பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


குண்டலாதி இளகம்.

 ஆக்கம் கருதி முதலிலக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

            பின்பு வரக் கூடிய ஊதியத்தினை கருதி முன்பெற்றுள்ள முதலையும் இழப்பதற்கு காரணமான தொழிலை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.

                    - திருக்குறளும், திருக்குறளார் வீ, முனுசாமி ஐயா உரையும். 


                        குண்டலாதி இளகம்  

       ( அனுபவ வைத்திய முறை,  Government Oriental Library , Madras)          

இசங்கு
சங்கஞ் செடி

கூறுங் குண்டலி வேரதுதான் 

        கொள்ளும் ஐம்பது பலத்துடனே

பாறுங் கண்டங்கத்திரி வேர்

        பண்பா யிருபத் தைந்து பல

மீறுதனையே ஒன்றாக

        விரும்பி யிடித்துத் தூள்படுத்தி

யூறும் பத்து மரக்கால் நீ

        ருடனே தாழி தனிற்புகட்டே                    1

(குண்டலி  = இசங்கு; சங்கஞ் செடி , 1 பலம் = 35 கிராம், 1 மரக்கால் = 5.36 லி, )


புகட்டி யிதனை யடுப்பில் வைத்துப்

        பொருந்த எரித்து வற்றியபின்

அகட்டும் சிறுதேக் கது கொள்ளும்

        நன்றாய் மூன்று பலத்துடனே

திகட்டும் சித்திர மூலமுடன்

        சிறந்த திப்பிலி யதன் மூலம்

வகைக்குப் பலந்தா னரையாக

        வருந்திக் கூட்டுக் திறமுறவே            2


உறவே நல்ல தசமூல

        மோது மாறு பலத்தடனே

திறவா மிக்கச் செவ்வீயந்

        திருந்தும் பன்னி ரண்டுபல

மறைவா யிதனை யொன்றாக

        வருந்தி இடித்துத் தூள் பண்ணி

யிறலு மஞ்ச மரக்கால்தா

        னடைவாய் விட்டுச்  காய்ச்சிடுமே                3

( தச மூலம் =  பத்து வகை மருந்து வேர்கள் அவை , வில்வம் பெருங்குமிழ், ஆனை நெருஞ்சில், முன்னை, சிறுவழுதுணை, சிறு மல்லிகை, கத்திரி, பெருவாகை, பாதிரி, தழுதாழை. இறல் = கேடு , அழிப்பு )


காய்ச்சி நாலுபடியாகக்

        கியாழமதை வடித்துக் கொண்டு

கூச்ச மறவே முன்காயு

        குடிநீர் குறுணி யானதின்பின்

வாய்ச்ச கற்கம் பிழிந்தெறிந்து

        வடிகொண்டதனை யிதனில் விட்டு

யோச்சம் பெரிய பழவெல்ல

        முடனே ஐம்பது பலங்கரையே                    4

( 1 குருணி= 10.72 லிட்டர் )


கரைத்து வதனில் நறுநெய்யுங்

        கருதி யொருபடி தான்விட்டுத்

திருத்த மாக நீர்வற்றிச்

        செறியக் காய்ந்து குழம்பானால்

வருத்த மறவே கடைமருந்தை

        வறுக்கக் கேளுஞ் செவ்வீயம்

பருத்த சுக்குச் சிறு தேக்கும்

        பகரும் கருஞ்சீரகம் திப்பிலியே             5


திப்பிலி மூல முடனல்ல

    சிறந்த கடுகுரோகணியு

முற்படு மாறு மருந்து

        மூன்று மூன்று பலம் வகைக்கே

பிற்படு கொத்த மல்லியொடு

        பெருங்கி ராம்பு சதகுப்பை

நற்படு மாஞ்சி மஞ்சிட்டி

        நல்ல சித்திர மூலமெ                6

(முடனல்ல= முடன்+ நல்ல , மாஞ்சி= சடாமாஞ்சி)


மூல மான மர மஞ்சள்

        மொழியுங் கரிய சீரகமுஞ்

சால வகைக்குப் பலமொன்றாய்

        சரியாய் நிறுத்துத் தூள்படுத்தி

ஞால முறநாள் தெள்ளியிதை

        நற்றும் லேகிய மேற்றூற்றிக்

கோலத் தேனு தொருபடிதான்

        கூட விட்டுக் கிண்டிமே                        7


கிண்டும் நல்ல பதமாகக்

        கிலேச மகலும் நற்றினத்தில்

உண்டு பண்ணி யைங்கரற்கு

        வோதுந் தீப தூபமிட்டுத் 

தொண்டு கடுநற் கலசமதில்

        துலங்க வழித்து வைத்திதனைப்

பண்டு நல்ல தினம் பார்த்துப்

        பருகுங் கொட்டைப் பாக்களவே                8


பாக்கி னளவு அந்தி சந்தி

        பண்பா யிருபது நாட்கொண்டு

போக்கு கசப்புப் புளிப்பதனைப்

        பொருந்த விட்டு மருந்தருந்தத்

தாக்குஞ் சோகை காமாலை

        தணியும் பாண்டு ஈளையுடன்

தோக்கும் பித்த காசமொடு

        தொலையும் வரட்சி குரலெரிவே        9


அரிய சயமோடு  துளைமாந்தை

        யமுத்தும் நெஞ்சில் நோவுளது

முசிய வாந்தி  யரூசி விக்கல்

        லோடு மிளைப்பும் வாந்தி பித்தங்

கரிய வேர்வை யத்தி சுரங்

        காயு முள்ளெரி வாளதுவுஞ்

சொரியும் நெஞ்சால் விழுஞ்சலமுந்

        தொலையு மிரத்த பித்தமுமே                10.


பித்த மொடு ரத்த சயம்

        பேசுந் தொண்டைக் கட்டுளதும்

மற்றும் சிலேற்பன ரோகமெலா

        மறுங் குண்ட லாதியென்னு

முத்த லேகியந் தனைக்கொள்ள

        ஒழியும் மெனவே முன்னவர்கள்

சற்றும் மனதிற் கபட மின்றித்

        தமிழா லுரைத்தார் மிகத் தெரிந்தே                    11


சித்தம்.

            

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி