பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 201 - 250




அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 001 -  100

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 101 -  200


                  201 - 250

அகஸ்தியர் புலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல்

 

உண்டான சேதியடா இன்ன மொன்று

      வுரைக்கிறேன் புலத்தியனே யுண்மையாக

அண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக்காண

       ஆராலுங் கூடுமடா வப்பாகேளு

பண்டையிலே விட்டகுறைக்காரனென்றால்

      பரமகுரு பதம் போற்றிப் பணிகுவான்கேள்

கண்டனடா குருபத்தை யென்று சொல்வான்

       காசினியில் வாய்ப்பிலுக்காய்க் கருதுவானே

 

வானென்ற மதியமுத மறியா மட்டை

        வாயூற லமுதமென்று கொள்ளு மாண்பர்

தேனென்ற பூரணத்தைச் சீசீ யென்று

       தெருதோறுந் தானலைந்று ( ?) திருடு மாண்பர்

நானென்ற ஆணவங்கள் மெத்தப் பேசி

        நாள்தோறுஞ் சீரணித்துப் போவார் பாரே - - 202

 

பாரப்பா ஆதியிலே பாடினதோர் காண்டம்

       பன்னிரண்டு ஆயிரமாய்ப் பாடிக் கொண்டு

வீரப்பா செய்யாம லமர்ந்து நின்று

      விளையாடும் வேளையிலே வேதரிஷி வந்து

நேரப்பா நின்ற வருந்தொழுது நின்று

      நேசமுடன் பணிந்து மிக நின்றானப்போ

ஆரப்பா என்று மிகக் கேட்டனையா

       அப்போது வேதரிஷி யென்றான் தானே    -  -203

 

வேதரிஷி வாவெனவே அழைத்துக்கொண்டு

       வேதாந்த மூலமது வுபதேசித்து

போதமுள்ள பூரணமு மவனுக்கீந்து

      புகழுடைய நாதரிஷி யென்று சொல்லி

நீதமுள்ள புத்தகத்தை யவனுக் கீந்து

      நிலைத்து மிகப் பன்னிரண்டுங் காத்தாயானால்

பேதமில்லா நாதரிஷி நீயே யாமே

      பெருமையுள்ள இந்நூலைப்பதனம் பண்ணே - - 204

 

பண்ணிய தோரிந் நூலின் பயனைக் கேளு

       பார் மீதி லுரையாதே மகிழ்ந்திடாதே

நன்மையுட னிந் நூலைப் பதனம்பண்ணி

       நானென்ற ஆணவத்தை அகற்றி மைந்தா

தன்மையுடன் பூரணத்தைப் பணிந்து கொண்டு

      தவிராமல் சிவயோகந் தானே செய்து

சென்னிதனில் தீயை வைத்து தீப மேத்தி

     தெவிட்டாத பூரணமே தினமு நோக்கே - -  205

 

நோக்கென்ற பூரணத்தை நோக்கிக் கொண்டு

       நொடி யென்ற வொரு நொடியிற்குள்ளே மைந்தா

வாக்கென்ற பூரணத்தை வாசியேறி

       வந்தனடா மூலகிரி மலையிற்றானும்

பூக்கின்ற பூஞ்சோலை வனத்திற்றானும்

      போமுள்ள ரிஷிகளிடம் வந்தேனையா

தாக்கென்ற தபோதனதைக் கண்டு கொண்டு

    தயவாக சுவேதகிரிக் கேகினேனே.          206

 

ஆமப்பா சவேதகிரி தன்னில் வாழும்

        அரகரா சித்தர்கள் தானனந்தங் கோடி

காமப்பால் கானற்பா லிரண்டுங் கொண்டு

         கருணையுடன் தவசிருப்பா ரனந்தங் கோடி

நாமப்பா அவர்களிடம் சென்றே னையா

      நன்மையுடன் நாதகிரி எங்கே யென்றேன்

தாமப்பா சகலோருங்கூடவந்து

      தன்மையுள்ள நாதகிரி அதோ வென்றாரே -   -  207

 

என்றவரும் வேதகிரிக் கேகினார்கள்

      என்மகனே நாதகிரிக் கேகினே னான்

குன்றாத ரிஷிகோடி அதனில் வாழ்வார்

      குறையாத வாயு வைத்தான் பக்ஷிப்பார்கள்

நன்றான தபசதிலே மிச்ச மிச்சம்

       நான் சென்றே னவர்களிட மைந்தா கேளு

பண்பான என்குருவே யென்றுசொல்லி பணிந்தார்கள்

       அனாத கிரியெங்கே யென்றேனே  -   -  208

 

எங்கென்று அனாதகிரி முடிவிற்சென்று

     இனிபமுள்ள ரிஷிகளிடஞ் சென்றேனையா

அங்கென்று நற்கனியின் பாசத்தை யுண்டே

     னதிலிருந்து அகில கிரிச் சருவிற் சென்று

நங்கென்று அகிலகிரி முடிவிற் சென்றே

        னாதாக்கள் வெகுகோடி யதனில் வாழ்வார்

வங்கென்று அவர்களிடஞ் சென்றேனையா

      வருந்தியவர் கனியீந்தார் வாங்கினேனே -  -209

 

வாங்கியொரு நொடிக்குள்ளே சென்றேனையா

         வரிசையுள்ள சோதிகிரி முடிவிற் சென்றேன்

தீங்கிலா குருதேசி சித்தர் கோடி

        தீர்க்கமுள்ள மவுனமதா யிருப்பாரையா

பாங்கு பெற அவர்களிடஞ் சென்றேனப் போ

      பரமான  அகத்தீசா வா வென்றார்கள்

மாங்கனியி னமுதரச மீந்தாரையா

     வரிசையுடன் போதகிரி எங் கென்றேனே  -  -210

 

எங்கென்று கேட்டவுடன் மவுனயோகி

                யெல்லோரு மடிதொழுது ஏது சொன்னார்

அங்கென்று போதகிரி நாங்கள் காணோம்

அதனிலே வாசமதா யதில் வளர்ந்தோம்

நங்கென்று போதகிரிக் கேகவென்றால்

                நாதமென்ற கெவுனரசக் குளிகை வேணஉம்

சிங்கென்ற என் குருவே கும்ப மூர்த்தி

                சீக்கிரத்தில் நீ வரவே தொழுதோம் பாரே   211.

 

பாரப்பா போதகிரிக் கேக வென்றால்

                பஞ்சகண தீட்சையினால் குளிகை செய்து

நேரப்பா நின்றதொரு சாரணைகள் தீர்ந்து

                நிமிஷத்தில் கெவுன ரசக் குளிகை செய்வாய்

வீரப்பா செய்யாமல் ரசத்தை வாங்கி

                விசையான பஞ்சகண தீட்சை செய்து

நீரப்பா நொடிக்கு முன்னே திரண்டுப் போக்க         

           நிலைபெருகக் கெவுனமணிக் குளிகையாச்சே  212.

 

குளிகைதனை யனைவோரும் வாயிற் போட்டு

       கும்பித்துப் பாய்ந்தார்கள் போதகிரி தன்னில்

பலிதமுள்ள போதகிரியென்ன சொல்வேன்

      பாய்ந்ததொரு சித்தரெல்லாம் போதமயமானார்

அழியாத போத மயமாகி நின்று

          அனைவரு மிலிங்க மயமாகிப்போனார்

நெளியாத போதையிலே நிலை யிநின்று

         நேரான பொதிகை கிரிப்போரனேனே    -- 213.

 

பேரான போதகிரி யென்றும்பேரு

      பெருமையுள்ள பொதிகைகிரி என்றும் பெயர்

வாரான சதுரகிரி யென்றும் பேரு

      வளமான  சூரிய கிரியென்றும்பேரு

கூரான மயேந்திரகிரி யென்றும்பேரு

       குருவான கும்பகிரி என்றும்பேரு

பாரான பரமகிரி யென்றும்பேரு

       பரம கயிலாசமென்று பேருமாச்சே -  - - 214

 

ஆச்சப்பா லிங்க மயமாகிப் போன

       அனைவருக்கும் பூசை நிவேத்தியங்கள் செய்து

மாச்ச லொன்றுஞ் செய்யாமல் அறிவிற் கூடி

        மகத்தான கும்பகத்தில் மருவிச் சேர்த்து

மூச்சது தானடங்கி நின்ற பொதிகை தன்னில்

         முக்கோடி கால மட்டும் வளர்ந்தேனப்பா

காட்சியில்லாக் காட்சிகளு மதிலே கண்டேன்

        கண்டதொரு காட்சியிலே முழித்தேன் பாரே – 215.

 

சித்தர்கள்குலமும் அவர்கள்பாடிய நூல்களும்

 

முழித்து மிகப் பார்த்ததொரு ஞானதிஷ்டி

      முனையான சுழிமுனையில் கண்ட காட்சி

அழித்து மிகப் பார்த்ததினால் வேதமுனி செய்த

       அத்தியத்தால் நீலகிரி தன்னில் வந்து

பழித்தனமாய் நின்றகிரி தன்னைக் கண்டேன்

      பரமான புலத்தியனே கேளு கேளு

கழித்த உரு பன்னிரண்டாயிரத்தைப் பார்த்து

       கருவெடுத்து வெகுநூல்கள் கட்டினானே   -  216.

 

கட்டினது மட்டுமல்லாமல் ஜால வித்தை

      கருவெடுத்து செகத்தோர்க்குக் காட்டினான் பார்

திட்டமுடன் கருவூரான் சுனக்குச் சொல்லி

       திரமாகக் குடிமகன்தான் செய்த போக்கு

மட்டிமை களில்லாத சந்த பேதம்

      வரிசையுடன் சிலநூல்கள் பாடினான் பார்

கட்டினான் கொங்கணவன் பளிங்க சாதி

      காவியமாய் வெகுநூல் கருதினானே  -  -  217.

 

கருதினான் சட்டைமுனி யனந்தங் கோடி

     கருவாக அவன் குலந்தான் சேணியனுயாகும்

உருசியுள்ள போகனுமே குசவ னாகும்

      ஓகோகோ அவன் பாடலிலக்கோ வில்லை

பருதியுள்ள சந்திரனோ ரெட்டியாமே

      பக்குவமாய் முன்பின்னாய்ப் பாடிப் போட்டான்

அருமையுள்ள மச்சமுனி யென்ன சொல்வேன்

      அவன் குலந்தான் செம்படவனா குந்தானே  - - 218

 

தானான மச்சமுனி யனந்தங் கோடி

      தவிராத வெகுநூல்கள்பாடிப் போட்டான்

மானான கமலமுனிகன் னானாகு

      மாறாட்டமாகவே பாடிப் போட்டான்

ஊனான இடைக்காட்ட னிடைய னாகும்

       உண்மை யில்லாக் கல்விகளை யுரைத்தானப்பா

தேனான நந்தியுமோ பிரம குலமப்பா

       திறமாக வெகு மறையாய்ப்பாடினானே     219

 

                 நாதரிஷியை யழைத்தல்

 

பாடினார் நவசித்தரனந்தங் கோடி

       பக்குவமாய் நாதரிஷி சொன்னதாலே

நாடியே நாதரிஷி தன்னைக் கூவி

      நான் கொடுத்த காண்டமதை வெளியிற்போட்டு

பேடியென்ன காரியத்தைச் செய்தா யென்று

      பெருமையுட னூல்வாங்கி குகைக்குள் வைத்து

சாடியே அனைவோர்க்குஞ் சாப மீந்தேன்

         சமுசயங்கள் தீராமல் சபித்தேன் பாரே  -  -220

 

பாரப்பா நவநாத சித்தர் பதினெட்டாகி

      பாருலகில் பதினெட்டுச் சித்தரானார்

ஆரப்பா விவர் பெருமை யறிகுவார்க

      ளறிந்து மிகத் தெரிந்தவன்றா னீயே யாகு

நேரப்பா பாடினதோர்பன்னிரண்டு

        நிலைத்ததொரு ஆயிரத்தைக் குறுக்கி மைந்தா

சீரப்பா தப்பாமல் பன்னிரண்டு நூறுந்

      திறமாகப் பாடியதோ ரிந்நூல பாரே  -  -221.

 

இந்நூல்தா னாயிரத்து இருநூறுக்குள்

       ஏகாந்தமான கருவெல்லாம் பாடி

முன்சொன்ன பன்னிரண்டு ஆயிரத்தை

        மூர்க்கமுள்ள புத்தகமாய்ச் சேர்த்துக்கட்டி

வன்னமுள்ள பலவகையாய்ச்சேர்த்து  நல்ல

      வாரிதியாங் காவேரி தன்னிலேதான்

தன்மையுள்ள சங்கமென்ற பலகையாக

      சமுத்திரம் போய் சேரென்று சபித்திட்டேனே – 222.

 

             நாதரிஷியைச்சபித்தல்

 

செபித்திட்ட நாதரிஷிதனை யழைத்து

      சீக்கிரத்தில் சாபமிது பிடி யென்றேதான்

குவித்தீட்டூ நாதரிஷி யென்ன சொல்வான்

        குருவான வென்குருவே தீர்வ தெப்போ

சபித்திட்டு வெகுநாள்தான்சென்ற பின்பு

     சங்கமென்ற பலகையிடஞ் சேர்வாய் நீயும்

வகுத்திட்டு சாபமது ஈந்தேனப்போ

       வலுமை மிகக்கொண்டவன மறந்திட்டானே - 223

 

                        நாதரிஷி வாலாறு

 

மறந்து மிக வெகுகோடி காலந்தானும்

     மகத்தான வேதரிஷி யலைந்தானப்பா

நிறைந்து மிகக் கைலகிரி வடக்குச் சென்று

     நிலைத்து மிகப் பவுத்திர குலமானாரப்பா

கரைந்து மிக வேதரிஷி என்ன சொல்வோம்

     கருத்தில்லா பவுத்திரரெனப்பேர்  கொண்டோம் நாம்

உரத்த ஒரு சாபமது தீர்வதற்கு

     ஓகோகோ பலகையிடஞ் சேரவென்றார் - -  224

 

சேரவென்று சொன்ன மொழி தப்பாமல்தான்

        சிந்தைதனில் நினைந்து வாரிதியிற் சென்றான்

கூர்ம மென்ற பலகை யெதிர் நோக்கி வந்த

        குறிப்பறிந்து வேதரிஷி குருவை நோக்கி

மாறல்செய்த பலகைதனை யெடுத்துக்கொண்டு

       மனங் குவிந்து அதிலிருந்து வறுமை பூண்டு

தேர்வதற்கு ஏதுவகை செய்வோமென்று

      திரமாகப் புராண மொன்று பாடினானே  -  -225

 

பாடினான்புராணமொரு காசி காண்டம்

    பக்குவமாய் நாலடியுங் காந்தமொன்று

நாடினான் வேதமொடு சாத்திரமு மைந்தா

     நலமான பஞ்சலட்சணமுஞ் சொன்னார்

தேடினான் காவியங்க ளனந்தங் கோடி

      செகத்தோர்க்கு ஒப்பனையாய் வெகுசாய்ப் பாடி

மூடினான் சருவமத மொன்றாய்ப் போக

      மூர்க்கமுடன் வெகுசங்கை பாடினானே  -  - 226

 

ஆமப்பா வெகுசங்கை யெடுத்துப்பாடி

      அரனேது நம்மைவிட ஆத்தாளேது

நாமப்பா என்ற மத மாணவத்தினாலே

      நரரை யெல்லாம் வேத மயமாகச் சொன்னார்

காமப்பா வேதகுரு தானே யாகி

      சங்கையில்லா மந்திரத்தைத் தானுண்டாக்கி

வாமப்பால் கொண்டதொரு வெறியினாலே

      வரையான அண்டவரை யாண்டான் பாரே - - 227

 

ஆண்டவனும் வேறல்ல நானேதா னென்

      றாயிரத் தெட்டண்டமெல்லா மடக்கி மைந்தா

பூண்டவனும் வேதமயமல்லால் வேறே

     பூதலத்தில் சிவனேது நான்தானென்று

திண்டாத மதமோடு இருந்தான்வேதன்

      தீதிலா வேதமதை யடக்க வென்றே

காண்ட வனந்தா னெரித்துக் கபாலமேந்தி

       கருணையுள்ள சுந்தரனே போவென்றேனே  -228

 

போவென்று சொன்னவுடன் சுந்தரனுஞ் சென்று

      பொல்லாத பவுத்தனென்ற சாபந் தீர்ந்து

ஆவென்ற அமுதமது அவனுக் கீந்து

      அருளான பஞ்சகணதீட்சை வைத்து

மானென்ற கவுன ரசதீட்சை வைத்து

       மகத்தான பேரொலியை யவனுக்கீந்து

சோனென்ற பொதிகைகிரி தன்னில்வாழுங்

        கும்பமுனி பாவமதில் வாவென்றேனே  -   -  229,

 

 

வாவென்று சொன்னவுடன்வேதமுனி தானு

      மகத்தான பலகையதைக் கையி லேந்தி

ஓவென்று சாத்திரத்தை யோதிக் கொண்டு

    ஒரு நொடியில்பொதிகைகிரி தன்னில் வந்தான்

கூவென்ற வேதமுனி தன்னைப் பார்த்து

      குதுவான பலகையதைத் தாவென்றே நா

னூவென்ற சந்திரபுட்கரணி தன்னில்

       ஒளித்தனடா சங்கமென்ற பலகைதானே  -  -  230

 

                        சவுக்கார வழலை

 

தானென்ற புவத்தர் பதம் ஒழிந்து போச்சு

        சதாசிவமே யெங்கு நிறைந்திருக்கலாச்சு

கோனென்ற கும்பமுனி கருணையாலே

      கொள்கிநின்ற விருணீங்கி வெளியாய்ப்போச்சு

தேனென்ற வமுதமது பெருகலாச்சு

      சிவசிவா அட்சரங்கள் தொனிக்கலாச்சு

 நானென்ற தத்துவங்களற்றுப்போற்சு

        நலமான சவுக்காரக் குருவுண்டாச்சே  -  -231,

 

உண்டான சவுக்காரம் வழலையாலே

       உலகமெல்லாஞ் சித்து மயமானதாலே

பண்டான சோதியடா பரப்பிரமமாச்சு

       பரமகுருவான தொரு வழலையாக

கண்டாருஞ் சொல்லார்கள் நாவோ இல்லை

      கயிலை வளர் வழலையடா காணப்போமோ

விண்டாருஞ் சொன்னதினால் தலை தெரித்துப்போகும்

      வேதாந்த பூமியுடனாதங் கேளே  -  -    232 .    

 

நாதமென்றால் வெகுநாதம் பூமிநாதம்

        நாதாக்கள் பூசித்த வளர்ந்த நாதம்

நீதமென்ற செகநாதம் தேசிநாதம்

       நிலை பெருகி பூரணத்தில் நின்ற நாதம்

பாதமென்ற அடிமூல கணேச நாதம்

       பராபரமாம் பரமகுரு நாதம்நாதம்

பூதமென்ற பஞ்சகணம் பொருந்து நாதம்

      பூவான நாதமதைப் புகழ்ந்து காணே  233.

 

புகழ்ந்து நின்ற பூமியுடநாதம்வாங்கி

      புரிசடையோன் சிரசில் வருங்கங்கை தன்னில்

மகிழ்ந்து நின்ற நாதமதுக் கென்ன சொல்வேன்

     வையடா தசதீட்சை யார்தான் காண்பார்

அகமகிழ்ந்து தசதீட்சை வைத்துப்பாரு

      அருளான நாதவெளி யென்ன சொல்வேன்

செக மகிழுந் தசதீட்சை வைத்தாயானால்

 சிவசிவா நாதமது விந்து வாச்சே    - - 234.

  

                     விந்து நாதம்

ஆச்சப்பா நாதவிந்துக் கப்பால் கேளு

        அருளான தசதீட்சை வைத்தாயானால்

போச்சப்பா நாதவிந்து என்ற பேரு

        புகழான தீட்சையினால் மைந்தா கேளு

தாட்சியில்லா விந்துவுட னாதமாச்சு

        தண்மையுடன் விந்துவுட னாதங் கானார்

மாச்சல் செய்த நாதவிந்து தன்னால்

     மாண்டார்கள் வெகுகோடி சித்தர்தானே   - -235.

 

தானென்ற விந்துவுட னாதங் கண்டால்

       தவிராது வாதசித்தி யோகந் தானும்

ஊனென்ற வாசியது பிலத்துப் போச்சு

      உண்மையுள்ள பூரணத்தைக்காணலாச்சு

மானென்ற மவுனமது கலந்து போச்சு

      மகத்தான கற்பமது ஏறலாச்சு

தேனென்ற அமுதமது சொல்லாலச்சு

      தேகமென்ற யாக்கையது சித்தியாச்சே  -  - 234.

 

சித்தியுள்ள நாதமது விந்து வாங்கி

     சிவசிவா கல்லுப்புக் கிடைதான் சேர்த்து

முத்தியுள்ள வெடியுப்பு ரசிதஞ் சேர்த்து

       மூர்க்கமுடன் கலவத்தி லிட்டு மைந்தா

பத்தியுடன் செயநீரை விட்டு ஆட்டு

      பருவமுடன் காய வைத்து வட்டு பண்ணி

புத்தியுடன் மண்செய்து புடத்தைப் போடு

       புதுமையுள்ள சுன்னமதாய் நீறிப் போமே 235.

 

                    நவச்சாக்கட்டு

 

போமென்று விடுகாமல் சாரம் வாங்கி

       புகழ் பெருகக் கன்னமதை கீழ்மேல் வைத்து

நாமென்ற காரோட்டில் வைத்தெரித்தால்

       நலமான சாரமது கட்டிப் போகும்

ஆமென்று இப்படியே யஞ்சு திரம் வைத்தால்

      அரகரா சாரமது படிகம் போலே

தாமென்று சாரநீர் கட்டிற் றானால்

      சகல சரக்கத்தனையுங் கட்டிப் போச்சே - - 238.

 

                     நாகக்கட்டு

 

போச்சென்று விடுகாமல் நாகம் வாங்கி

       புகையடங்கச்சுத்தியது செய்துக் கொண்டு

கூச்சமறக் குகையிலிட் டுருக்கும் போது

      குருவான சாரமதைப் பத்துக்கொன்று

மாச்சலது செய்யாமல் கொடுத்துப் பாரு

     மகத்தான நாகமது கட்டிப் போகும்

காட்சியில்லாக் காட்சிகளுங் காணலாகுங்

     கருணையுள்ள புலத்தியனே யின்னங் கேளே -239.

 

கேளப்பா கல்லுப்பு வளையலுப்பு

      கெடியான சாரமுடன்மூன்றுங் கூட்டி

மாளடா கலவத்தில் நன்றாயாட்டி

        மகத்தான சாரமதுக் கங்கிபூட்டி

கோளடா வாராமல் மண்சீலை செய்து

        குருபரனைத் தியானித்துப் புடத்தைப் போடு

பாளான சாமது கட்டிப்போகும்

       பசுமையுள்ள நாகமது சாகும்பாரே  -  - -   240.

 

பாரப்பா இன்னமொரு கட்டு சொல்வேன்

      பச்சையுடன் பூநீறுஞ் சரியாய்த் தூக்கி

சாரப்பா வென்று சொல்லி சாரஞ் சேர்த்து

      தயவாகக்கலவத்தி லாட்டும் போது

வீரப்பா அடக்கியது மெழுகாய்ப் போகும்

     விசையான சாரமதுக் கங்கி பூட்டி

சீரப்பா மண்சீலை யேழுஞ் செய்து

    சிவசிவா காடையென்ற புடத்தைப் போடே  -  241

 

போடப்பா இப்படியே யஞ்சு புடம்போடு

       பொருகாமல் சாரமது கட்டிப்போகும்

நாடப்பா நவச்சராங்கட்டிப்போனால்

      நாகமென்ற வஸ்துவுக்கு வுயிர்தான் போச்சு

கூடப்பா குலையாது குலைந்தா லுந்தான்

       கூட்டிவிக்குஞ் சாரமென்ற வஸ்து வஸ்து

வீடப்பா பிலத்துதடா வஸ்து வாலே

      வேதாந்த சாரமென்ற வித்தை தானே  -  -  -242.

 

தானென்ற சார வித்தை யார்தான் காண்பார்

      தண்மையுள்ள பூரணத்தைக்கண்டோர் காண்பார்

ஊனென்ற வுரிசைதனை யார்தான் காண்பார்

     ஊமையென்ற பொருளறிந்தோன் காண்பா னப்பா

தேனென்ற மதியமுத மார்தான் காண்பார்

      திரமான மவுனியவன் காண்பா னையா

மானென்ற மவுனமதை யார்தான் காண்பார்

      மகத்தான யோகியவன் காண்பான் பாரே  -  243.

 

கானாத மடையர் மெத்தவுலகத் துள்ளே

     கன்மவினை தீராத கருத்துள்ளோர்கள்

தேனான மதியமுதங் கொண்டோ மென்பான்

     திரமான வாசிதனைக் கண்டோ மென்பான்

தானான தன்மைதனை யறியா மட்டை

      தனையறிந்து மனைபுகுதத் தெரியா மட்டை

கோனான குரு வேடமறியா மட்டை

     குணமறியான்மனமறியான் குசவன் தானே  -  - 244

 

குசவனென்ற பிரம குல மறியா வம்பன்

     குறியறியா நெறியறியா குருட்டு மாடு

அசைவதனை யறியாத சித்த ரெல்லாம்

       அருளான பூரணத்தை யறிவே னென்பான்

பிசகான மாந்தரிடஞ் சொல்ல வேண்டாம்

        பேரின்ப மறியாத லுத்தர் கோடி

நிசமில்லா மாந்தரிடஞ் சொல்ல வேண்டாம்

       நிலையான குரு பதத்தைத் தொண்டு பண்ணே  -245.

 

                பாரையுப்புக்கட்டு

 

பண்ணப்பா பிரம குருவாகி நின்ற

    பாரையுப்பைக் கொண்டு வந்து பதனமாக

உண்ணப்பா தண்ணீரில் கரைத்துக் கொண்டு

      வுத்தமனே வடிகட்டி ரவியிற்போடு

நண்ணப்பா இப்படியே யஞ்சு திரம் போடு

     நலமான வுப்பதுவுங் கட்டிப் போகும்

பொன்னப்பா வுண்டாகு முப்பினாலே

       போக்கொன்று சொல்லுகிறேன் மைந்தா கேளு 246.

 

கேளப்பா கட்டியதோ ருப்பிடை தான் மைந்தா

         கொடியான கல்லுப்புக்கூடச்சேர்த்து

நாளப்பா பிண்டம திந்திடைக்கு மைந்தா

      நலமாக மூன்று மொன்றாய் கலவத்திட்டு

கோளப்பா வாராம லறு நீராலே

     குமுறவே யீராறு சாம மாட்டு

மாளப்பா ரைத் துருட்டு ரவியிற்போடு

      மன மடங்கக் காய்ந்த பின்பு சொல்லக் கேளே   - 247

 

 

கேளடா காய்ந்ததொரு வட்டு தன்னில்

       கிருபையுடன் மண்சீலை வலுவாய்ச் செய்து

வாளடா தேசியுட சருகிற் றானும்

      வளமாகப் புடம்போட்டு மைந்தா கேளு

தேளடா கொட்டியது போலே மைந்தா

      சிவசிவா முப்பூவுஞ்சுன்னமாச்சு

சோளடா வராமற் சுன்னந் தன்னைக்

     குருவாகப் பணிந்து மிகச் சுன்னம் பண்ணே  -  -248.

 

பண்ணியதோர் சுன்னமதில் வீரம் பூரம்

      பக்குவமாய் கலவத்தில் வாய்நீராலே

உன்னியே தானரைத்து தாரத்துக்கு

     வுத்தமனே கவசமது நன்றாய்ச்செய்து

நன்னயமாய் மண்சீலை யேழுஞ் செய்து

      நலமாகப் புடம்போடக் கட்டும் பாரு

புண்ணியனே இப்படியே நாகங் கட்டி

      புதுமையுடன் ரெண்டு மொன்றாய் வேதை பாரே - 249

 

 

                      புசண்டருக்குச்சொன்ன தாரக்கட்டு

 

பாரப்பா இன்னமோரு வகையைக் கேளு

     பரமான புசுண்டருக்குப் பகர்ந்த வித்தை

நேரப்பா நின்றதொரு கல்லை வாங்கி

      நினைவாக அந்திடைக்குக் காலுங் கூட்டி

சீரப்பா அந்திடைக்குச் சீனஞ் சேர்த்து

     சிவசிவா மூன்று மொன்றாய் கலவத்திட்டு

அறுவகையி னீராலாட்டி மைந்தனே

     வட்டாக வுலர்த்திடாயே   -       -      250.



No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி