பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


வெள்ளீயம் (எ) வெள்வங்க சுத்தி

                       சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

                       கொல்லப் பயன்படும் கீழ்

                                                                                                    - திருக்குறள்.

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம்  கோரி பயனைப்  பெற முடியும் . ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் காரியப் பயனைப் பெற முடியும்.

வெள்ளீயம்
வெள்வங்கம்

சுத்தி முறை 1

வங்க சுத்தியை யிங்குரைத்திடு

வாகடாதிபர் மேதையோர்

தங்களுக்கொரு நண்பு ளப்பெயர்

சார வோதினர் தேரனா

ரிங்கி தத்தோ டியம்பு மித்தமி

ழீது கோரகை கோவை வேர்

பங்கி டிட்டற லுங்கு டித்திடு

பாயமூடிவை வாரமே             184

            எவ்வாறு பிரித்து பொருள் கொள்கின்றனர் என்பதை இப் பாடலில் மட்டும் காண்போம்.

           வங்க சுத்தியை  = வெள்வங்க சுத்தியை , இங்கு=இவ்வுலகின் கண், உரைத்திடு = சொன்ன, வாகடாதிபர்= வாகடத்திற்குத் தலைவர், மேதையோர்=பெரியோர்கள், தங்களுக்கு=ஆகிய தங்களுக்கு, ஒரு நண்புள பெயர் சார= ஒப்பற்ற நட்பு பாராட்டும் பேரா அடைய, இங்கு= இவ்வடத்தி கண், இதத்தொடு= நன்மையுடன், இயம்பும் இத்தமிழ் = (பெரியோர்களால்) சொல்லப்பட்ட இந்தத் தமிழால், ஈது= மேற்படி வங்க சுத்தியை, தேரனார் ஓதினார் = தேரையர் சொன்னார், (அது எப்படி என்றால்), கோரகை கோவை வேர்= கஞ்சா கோவை வேர் ஆகிய இவைகள் வகைக்கு , பங்கு இடு இட்டு=(மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாத தனையு முட்டின்றி முடித்தல், என்னும் உத்தியால்) இங்கு எடை சொல்லாமையால் காரீயத்துக்கு சொன்ன எடைப்படி, ஒன்வொரு வீசை சதைத்து ஒரு பாண்டத்திலிட்டு , அதில் ஒரு பங்கு வங்கத்தையிட்டு, குடித்திடு அறலும்= குடிக்கத் தக்க நல்ல சலமும்(தண்ணீரும், முன்போல ஆறு விசையிட்டு  ), பாய= நன்றாகப் பரவும் படி, வாரம் மூடிவை= ஒரு வார மூடி வை.

            (க-ரை)  கஞ்சா ஒரு வீசையும், கோவை வேர் ஒரு வீசையும் எடுத்துச் சதைத்து ஒரு பானையிலிட்டு , அதில் ஆறு வீசை சலம் விட்டு , அதன்மத்தியில் ஒரு பலம் வெள்வங்கத்தைப் போட்டு, ஒரு வாரம் மூடி வைக்க வேண்டும் என்பதாம்.

சுத்தி முறை 2

                    ஒரு கரண்டியில் இலுப்பை எண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய் விட்டு அதில் நவச்சாரத் தூளைத் தூவி, அதில் வெள்வங்கத்தைப் போட்டு உருக்கி எடுக்கவும், இதைப்போல ஏழு முறை செய்ய சுத்தியாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி