பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இலவ மரம்

                                 இலவ மரம் (Eriodendron Anfractuoum)


 செல்வத்துட்  செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

செழுமையான கருத்துக்களை செவி வழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். 

                                            - திருக்குறளும், கலைஞர் கருணாநிதி உரையும்.

இலவம் பஞ்சு
இலவ மரம்

                இலவ மரம் பேருருவாய் அடி பருத்து, 50 முதல் 60 அடி உயரம் வரை வளரும் மர இனமாகும். இம்மரத்தின் அடிப்பகுதில்  முட்கள் காணப்படும். இதன் இலைகள் மரவள்ளிக் கிழங்குச் செடியின் இலையை ஒத்துக் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளை நிறமானவை. இதன் காய்கள் ஐந்து அறை கொணட்தாகவும் அறை முழுதும் பஞ்சு நிறைந்ததாகவும்,கருப்பு நிற மிளகு போன்ற விதைகளும் கொண்டது. இக் காய்கள் பழுக்காது வெடிக்கும், அதனாலேயே இது பழுக்க காத்திருந்து ஏமாறும் கிளி என்று பொருள் தரும் இலவு காத்த கிளி என்னும் சொலவடை வந்ததது.

இலவம் பிசின்

            இதன் அடி மரத்தில் ஏற்படும் காயங்களால் வடியும் பிசின்கள் குடல் நோய்களை குணப்படுத்துகிறது.

            இதற்குப் பசியைத் தீண்டும் பண்ண உடையது. இது விந்துவினைக் கொழுமையாக்கும், காமத்தினையும் துண்டி இணையைத் தேட வைக்கும். இது துவர்ப்புச் சுவையுடையது எனவே இதை மிகுபேதி, சீதபேதி, பெரும்பாடு  முதலிய நோய்களுக்குக் கொடுக்கப்படும்.

இலவ மர விதைகள்

            இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுப்பர் அது பருத்தி எண்ணெய் எனப்படும்.

            செலிபஸ் தீவில் இதன் விதையை உணவாக் கொள்வர்.

இலவ மரப் பட்டை
இலவ மரம்
இலவமரப் பட்டை

            இது துவர்ப்புச் சுவையுடையது. இது வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது.

               இலவம் பட்டையை அரைத்து எலுமிச்சையளவு , பழைய சோற்று நீராகாரத்தில் கலக்கிக் குடுக்க இடுமருந்து முறியும்.

இம்மரத்தில் ஒட்டி வளரும் புல்லுருவியால் கண்கள் குருடாகும்.


நீர்க்கடுப்பு, நீரெரிவு, நீண்டொழுகு மேகமும் போம், 

ஆர்க்கும் விந்து வோடைக்கு மாண்மையுறும்.

பஞ்சு
இலவம் பஞ்சு


இலவம் பஞ்சில் துயில் என்பது முதுமொழி.


சித்தம்

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி