

        கிராம்பு இல்லாத கறிமசாலா இல்லை எனச் சொல்லலாம். தாம்பூலங்களிலும் இது பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி





ஆல்பகோடா பழம்

            ஆல்பகோறா , ஆல்பகோடா என மருவி அழைக்கப் பட்டாலும், ரஸ்யாவை பூர்வீகமாகக் கொண்ட பிளம்ஸ் இனத்தின் ஒரு வகையைச் சார்ந்த இப்பழம்  ஆல்புக்காரா என்று அழைக்கப்படுகிறது

தன்மைகளும் நன்மைகளும்.
            
              இப்பழத்தினை பிளம்ஸ் சாப்பிடுவது போல் மெதுவாக சுவைத்து கொட்டை தவிர்த்து மற்றவற்றை விழுங்க வேண்டும். 
             
               இப்பழம் வாதம், பித்தம் இரண்டையும் இளக்கி கழிவுகளின் வழியாக வெளியேற்றும். உடல் சூட்டினால் மலம் கருகி,   கட்டி இருப்பதை இளக்கி வெளிப்படுத்தும். பித்தம் அதிகமானதால் உண்டாகும் நீர்வேட்கை,  காய்ச்சல், தலைவலி, பித்தம் அதிகமாவதால் இதயத்துக்கு வரும் கேட்டினைத் தடுக்கிறது. அரிப்பு, தினவு, சிரங்கு முதலியன தீரும். 

  அத்திப்பழம்

          நாட்டு அத்திப்பழம் என்பதில் பழம் முழுதும் புழுவாய் இருக்கும்  என்பதை " அத்திப் பழத்தைப் புட்டுப் பார்த்தா அத்தனையும் சொத்தை " என்னும் பழமொழி விளக்கும்.அதைப் பயன்படுத்துவது  இல்லை.
             சீமை அத்திப்பழம் என்று சொல்லக் கூடிய விதையத்திப்பழமே வழக்கத்தில் உள்ளது. இது பதப்படுத்தப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. 
           
            இதன் வேறு பெயர்கள் அப்பீராப்பழம், ஆத்திகக்கனி .

தன்மையும் நன்மையும்
             இது  மலக்கட்டினை உடைக்கும்.தாதுக்களின் கொதிப்பை அடக்கி இரத்தம் பெருக்கி,சூட்டைக் குறைத்து, உடலுக்கு பலத்தை அளிக்கும் உன்னத பழம்.

           அத்திப்பழத்தை உலர்த்திப் பொடித்து  மிதசூடான பாலில் ஒரு ஸ்பூன் அளவு  சேர்த்து தேன் கலந்து குடிக்க இதயத்தின் நாடிநடை முறையாகி பலமாகும். இரத்தம் ஊறும், நோயெதிர்ப்பு சக்தி உண்டாகும். 

        1அல்லது 2 சீமை அத்திப்பழமும், ஒரு கை அளவு கொண்டைக் கடலையும்(சுண்டல்), சிறிது பனங் கற்கண்டும் இரவில்  ஊற வைத்து காலையில் பச்சையாக அல்லது அரைவேக்காடாக வேக வைத்து  உண்டு வர இரத்தம் ஊறும், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். குறிப்பாக காலையில் தேகப் பயிற்சி செய்பவர்கள் உண்டால் , தேகங் குளிர்ந்து நரம்புகள் பலமடையும், உடல் பொலிவுறும்.

     அத்திப்பழத்தைத் தேனில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள மலச்சிக்கல் தீரும்.

  கசகசா
           போஸ்தக்காயின் விதைகளே கசகசா எனப்படுகின்றன.மணல் போன்ற சிறியதாகவும் மங்கின வெள்ளை  நிறவிதைகளாக காணப்படுகிறது. 

தன்மைகளும் நன்மைகளும்
          
 இதை சமையலிலோ, மருந்தாகவோ செய்து உண்டால், உடலை உரமாக்கி ஆண்மையைப் பெருக்கி,  விந்துஊறச் செய்யும்.முகமும் உடலும் பொலிவும் கவர்ச்சியும் உண்டாகும்.  நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.      
     தூக்கமில்லாதவர்கள் இதை        முறையாகச் சாப்பிட தூக்கம் வரும்.
    
      சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல், சொட்டு மூத்திரம்  நீங்கும்.

        சாப்பிடும்போது , சிறிது மிளகு, தேங்காய் பத்தை, கசகசா, வறுத்த துவரம் பருப்பு , சிறிது உப்பு இவைகளை அரைத்த துவையலை சாப்பாட்டுடன் நெய்விட்டு சாப்பிட தாது பலப்படும்.ஆண்மை அதிகரிக்கும்.  

காட்டெருமைப் பால் = கூகைநீறு

          காட்டெருமைப்பால் என்று மறைமொழியில் அழைக்கப்படும் ஆரோரூட் மாவு, ஆரோரூட் செடியின் கிழங்கிலிருந்து தயாரிக்கப் படுகிறது.  செடியினத்தைச் சார்ந்த, இது ஒரு அடி உயரம் அளவில் வளரும். வாழைக்கன்றின் இலை போன்று இலையமைப்பு உள்ளது. 
         இதன் கிழங்குகள் கொத்தாக,  அமைப்பில் மஞ்சட்கிழங்கு போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும் 

காட்டெருமைப் பால்

















வேறு பெயர்கள்
           கூகைநீறு கிழங்கு, மாதவட்சரி, கமுகு, அங்குரோசனம், காட்டெருமைப்பால், கிழங்குத் தண்ணீர், சிரம், சுப்பிரமதுவா,வெண்ணீறு.

       இதனை பிடிகருணைக் கிழங்கு போன்று தோலெடுத்து விட்டு முறைப்படி காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வர உடல் சூட்டினை அடக்கி விந்தினை ஊறச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.








கிழங்கிலிருந்து மாவெடுக்கும் முறை

          கூகைநீறுக் கிழங்குகளைத் தோல் எடுத்து, மைய அரைத்து பெரிய கண்ணுள்ள துணியில் தளர முடிந்து ஒரு கலத்தில் தண்ணீர் விட்டு மெதுவாகப் பிசைந்து வர மெதுவாக மாவு இறங்கும், அதை அசையாமல் ஒரு இடத்தில் வைத்துவிட்டு  இரண்டு மூணு மணி நேரம் கழித்து தண்ணீரை மட்டும் வடித்து விட்டு, அந்த மாவுடன் மீண்டும் வேறு புது தண்ணீர் சேர்த்து  கல்க்கி தெளிவிறுக்க வேண்டும் இவ்வாறு மொத்தம் ஏழுமுறை செய்து, அதை வேடுகட்டி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஆரோரூட் மாவு எனப்படும் காட்டெருமைப்பால் ஆகும்.
          முக்கால் லிட்டர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் ஆரோரூட் மாவு போட்டு கட்டி இல்லாமல் கலக்கி அடுப்பில் வைத்து சிறுதீயாக எரிக்க நீர் சுண்டி கஞ்சி போல ஆகும். அதனுடன் பால் சர்க்கரை  சேர்த்து சாப்பிட குழந்தைகளுக்கு கூட எளிதில் செரிமானம் ஆகும். எனவே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு,  வயிற்று வலி போன்றவை குணமானவுடன் தரும் முதல் உணவாக இது இருக்கும். சோர்ந்து இருக்கும் குழந்தைகள் சக்தி பெறுவார்கள். மூத்திரத்தை அதிகமாகப் பிரித்து உடல் சூட்டினையும்,  நீரேற்றத்தையும் குறைக்கும். குழந்தைகள், பெரியவர்கள் வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். வயிற்றுப் புண்ணால் வருகிற டைபாயிட் காய்ச்சலுக்கு பத்தியக் கஞ்சியாக இதைக் குடுக்கிறார்கள். இக்கஞ்சி சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும்.

அமுக்குறா கிழங்கு

     5 முதல் 6 அடி வரை வளருகிற குருஞ்செடி, இதன் இலைகள் மாற்று அடுக்கில் அமைந்துள்ளன, சிறு சிறு கிளைகளையும் உடையது.



      
        இதன் இலையை மைய அரைத்துப் பத்துப்போட ராஜபிளவை, எரிகரப்பான், மேகப்புண்கள் ஆறும்.

இதன் முக்கிய பயனுடைய உறுப்பு அதன் கிழங்கே. நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது.



 

அமுக்குராவின் வேறு பெயர்கள்

       அசுவகந்தி, அசுவசகெந்தி, அமுக்கிறா, அமுக்கரா, அகவு, அகன், அசைப்பு, அசைவு, அடித்திகம், தாணுபரி, துற்கி, புருதிநாயகன், பேய்வெட்டி, மதலிங்கம், முத்தாதி, வல்லியை, அமுக்கினாக் கிழங்கு, கோலகருடவேர்(கருடக்கிழங்கு வேறு), பரிகந்தி.

     கிழங்கு சுத்தி

      அமுக்கிறாக் கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு மண்கலத்திலேயோ அல்லது பாத்திரத்திலோ பசும்பாலும் அதற்கு சம அளவு தண்ணீரும் எடுத்துக் கொண்டு அக்கலத்தின் வாயிற்கு சுத்தமான துணியால் வேடுகட்டி,  அதன் மேல் வெட்டிய துண்டு கிழங்குகளை வைத்து மூடியினால் மூடி , அதை அடுப்பிலேற்றி புட்டவியல் முறையில் அவித்து இறக்கி, வெயிலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின் இடித்து சலித்து எடுத்துக் கொள்ளலாம்.
              
அமுக்கராச் சூரணம்

1. கிராம்பு             -1. பங்கு
2. சிறுநாகப்பூ     -2  பங்கு
3. ஏலம்                   -4. பங்கு
4. மிளகு                 -8. பங்கு
5. திப்பிலி             -16 பங்கு
6. சுக்கு                   -32 பங்கு
7. அமுக்குரா         -64 பங்கு
8. சர்க்கரை            -128 பங்கு.

       சர்க்கரை நீங்கலாக மற்றவைகளை முறைப்படித் தூய்மை செய்து, தனித்தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து  பிறகு சர்க்கரை சேர்த்து பத்திரப்படுத்தவும்

மருந்துண்ணும் அளவு

500 - 1000 மி.கிராம்


துணை மருந்து
        தேன், வெந்நீர், காய்ந்து ஆறிய நீர்.

தீரும் நோய்கள்

      எட்டு வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்து வாய்வு, மேகவெட்டை, வெள்ளை, வீக்கம், வெளுப்பு, இரைப்பு, இளைப்பு சயம், வறட்சி, கைகால் எரிவு, ஐயம் (கபம் ) முதலிய பிணிகள் தீரும். உடல் பருக்கும்.

 சுத்தி முறைகளுக்கு தனியாக போஸ்ட் போடப்பட்டு உள்ளது.அதில் பார்க்கவும். உங்கள் கருத்துகள்  இந்த blogஐ செம்மையுறச் செய்யும் சிறிதும் தயக்கமன்றி கருத்திடுங்கள்.
 
மூலிகைப் படங்கள்

சிறுநாகப்பூ

திப்பிலி
சுக்கு


அமுக்குராக் கிழங்கு, நீர் முள்ளி வித்து,குருந்தொட்டி வேர், இவைகளை ஓர் நிறையாய் பொடித்து திரிகடி அளவு (கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல்மூன்றினால் கிள்ளி எடுக்கும் அளவு)  பசுவின் வெண்ணையில் மத்தித்து உண்டு வர தாது விருத்தியாகும்.

😍 
சித்தாமுட்டி@குருந்தொட்டி


நீர்முள்ளி

அமுக்குரா ரசாயனம்
           (Special)
      பரங்கிப்பட்டை      - 10 பலம்
அமுக்குராக்கிழங்கு  - 10 பலம்
நிலப்பனைக்கிழங்கு-5.   பலம்
தண்ணீர்விட்டான் 
                     கிழங்கு       - 2.   பலம்
நன்னாரி வேர்
சங்கம் வேர்
சுக்கு
மிளகு
திப்பிலி
கடுக்காய்
தான்றிக்காய்
நெல்லிமுள்ளி
லவங்கப்பட்டை
லவங்கப்பத்திரி
சிறுநாகப்பூ
வாய்விளங்கம்
மல்லி
கருஞ்சீரகம்
நற்சீரகம்
ஓமம்
குறோசாணி ஓமம்
அரத்தை
சந்தனம்
சிறுதேக்கு
கண்டங்கத்திரி வேர்
கொடிவேலி/சித்தர்மூலம் வேர்
விலாமிச்சுவேர்
தக்கோலம்
வால்மிளகு
முந்திரிகை
பேரீச்சு
வெட்பாலையரிசி
தாமரைக்கிழங்கு
சாதிக்காய்
கிராம்புபத்திரி/லவங்கப்பத்திரி
கரிவேப்பிலை
       மேலே எடை குறிப்பிடாத சரக்குகள் வகைக்கு ஒரு பலம்(35கிராம்) பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குங்குமப்பூ
கோரோசனை
பச்சைக்கற்பூரம்
வகைக்கு ஒரு கழஞ்சு (4கிராம்) இவைகளை வெயிலில் உலர்த்தி பொடிசெய்து, ஒரு பானையில் ஒரு படி பாலும், ஒரு படி தண்ணீரும் கலந்து அப்பானை/பாத்திரத்தின் வாயில் வேடுகட்டி(துணி), அதன் மேல் பொடித்த அனைத்து மருந்துச் சரக்குகளை வைத்து சட்டியால் மூடி பால்வற்றும் வரை எரித்து மருந்துச் சரக்குகளை எடுத்து உலர்த்தி பின் பசும்பால் 4 படி எடுத்து அதில் 4சேர் (1120 கிராம்) சீனிச் சர்க்கரை போட்டுப் பாகு செய்து, பின் நெய் அரைப்படி விட்டு கிண்டி ஒன்றாய் லேகித்த பின்பு கீழிறக்கி பொடித்த சூரணங்களை தூவிக்கிண்டி ஆறின பின்பு தேன்- ஒரு  படி விட்டு பிசைந்து கொண்டு கொட்டைப்பாக்கு அளவுக்கு இருவேளை கொள்ள, ஆண்மை வலுப்படும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . கிரந்திச் சூலை கண்டமாலை, வாயு வாதம், மேக நோய்கள், இலிங்கப்புற்று, கப நோய்கள் தீரும்.










      

வாத நாராயண மரம்

 வேறு பெயர்கள்

           வாத மடக்கி, ஆதி நாராயணன், வாதரசு, வாதக்காட்சி, வாதரக்காச்சி,  Delonix elata  என வேறு பெயர்கள்

தோற்றம்

           இந்த மரம் மிகப்பெரிய தோற்றத்தையும் அடர்ந்த நிழல் தருவதாயும் , மர நிழலில் சிறு செடிகள் கூட வளர முடியாத வண்ணம் இருக்கும்.


    இதன் இலைகள், சிறிய,  இறகு போன்ற கூட்டு இலைகளைக் கொண்டதாயிருக்கும். வெண்மை, மஞ்சள் நிற பூக்களைக் கொண்டதாயிருக்கும். இதன் கிளைகள் எளிதில் வளைந்து ஒடியக் கூடியாதாயிருக்கும்.









குணநலன்கள்

            இது உற்சாகம் அளிக்கும் தன்மை உடையது மேலும் பித்த நீரைப் பெருக்கி உடலை  சூடாக வைத்திருக்கும்.

ரத்தக்கட்டு, கைகால் வலி முதலியவைக்கு  வாதநாராயணன் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளிக்க உடம்பு வலி தீரும். 

          வாதநாராயணன்இலையை, முடக்கு அறுத்தான் என்னும் முடக்கத்தான் கீரையுடன் அரைத்து தோசை மாவு போன்ற உணவுப் பொருட்களில் கலந்தும், கீரைப் பொரியல் போன்று செய்தும் உண்டு வந்தால், மலம் இரண்டொரு முறை கழிந்து குத்தல் குடைச்சல், வாதத்தினால் வந்த வலி முதலியன நீக்கும்.