பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 301 - 400.

 


     

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 001 -  100

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 101 -  200

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 201 -  250

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 251 -  300

                       


                                 காரீயக்கட்டு

 போட்டதொரு வட்டதற்குக் கவசம் செய்து

     புதுமையுடன் புடம்போடச் சுன்னமாகும்

தேட்டான சுன்னமது பதனம் பண்ணி

   சிவப்பான கெவுரிதனக் கங்கி பூ ட்டி

மாட்டடா மண்சீலை யேழுஞ் செய்து

    மண்மறைவில் புடம்போட்டு வாங்கிக் கொண்டு

காட்டடா காரீயத்துள்ளே மைந்தா

       கருவான காரீயங் கட்டுந் தானே - - 300

 

தானென்ற காரீயக் கட்டைத் தானுந்

      தண்மையென்ற காமதா லுருக்கிக்கொண்டு

தேனென் பரிதனிலே யிடைக்கிடை தான் சேர்த்து

        தெளிவான செம்புதனில் நூற்றுக் கொன்று

கோனென்ற குருவருளால் கொடுத்தால் மைந்தா

      குறையாது ஒன்பதரை குணமோ மெத்த

தேனென்ற பூரணத்தின் செயல் தன்னாலே

      திரமாக இன்னமொரு கருவைக் கேளு    -  -301


                    சாதிலிங்கக்கட்டு

 கேளப்பா முன்குருவிற் கழஞ்சி வாங்கி

      கிருபையுள்ள சாதிலிங்கங் கழஞ்சி வாங்கி

நீளப்பா வாய்நீரால் குருவை மத்தி

       நிச்சயமாய் வீரமுடன் பூரஞ் சேர்த்து

கோளப்பா வாராமல் லிங்கத்துக்கு

      குணமாகக் கவசமது நன்றாய்ச் செய்து

வாளப்பா மண்சீலை யேழுஞ் செய்து

     மண் மறைவிற் புடம்போட வலியுந்தானே  -  - 302


                        சாதிலிங்கக்களங்கு

 தானேதான் வலித்திருத்த லிங்கந் தன்னை

      தன்மையுடன் மூன்று புடமிப்படியே செய்து

வீணேதான் திரியாமல் மைந்தா கேளு

     விளங்கி நின்ற சாதிலிங்கந்தனை வாங்கி

பேணேநீ ரசிதமென்ற தங்கந் தன்னைப்

      பிலமாகச் சுற்றி முன் பின் குருவைப் பூசி

தோணவே மண்சீலை செய்துக் கொண்டு

      சுகமாகப் புடம் போடக் களங்கமாச்சே  -  -  303

 

ஆச்சப்பா சாதிலிங்கக் களங்கதனை வாங்கி

      அருள்பெருகுஞ் சற்குருவி னருளைப் போற்றி

கூச்சமிலாச் செம்புதனில் நூற்றுக் கொன்று

     குருவான களங்கமதை யீந்தாயானால்

தாட்சியில்லா பதினாறு மாற்று காணுந்

      தடையறவே வெள்ளியிலே யீந்தாயானால் மைந்தா

மாச்சலிலா முப்பத்திரண்டு மாற்று

      மகத்தான குடவனுக்கு ஈந்துபாரே  -  - 304


பாரப்பா குடவனிலே முந்நூற்றுக் கொன்று

     பக்குவமாய்க் கொடுத்துருக்க மாற்றெட்டடாகும்

காரப்பா வெள்ளி செம்பு கணக்காய் சேர்த்து

     கருவான களங்கமதை நூற்றுக் கொன்று

சேரப்பா குடவனிலே யுருக்கிப் பாரு

     சிவசிவா ஈரஞ்சு மாற்றே காணும்

ஆரப்பா அறிவார்கள் வன்னி கெற்பம்

        அடக்கத்தி லாடுகின்ற அருமை தானே    305

 

              காரீயபற்பம்

தானென்ற வுப்புடனே காரஞ் சேர்த்து

       சம்பழத்தின் சாற்றினால் தாக்கி யாட்டி

வீணென்ற காரியத்துக் கங்கி பூட்டி

     வீறடங்கச் சீலைமண் விகையாகச் செய்து

கானென்ற காட்டெருவில் புடத்தைப் போடு

      கனல் மீறி காரீயம் பற்பமாகும்

தேனென்ற பற்பமதைப் பதனம் பண்ணி

        சிவசிவா முப்புபூவுங் கூடச்சேரே   -   -  306


சேரப்பா வீரமுடன்பூரஞ் சேர்த்து

         சிவசிவா சம்பழத்தின் சாற்றாலாட்டி

வீரப்பா கொண்டு நின்ற பாஷாணந்தான்

      வீறடங்கக் கவசமதை விஞ்சை யாக்கி

பாரப்பா மண்சீலை யேழுஞ் செய்து

     பக்குவமாய் மூன்று புட மண்மறைவிற் போடு

சீரப்பா மூன்று புடம் போட்ட பின்பு

     சிக்கெனவே காடையொரு புடத்தைப் போடே - 307

 

                பாஷாணபற்பம்

 போடப்பா காடை யென்ற புடத்திற்றானே

      புதுமையுள்ள பாஷாணம் நீறாப்ப(?) போகும்

நாடப்பா பாஷாண நீற்றில் மைந்தா

      நாமென்று சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு

தேடப்பா வெள்ளீயம் உருக்கிக் கொண்டு சேர்

      தகிடுவாய் பற்பமதை நூற்றுக் கொன்று

பாடப்பா வொன்றுமில்லை வெள்ளீயந்தான்

    பதையாமல மாண்டதுவுந் தெறித்துப் போமே - 308


போமப்பா தெறித்து நின்ற வெள்ளீயத்தைப்

      புகழ்பெருகு மதி தனிலே யிடைதான் சேர்த்து

நாமப்பா குகைதனிலே யுருக்கிப் பாரு

      நலமான சாரை ரெண்டு மொன்றாய்ச் சேர்த்து

வாமப்பா தன்னருளால் குருவாய்ப் போகு

      மகத்தான குருவினுட வகையைக் கேளு

தாமப்பா பூரமென்ற தாம்பிரத்தைத்

       தன்மையுடன் குகைதனிலே யுருக்கிப்பாரே  - - 309

 

உருகியதோர் பூரமதில் நூற்றுக் கொன்று

        உத்தமனே கொடுத்துருக்க மாற்று பத்தாம்

கருக்கனென்ற வெள்ளியிலே ஐந்நூற்றுக் கொன்று

      கருவாகக் கொடுத்துருக்க அதிக மாற்றாந்

திருக்கான பாஷாணப் போக்கு

       தன்னை சிவசிவாவென்ன சொல்வே னின்னங்கேளு

குருக்கான வழியொன்று சொல்வேன் மைந்தா

      குருவின் முப்பூவின் குருவை வாங்கே - - 310


                       பாஷாணக்கட்டு

 வாங்குவாய் முப்பூவில் காரசாரம்

      வரிசையால் துரிசினுடைய சுன்னஞ் சேர்த்து

பாங்குபெறக் கலவமதி லிட்டு மைந்தா

     பழச்சாற்றா லரைத்தெடுத்துப் பருவமாக

தீங்கில்லா பாஷாணந் தனக்கு மைந்தா

     திருக்கறவே கவசமது திறமாய்ச் செய்து

காங்கை யதிலேறுதற்கு மண்மறைவில் மைந்தா

     கருத்துற்றே புடம்போடக் கட்டுமபாரே - - 311

 

பாரப்பா இப்படியே மூன்று புடம் போடு

      பக்குவமாய்க் கருக்குடத்தி லுருகும் பாரு

காரப்பா உருகிநின்ற பாஷாணந் தன்னை

     கருத்துறவே தானெடுத்துக் கருக்கக் கேளே

சாரப்பா வெள்ளிவங்கமுருகும் போது

    சாற்றடா இடைக்கிடைதான் பாஷாணஞ் சேர்த்து

வீரப்பா செய்யாம லுருகிப் பாரு

      வெள்ளீயக் கட்டியது வுடையும் பாரே  -  -  312


                  வெள்ளீயபற்பம்

 உடைந்திருந்த வெள்ளீயக் கட்டி வாங்கி

       உண்மையுட னிடைக்கிடைதான் வெள்ளி சேர்த்து

கடைந்ததொரு குகைதனிலே யுருக்கிப் பாரு

     கமலமென்ற வெள்ளியது நொருக்குமப்பா

அடைந்ததொரு கலவமதிலிட்டு மைந்தா

      அரகரா இடைக்கிடைதான் ரசத்தைச் சேர்த்து

ஜெடம் வலுத்த செயநீராலரைத்து மைந்தா

         சிவசிவா வுருட்டியதை வட்டு பண்ணே  - 313

 

பண்ணியதோர் வட்டதனை யோட்டில் வைத்து

        பக்குவமாய் மண்சீலை யேழுஞ் செய்து

புண்ணியமா யெருவடக்கிப் புடத்தைப் போடு

        புதுமையுள்ள ஈசானம் பூசை பண்ணு

தண்ணிமையாய் புடமாறி எடுத்துப் பாரு

      தயவான பற்பமாய் நீறி நிற்கும்

வெண்மையென்ற குருநீற்றைப் பதனம் பண்ணு

      வேகமுள்ள வன்னிகற்பமிதுதான் பாரே   -  314


                              வன்னிகற்பம்

 பாரடா வன்னியுட கற்பந் தன்னை

     பாச்சடா வெள்ளிசெம்பில் நூற்றுக் கொன்று

சேரடா கற்பமது தங்கிற்றானால்

     சிவசிவா சோதியுட திரமோ மெத்த

ஆரடா அறிவார்கள் வன்னி கற்பம்

     அறிந்தவனே சிவயோகி அதுதான் மைந்தா

கூரடா குருபதத்தைத் தொண்டு பண்ணி

    குருவிருக்குஞ் சந்நிதியைக் குறித்துப் போற்றே - 315

 

போற்றுவது பூரணத்தைப் போற்ற வேணும்

     புதுமையுள்ள குருபதத்தைப் பணிய வேணும்

நாட்டுவது சுழிமுனையில் மனத்தை நாட்டி

    நாலான பூரணத்தை நாட்டிப் பாரு

தாட்டிகமாய் மனதுறுதியாக நின்றால்

     சடாதாரக் கோவை மிகத்தானே தோற்றும்

ஆட்டிவிக்கும் வாசியுட கருவைக் கண்டால்

   ஆதியந்தப் பதிதோற்று மாதிதானே       316


ஆதியென்ற சோதிதனைக் கண்டால் மைந்தா

       அரகரா மனோன்மணியை யற்புதமே செய்து

நீதியென்ற ரவிதனிலே சேர்ந்தால் மைந்தா

     நிச்சயமாய் சித்தியதாம் நீதான் பாரு

சோதியென்ற தொடுகுறியை யென்ன சொல்வேன்

     துருவமுள்ள மேருவதில் ரவிமதிதான் சேரு

வாதியென்ற மனமொத்து நிலையில் வைத்தால்

      மகத்தான குருவருளால் மைந்தா பாரே   - - 317

 

              பாஷாணக்கட்டுருக்கு

 பாரப்பா சற்குருவைத் தொழுது கொண்டு

   பாச்சடா வெள்ளையென்ற பாஷாணத்தில்

காமப்பா பஞ்சகண தீட்சை பண்ணு

       கருவான பாஷாணக் கட்டிதானும்

நேரப்பா நின்றகுரு சூட்சத்தாலே

       நிச்சயமாய்க் கட்டியது வுருகும் பாரே

ஆரப்பா அறிவார்க ளிந்தப் போக்கு

     ஆச்சரியமாச்சரிய மருளைக் கேளே  -  - 318


கேளடா கட்டிநின்ற பாஷாணத்தைக்

      கிருபையுள்ள செம்பதனில் நூற்றுக் கொன்று

வாளடா கைதனிலே யுருகும் போது

      மாட்டடா மதிபோலே யாகுஞ் செம்பு

கோளடா வாராமல் தாயைச் சேரு

      குணமான வங்கத்துக் கசையா தப்பா

ஆளடா கயிலாசத் தடுத்து மெள்ள

      ஆதியென்ற பராபரத்தினடியைப் போற்றே - 319

 

அடியென்ற அட்சரத்தை யார்தான் காண்பார்

      அப்பனே அகாரமென்ற அருளைக் காணார்

முடியென்ற மவுனமதில் முதலைக் காணார்

      முதலறிந்து தினம் பணிய முடியைக் காணார்

படியான படியறிந்து ஏறமாட்டார்

      பரவிகள்தான் வெறும்பிலுக்காய்ப் பகருவார்கள்

வடியான ரூபமதையறிந்தால் மைந்தா

      வஞ்சமற வுலகமதில் வாழலாமே   - -   320


வாழவே மதியமுதங் கொண்டோ மென்று

       மகத்தான பூரணத்தை யறிவோமென்று

ஆளவே அடிநாவைக் கண்டோ மென்று

      அப்பாலே மவுனமதை யறிந்தோ மென்று

வேலான வடிவேலை யறிந்தோ மென்று

      வேதாந்த பூரணத்தைக் கண்டோ மென்று

மாளவே அமுதமென்றுங் கபாலத் தூரில்

     மகத்தான சேத்துமத்தைக் கொள்வான் பாரே  - 321

 

                 அமிர்தசஞ்சீவி

 பாரப்பா அமுதசஞ்சீவி யொன்று பகருகிறேன்

      புலத்தியனே பண்பாய்க் கேளு

காரப்பா பிருதிவியாம் பூமிநாதங்

     கருவான மனோன்மணியாங் கருணைப் பூடு

ஆரப்பா அறிவார்கள் சுவையின் பாகம்

       அருளான திருவுமையா ளணிந்த காரம்

வீரப்பா செய்தோரைஅடக்குங்காரம்

     வேதாந்த மனோன்மணியை விளக்குந்தானே - 322


தானென்ற தன்மையதில் பொருந்தி நின்ற

       தயவாகப் பாரீன்ற நாதம் வாங்கிக்

குருவருளால் தண்ணீர் தன்னில்

      குருவான நாதமதைக் கரைத்திறுத்து

பானென்ற பானுவின்றன் முகத்தில் மைந்தா

      பாங்காக வைத்துலர்த்தி பதனமாக

ஊனென்ற அமுதமதில் பத்து முறையப்பா

     வுற்பனமா யஞ்சுபத்து முறை செய்யே  -  -323

 

செய்யவே பூமியுட நாதந்தானுஞ்

      சிவசிவா என்ன சொல்வே னமுதப் போக்கு

மெய்யான சத்திசிவ மிரண்டு மொன்றாய்

       விரவி நின்ற கருவதனை விள்ளலாமோ

ஐயனே யுனக்காகச் சொன்னோ மைந்தா

     அறுசுவையின் பாகமதை யார்தான் காண்பார்

வையமதிற் கோடியிலே யொருவனுண்டு

      மகத்தான பூரணத்தின் வளங்காண பாரே -   324

    

பாரினிற் பிருதிவியு மப்புங் கூடி

    பதியான தேயுவிலே சமாதி கொண்டு

வாரீன்ற வாயுவு மாகாசங் கூடி

     மகிழ்ந்து நின்ற அமுத சஞ்சீவி தன்னை

ஆரின்று ஆறரிவா ரமுதப் போக்கு

      அரகரா அமுத சஞ்சீவி தன்னில்

நேரின்று குன்றியிடை கொண்டால் மைந்தா

     நிச்சயமா யாக்கையது சித்தியாமே  - 325

 

                 பொரிகார கற்பம்

 சித்திபெற இன்னமொரு விபரங் கேளு

       சிவசிவா பொரிகாரங் கொண்டு வந்து

முத்திபெற ஆவினுட நெய்யில் மைந்தா

      மூர்க்கமுடன்தான் பொரித்துக் கொண்டால் மைந்தா

அத்திதனிறுள்ள விஷபித்த மெல்லா

        மகன்று விடுந் தேகமதி லழகுண்டாகும்

வெற்றி பெறக்காய சித்துக் கிதுதான் மூலம்

       விள்ளுவே னின்ன மொரு சித்து கேளே  -   326


                      நந்தியுப்பு 

 கேளப்பா சித்தியென்ற காரந்தானுங்

       கிருபையுள்ள ஜலம தொன்று சாரத் தூட்டி

வாளப்பா தசதீட்சை பத்து முறையப்பா

        வளமை பெறச் செய்து கொண்டு மைந்தா கேளு

கேளப்பா வாராமல் சொல்லக் கேளு

       குருவான ரவிபீசங் கூடச் சேர்த்து

நீளப்பா தனில்கரைத்து ரவியில் வைத்தால்

       நிசமான நந்தி யென்ற வுப்பதாச்சே  -   -  327

 

உப்பான நந்தியுப்பைப் பதனம் பண்ணி

      யுண்மையுள்ள மந்திரத்தைத் தியானஞ் செய்து

அப்பான தினங் கழஞ்சி கொண்டாயானால்

      ஆக்கை தனிலுள்ள வுப்பு அகன்று போகுந்

தப்பாமல் தினந்தோறுங் கொண்டு யேறு

     சதா னந்தி யுப்பினுடத் தன்மை மெத்த

செப்பாதே கரு விதுதான் மைந்தா மைந்தா

      செகத்தோர்க்கு விள்ளாதே சித்தர்க்காமே  - 328


ஆமப்பா நந்தியுட மூலாதாரம்

      அழகான பிருதிவியி னருமை மெத்த

நாமப்பா சொல்லுகிறோஞ் சுத்த கங்கை

      நலமறியா சித்தர்களோ காணப் போறார்

காமப்பால் கானற்பால் கருவைக் காணார்

     கருவறிந்து வுறுதி பெற்றால் காய சித்தி

தாமப்பா யென்ற நிலைதனை யறிந்து

     தவிராமல் ரெண்டு மொன்றாய் தாக்குத் தாக்கே  - 329

 

                         உப்புமெழுகு

 தாக்கிய தோருப் பிடைக்குப் பூரஞ் சேர்த்து

      தவிராம லந்திடைக்குக் கெந்தி சேர்த்து

வாக்கியந்தான் தப்பாம லொன்றாய்ச் சேர்த்து

      வைத்திடுவாய் ரவிமுகத்தில் மைந்தா மைந்தா

பாக்கியமா யுப்பாகி மெழுகாய் நிற்கும்

     பரம குரு மெழுகது வைப்பதனம் பண்ணி

ஆக்கையுட திட மறிந்து அளவாய்க் கொள்ளு

     அரகரா ரசிதமென்ற புளிப்பு போச்சே   -    330

                         

                                        ஞ்சித மெழுகு

 போச்சென்று விடுகாமல் சொல்லக் கேளு

      புதுமையுள்ள அட்டுப்பு நீரில் சேர்த்து

காச்சென்று வீரமொடுபூரம் லிங்கங்

     கருணைபெற வொன்றாகச் சேர்த்துக் கொண்டு

மாச்சலில்லா ரவிமுகத்தில் காய வைப்பாய்

    மகத்தான மெழுகாகு மைந்தா மைந்தா

 தாட்சியில்லா மெழுகினுட பேரேதென்றால்

      ரஞ்சித மெழுகெனவே சாற்றலாமே  -   330

 

சாற்றியதோர் மெழுகதனை மைந்தா மைந்தா

     சடத்தினுட செயலறிந்து தாயைப் போற்றி

ஊட்டுவாய் கழஞ்சியிடை யூட்டிக் கொண்டு

     வுறுதி பெறப் பருதிமதிச் சுடரில் நில்லு

தாட்டிகமாய் வாசியது பணிந்து மைந்தா

      தன்னிலையைத் தானறிந்து தனதாய் நிற்கும்

பூட்டியதோர் வாசியுட கருவைக் கண்டால்

      பூரணத்தை யனுதினமும் போற்றலாமே   332


ஆமப்பா வாசி சிரோமணியைக் கேளு

      அரகரா மனோன்மணியை யன்பிற் கண்டு

காமப்பால் தன்னுடனே கரைத்திறுத்து

     கருவான பூரமுடன்காரஞ் சேர்த்து

நாமப்பா சொல்லுகிறோங் கருவாய்க் கேளு

     ஞாயிறு முன் பத்துநாள் வைத்துப் பாரு

சோமப்பாலென் சொல்வேன் மெழுகதாகுஞ்

      சுருதியுள்ள மெழுகதனைப் பதனம் பண்ணே -  333

 

பண்ணியதோர் மெழுகெடுத்து தியானஞ் செய்து

      பக்குவமாய்க் கழஞ்சியிடை கொண்டா யானால்

கண்ணிமையில் நின்றதொரு தோஷமெல்லாங்

      காணாதே யோடிவிடுஞ் சிரோமணியைக் கண்டால்

புண்ணியவா னானாக்கால் க்ஷணத்தில் சித்தி

     பூரணத்தைக் காணார்க்குச் சித்தியில்லை

வன்னியென்ற சிரோமணியின் மெழுகதினாலே

      மகத்தான சித்தியெல்லாம் வாய்க்குந்தானே - 334


                       சதாசிவுப்பின் மெழுகு

 தானவனாய் நின்றதொரு தன்மை கேளு

        சகலபிணி போவதற்குச் சதாசிவத்தினுப்பு

கோனருளால் கொண்டு வந்து அறுநீர் தன்னில்

        குறிப்பாகச் சுத்திசெய்து எடுத்துக்கொண்டு

கானற்பால் காமப்பால் தன்னிலே தான்

      களங்கமறப் பத்து விசை சுத்தி செய்து

வீமப்பா என்று நீ நினைத்தால் மைந்தா

     வேதாந்தஞ் சிதறி விடு மெய் சொன்னேனே  -  335

 

மெய்யாக சுத்தி செய்த வுப்பை வாங்கி

      மேனியுட சாறதனிலரைக்க மைந்தா

ஐயாமிலா மெழுகாகுமென்ன சொல்வேன்

        னப்பனே யிம்மெழுகைத் தேனிலூட்டி

துய்ய மதியான சதாசிவனைப் போற்றி

     தொழுது கொண்டு கழஞ்சியிடை கொண்டால் மைந்தா

வையமதில் கலங்குகின்ற ஐயந்தானு மாறி

     விடுஞ் சிலேத்துமங்கள் மாண்டு விடுமே  -  336


போமப்பா தசையிலுள்ள தோஷமெல்லாம்

     பொல்லாத அஸ்திசுர மூலச்சூடு

காமப்பா விதனததால் வந்த சூடு

     கருவழிக்கு மேகமொடு கபாலசூடு

தாமப்பா சருவாங்கவாயு வெல்லாந்

     தட்டழிந்து குட்டமெல்லாஞ் சாந்தமாகும்

நாமப்பா சொல்லி வந்த கற்பமெல்லாம்

    நாள்தோறுங் கொண்டு வரில் நமனாடானே - - 337

 

நாடாமல் போவதுதா மெதினாலென்றால்

     நகாரமொடு மகாரத்தை நயந்ததாலே

தேடாம லோடி விட்டானமன் தானையா

    சிவசிவா நமனென்றால் வேறேயில்லை

வாடா தச நல்வினையுந் தீவினையு மப்பா

     வஞ்சமுள்ள நமனெனவே மகிழ்ந்து காணும்

ஊடாடு ரவிதானு மதியில் சேர்ந்தால்

      ஓகோகோ இருவினையு மோடிப் போமே  -  338

 

ஓடிப்போம் சகல பிணி யெல்லா மைந்தா

      வுறுதியுள்ள சாபமது நிவர்த்தியாக

நாடிப்பார் சாபமது நிவர்த்தியாகும்

     நானொன்று சொல்லுகிறே னன்றாய்க் கேளு

சாடிப்பார் பூரணத்தைப் பூரகமே பண்ணி

     சமயமதில் ரேசகமாய்க் கும்பததில் நின்று

பாடிப்பார் நம்முடைய மந்திரத்தை மைந்தா

     பாவமென்ற சாபமது பறந்து போமே -     339

 

               நவகிரக சாப நிவர்த்தி

 போமென்று விடுகாதே யின்னங் கேளு

     பொல்லாத நவக்கிரக சாபந்தீர

நாமொன்று சொல்லுகிறோ மைந்தா மைந்தா

     நாலான பூரணத்தை நாட்டிப் பார்த்து

ஓமென்று பூசித்து ரேசகமே பண்ணி

     ஒருமொழியால் கும்பகத்தில் நின்றால் மைந்தா

ஆமென்ற நவக்கிரக சாபமெல்லாம்

     அப்போதே அகன்று விடு மறிந்து பாரே  -  340


                      பிரமசாப நிவர்த்தி

 பாரப்பா பிரமனுட சாபந் தன்னை

      பக்குவமாய் தீர்வதற்கு பகறுவேன் கேள்

காரப்பா கருணை வைத்து அகாரந் தன்னி

     கருவான மகாரத்தின் கூடச் சேர்த்து

சேரப்பா ரேசகத்தால் பூரகத்தைப் பற்றி

    சீர் பெருகுங் கும்பகத்தில் நின்றால் மைந்தா

நேரப்பா நின்றதொரு பிரமன் சாபம்

     நிமிஷத்தி லோடிவிடு நிலைமைதானே   -  - 341

 

             விஷ்ணு சாப நிவர்த்தி

தானவனாய் நின்ற தொரு விஷ்ணு சாபந்

      தடையறவே போவதற்குச் சாற்றுவேன் கேள்

மோனமுடன் உகாரமதை அகாரத் தூட்டி

     முனையான சுழிமுனையில் ரேசித்தப்பா

கோனருளால் குருபதத்தில் நின்றால் மைந்தா

    குணமான விஷ்ணுவுட சாபந்தானும்

வானவர் கோனறியாத பூரணத்தினாலே

    வஞ்சமுள்ள சாபமது மாண்டு போச்சே  -  342


                   ருத்திர சாப நிவர்த்தி

 போச்சென்று விடுகாதே யின்னங் கேளு

      புதுமையுள்ள ருத்திரன் மயேஸ்பரத்தின் சாபங்

காச்சென்ற ரவிமதியு மொன்றாய்ச் சேர்த்து

      கருணையுள்ள சதாசிவத்தைக் கருத்தில் வைத்து

தாட்சியில்லா மதிதனிலே பூசித்தப்பா

     தருவான ரேசகத்தால் கும்பகத்தில் நின்று

மாச்சலில்லா மனோன்மணியைத் தியானித்தாக்கால்

      லஞ்சமுள்ள பஞ்சகர்த்தாள் சாபம் போச்சே

 

                  ஆறாதார சாப நிவர்த்தி

 சாபமென்ற சடாதார சாபம் போக

      தன்மையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு

தீபமென்ற சுடரொளியில் மனத்ததை யோட்டி

       தீர்க்கமடன் ரேசக பூரகமும் பண்ணி

வாமென்ற மதியமுதங் கொண்டால் மைந்தா

      வரையான சடாதார சாபந் தானுந்

காபமுடன் தயங்கி மிக வோடிப் போகுஞ்

      சடாதார ஏணி வைத்த தன்மைதானே - -344


                       தத்துவ சாப நிவர்த்தி

 தானென்ற தத்துவத்தின் சாபம் போகத்

       தன்மையுடன் சொல்லுகிறேன் தாழ்ந்து கேளு

கோனென்ற சிவசத்தி தன்னைப் போற்றி

      குறிப்பாக ரேசக பூரகமும் பண்ணி

மானென்ற கும்பகத்தில் நின்றால் மைந்தா

      மார்க்கமுள்ள மூலத்தின் மேலே சாடி

ஊனென்ற தத்துவத்தின் சாபம் போகும்

     உறுதியுள்ள தேகமது காந்தியாச்சே -  - 345

 

                     காந்திக் கருச்சுன்னம்

 காந்தியென்ற கருவி லொரு விபரங் கேளு

       கமல மலரமுதமதைக் கருவாய் வாங்கி

சாந்தியென்ற மதியமுதந் தன்னிற் சேர்த்து

      தயவாக பத்துமுறை தானே செய்து

பாந்தியமாய் பத்துமுறை செய்த பின்பு

      பக்குவமாய் பூரமதிற் பாதி சேர்த்து

சீந்தியென்ற தயிலமதை சேர்த்தால் மைந்தா

       சிவசிவா பொங்கியது கறுப்பாய்ப் போச்சே - - 346


கறுப்பான மையெடுத்து தியானஞ் செய்து

    காயாதி கற்பமெனக் கருத்திற் கொண்டு

குறிப்பான மையெனவே கொண்டால் மைந்தா

       குண்டலியின் சத்தியது மேலே சாடி

வெறுப்பான சாபமெல்லாம் வெருண்டேபோகு

      மெய்ஞானஞ் சித்திக்குந் தேகந் தங்க

முறுப்பான தேகமது வலுத்துப் போகு

     முற்ற சிவசற்றி ரெண்டு முறுதியாமே    - 347

 

ஆமப்பா வச்சிரமே பலமோ பத்து

     அதுக்கு நிகர் வீரமது அன்பாய் சேர்த்து

நாமப்பா சொல்லுகிறோந் துருசு பூரம்

     நன்றான வெள்ளையுடன் லிங்கஞ் சேர்த்து

தாமப்பா சாரமுடன் காரஞ் சேர்த்து

    தயவான அறுவகையால் கலவத்தாட்டி

காமப்பால் தன்னி லொருநாள் தானாட்டி

கருவாக வுருட்டியதை வட்டு பண்ணே   -  348


பண்ணியதோர் வட்டதனைப் பதனம் பண்ணி

       பக்குவமாயின்னமொன்று பகறுவேன் கேள்

உன்னியதோர் நாகமுடன் ரசமுஞ் சேர்த்து

      உண்மையுள்ள பூரம்முங் கூடச்சேர்த்து

நன்னயமாய் ரசமூன்று இடைசரியாய் சேர்த்து

     நாட்டியே கலவமதில் பொடித்து மைந்தா

தன்னிமையாய் முன்செய்த வட்டு சேர்த்து

   தயவாக விந்துநீர் தன்னாலாட்டே  - 349


ஆட்டுவாய் விந்துநீர் தன்னால் மைந்தா

     அரகரா யீராறு சாம மாட்டி

நாட்டுவாய் ரவிமுகத்தில் வட்டு பண்ணி

     நன்றாகக் காய்ந்த பின்பு சொல்லக் கேளு

பூட்டுவாய் மண்சீலை நன்றாய்ச் செய்து

       போடுவாய் காடையென்ற புடத்திற்றானு

மாட்டியதோர் புடந்தானு மாற விட்டு

     மைந்தனே எடுத்துப்பார் சுன்னமாச்சே -  - 350


ஆச்சப்பா சுன்னமதின் றொழிலைக் கேளு

      அடங்காத குடவனிலே யூற லேகும்

காச்சப்பா செம்புதனை யுருக்கிக் கொண்டு

      கருவான சுன்ன மதினூற்றுக் கொன்று

பாச்சப்பா செம்பதுவும் பழுத்துப் போகும்

      பக்குவமாய் வெள்ளிசெம்பில் பத்துக் கொன்று

தாட்சியில்லாச் சுன்னமது சேர்ந்தால் மைந்தா

      தடையறவே வயது பதினாறதாமே  -   -  351

 

                        ஏமரசக் களங்கு

 ஆமப்பா துருசுனுடைய சுன்னந் தன்னை

      அழகான சம்பழத்தின் சாற்றிற் றாக்கி

நாமப்பா சொல்லுகிறோஞ் சம்பழத்தின் சாறு

      நன்றாகத் தெளிந்ததுவுஞ் செயநீராகும்

தாமப்பா செம்பழத்தின் செயநீராலே

      தயவாக அரப்பொடியை சுத்தி பண்ணி

காமப்பால் கலவத்தில் விட்டு மைந்தா

     கருவான அரப்பொடியை யரைத்திடாயே   -  352


அரைக்கையிலே வீரமொடுபூரம் போட்டு

       அழகான துரிசினோடு காரஞ் சேரு

விரைக்கவே சம்பழத்தி னீராலாட்டி

       விசையாக வுருட்டியதைக் காயப் போட்டு

கரைக்கவே குகைதனிலே சாரமிட்டு

        கல்மசங்கள் தானறவே யூது வூது

மரைக்கின்ற திரைவுரையு மகன்று நல்ல

      மணிபோல வுருகியது செம்புமாமே  - - 353

 

செம்பான அயச்செம்பு கிடையாதப்பா

      செகத்திலுள்ள வாதிகளுந் தேடமாட்டார்

நம்புவது எனன்வென்றால் அயத்தின் செம்பு

     நாதமென்றுஞ் சத்தியென்று மிதுக்கு நாமம்

சம்பு சிவநாதமென்ற அயத்தின் செம்பில்

     தாக்கடா இடைக் கரை தங்கந் தன்னை

வம்பில்லா நரகமதில் கூடச் சேர்த்து

     மணிகாணக் காரமிட்டு வுருக்கிப் பாரே - - 354


உருக்கையிலே மூன்று மொன்றாயுருக்கிப் பாரு

    உத்தமனே ஏமாசக் களங்குமாகுந்

தரைக்குளுள வாதிகளோ காணப் போறார்

      தயவான அயக்களங்கின் வீறு மெத்த

உரைக்கின்றே னயக்களங்கின் ஒளியை மைந்தா

     ஓகோகோ செம்புதனில் நூற்றுக் கொன்று

கரைகின்ற குகையதனி லுருக்கிப் பாரு

     கருவான செம்பதுவும் பழுப்பதாமே  -  -355


பழுத்ததென்றும் மகிழாமல் குடவன் தன்னில்

     பாச்சடா அன்பதுக்கு வொன்றுதானும்

அழுத்தமுள்ள குடவனது வூறலற்று

      அழகான பொன் மாற்று அதிகமாகும்

முழுத்தமுள்ள அயக்களங்கை வெள்ளிசெம்பில்

     மூர்க்கமுடன் கணக்காக நூற்றுக்கொன்று

தழுக்கறவே குகைதனிலே யுருக்கிப் பாரு

    தாயான தங்கமது அதிகமாற்றே  -     -   356


                              களங்கு செந்தூரம்

 மாற்றதிகமான தொரு களங்கு தன்னில்

     மாட்டடா இடைக்கிடைதான் கெந்தி சேர்த்து

தாட்டிகமாய் வீரமொடு பூரஞ் சேர்த்து

     தயவாகக் கலவமதில் பொடித்துக் கொண்டு

பூட்டுவாய் குப்பிதனில் பொடியை மைந்தா

     புகழான மண்சீலை யாறுஞ் செய்து

வாட்டுவாய் ரவிமுகத்தி லுலர்ந்த பின்பு

    மைந்தனே தாழியரை உப்பைவையே  -  - 357

 

வையப்பா மேருதன்னை வைத்தப் பின்பு

        வைத்துமொருகழுத்தின் மேலுப்பைக் கொட்டி

பையவே அடுப்பேற்றி தீயை மூட்டு

     பக்குவமாய் சருகு கம்பு விறகால் மைந்தா

செய்யப்பா தீயெறியப்பா யாறு சாமம்

     சிவசிவா தாழிதனை யிறக்கிப் போடு

கொய்யப்பா சுகந்த மலரற்சனையே செய்து

      குருவான மேருவை நீயெடுத்துப் பாரே - 358


எடுத்து மிகப் பார்க்கையிலே மேருக்குள்ளே

     யிருக்குதடா செந்தூரமென்ன சொல்வேன்

தொடுத்ததொரு செந்தூரந் தொந்தங் கோடி

      சொல்லுகிறேன் புலத்தியனே தொந்தமாக

அடுத்தொரு செந்தூரம் பணவிடைதான் கொண்டால்

     ஆக்கையது பிலத்துதடா அழிவே யில்லை

வடித்ததொரு திரிகடுகில் செந்தூரஞ் சேர்த்து

       வளமான தேனிலொரு கடியாய்க் கொள்ளே  359

 

கொள்ளவே வாசியது பிலத்துப் போகும்

      குருவான திருநடனங் குறிப்பாய்க் காணும்

அல்லதுதான் விலகுமமுதஞ் சிந்தும்

     அஷ்டாங்க யோகமதி லடுத்துக் காணும்

விள்ளாத தசதீட்சை யொளியே காணும்

      வேதாந்த பூரணத்தின் விலாசந் தோணும்

வல்லபரமான குருபதியில் நின்று

      வளமையுள்ள செந்தூர மகிழ்ச்சி பாரே - -360

 

பாரப்பா காரீயம் வுருக்கிக் கொண்டு

     பாச்சடா செந்தூரம் பத்துக் கொன்று

வீரப்பா தானடங்கி வெளுத்துப் போகும்

    வெள்ளீயந்தனை யுருக்கி நூற்றுக் கொன்று

சேரப்பா செந்தூரஞ் சேர்த்தா யானால்

    சிவசிவா தங்கமென்ற அதிக மாற்று

ஆரப்பா செந்தூரமறியப் போறார்

     அறிந்தவர்கள் தனைக் காண அரிதாம் பாரே  -  - 361

 

அரிதான செந்தூரம் நூற்றுக்கொன்று

     அப்பனே செம்புதனி லீந்தாயானால்

பெரிதான தங்கமடா பழுப்ற மெத்த

     போசதே யித்தோடே யின்னங் கேளு

குறிதான செந்தூரங் கழஞ்சி வாங்கி

      குணமான வாய்நீரால் மத்தித்தே தான்

கரியான களிம்பு சேர் குடவனுக்கு

      கங்கணமாய் தகடதிலே பூசிப்போடே -  - 362


போடப்பா புடந்தனிலே களிம்பு சேர்த்து

     பொன்னொளிவு அதிகமதாய் பூண்டு காணும்

தேடப்பா வெள்ளிசெம்பில் கணக்காய் நூற்றில்

      செந்தூர மொன்றிடவே செம்மையாகி

ஊடப்பா செந்தூரம் பாய்ந்து மைந்தா

     வுலகமதி லதிகமா யொளியே வீசு

நாடப்பா செந்தூரம் நல்லபிரயோகம்

      நலமான யின்னமொரு சேதி கேளே   -  - 363

 

கேளப்பா இந்தநூல் சகலகலை பீடஞ்

    செயமாக ஆயிரத்து இருநூறாகும்

ஆளப்பா இந்நூலைப் பதனம் பண்ணி

     அடக்கமுடன் கருவெடுத்து ஆடு மைந்தா

நீளப்பா தளும்புவது போலே மைந்தா

     நின்றாக்கா லுலகமதில் நிசங் கொள்ளாது

தாளப்பா ஐம்புலனு மொன்றாய் நின்று

     தனதான பூரணம் போல் நூலைக்காரே  -  - 364


காராமல் புத்திகெட்டு இருந்தால் மைந்தா

     கருவி கரணாதிகளுங் கலந்து போகுங்

கூறாத கருவை யெல்லாமிந்த நூலில்

     கூறின தாலிந்த நூல்குரு நூலாகு

நேரான குருவினிட பாதம் போற்றி

     நினைவாக இந்த நூல் தன்னைப் பார்த்து

தேராத சித்துக்களை யாடு மைந்தா

        தெவிட்டாத பூரணத்தைத் தினமும் நோக்கே   - 365

 

நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்

        நோக்காதே போக்காலென்ன சென்மம்

தாக்குவது பூரணத்தைத் தாக்கு தாக்கு

        தன்மையுடன் குருபதத்திற் றொண்டு பண்ணு

வாக்கு மன தொன்றாகி அறிவினில்லு

      வஞ்சரிட மிந்நூலை வழுத்த வேண்டாம்

நாக்கதுவும் படபடத்து நில்லாதே மைந்தா

      நன்மையுடன் மவுனத்தை நாடிப் பாரே - - 366


நாடிப்பார் மவுனமென்றால் பூரணமே யாகும்

       நலமான பூரணந்தான் விந்துவிந்து

தேடிப்பார் விந்துநிலை காணமாட்டார்

      சிவமான மதியமுதச் செயலைக் காணார்

கூடிப் பார்த்தறியோடே குண்டலியைக் கண்டால்

        குருவான பதிதலத்தி லமுதங் காணும்

வாடி மனந்தளராதே மலரைக் கண்டு

       வந்தமுதம் பூரணமாய் மனத்திற் காணே - 367

 

காணவே மதியமுதங் கொண்டால் மைந்தா

         கர்பூரதேகமு மமாய் கருணையாகும்

பேணவே பேணினது கண்ணில் காணும்

        பிரணவத்தோ டாறுதலப் பெருமை காணுந்

தோணவே தோணினது தோணத் தோணும்

       சோதியிலே செகச்சோதி சுளுவிற் காணும்

ஊணான அஞ்சு பஞ்சலவணத்தாலே

       உலகமமெல்லாந் தானவனாயுறுதியாமே - - 368 


                                   நாகக் கட்டு

 உறுதியுள்ள நரகமதிற் கட்டு சொல்வேன்

        ஓகோகோ வெடியுப்புச் சாரஞ் சேர்த்து

பருதிமதி தன்னாலே வங்க நீற்றி

      பக்குவமாய் மூன்று மொன்றாய் கலவத்தாட்டி

திருமதியும் நீராலே ஆட்டி மைந்தா

      சின்கெனவே நரகமதுக் கங்கி பூட்டி

குருநிதியைத் தியானித்து புடத்தைப் போடு

        குருவான நரகமது குருவுமாமே  -   369

 

ஆமப்பா குருவான நரகந்தானு மடங்கியது

      மாண்டுதடா அருமையாக

வாமப்பா தன்னாலே யடங்குகின்ற

     மகாரசத்தின் பெருமைதனை வழுத்துகிறேன் கேள்

ஓமப்பாடு வன்ற பரிரவி தானொன்று

     உறங்குகின்ற நரகமதி னிடையே சேர்த்து

தாமப்பா குகைதனிலே யுருக்கிப் பாரு

       தவள நிறமானதொரு மணி போலாமே - - 370


மணியான நரகமணி யார்தான் காண்பார்

         மகத்தான பூரணத்தை யறிந்தோர் காண்பார்

கனியான நாதமணி தனை யுடைத்து

       கருவான செம்பதனில் நூற்றுக் கொன்று

வணிகரணமாக நீயுருக்கிப் பாரு

        வஞ்சியெனும் பரஞ்சியான தங்கம்

பணியான பல தொழிலுக்கிதுவே தங்கம்

      பராபரமாய் நின்றதுவுந் தங்கந்தானே            371

 

தானென்ற நாகமணி யொன்றெடுத்து

     தயவான வெள்ளி தனிலீந்தால் மைந்தா

கோனென்ற குருவருளால் வயதே சொல்வேன்

       குருவான நாகமணி தரத்தால் மைந்தா

தேனென்ற மொழியுடைய கமலமாது

     ஜெகஜோதியான திருவான மாது

மானென்ற மதி யமுதமான மாது

      மகத்தான பூரணமாந் தங்கந்தானே   - - 372


தானான பூரணமே தான்தானாகுந்

     தலமான பூரணத்தின் தலமே தென்றால்

ஊனான தேகமடா சத்தி சத்தி

    உள்ளுயிராஞ் சிவமெனவே யுகந்து கொண்டு

கோனான சத்திசிவக் கூத்தொன்றான

        குறியறிந்து அமுதமெனக் கொண்டால் மைந்தா

தேனான தேகமடா சித்தியாகுஞ்

        சித்தியென்றால் பூரணத்தின் சித்திதானே - - 373

 

                          பூரண தயில மெழுகு

சித்தித்த கருவொன்று சொல்லக் கேளு

     செயலான பூரணத்தின் தயிலஞ் சேர்த்து

சத்தி சிவமான மதியுப்பே தென்று

   சாரமென்ற வுப்புடனே காரங் கூட்டி

முத்தி பெறக் கலவமதில் நாட்டினாக்கால்

     மூர்க்கமுள்ள மெழுகாகு மைந்தா மைந்தா

பத்தியுடன் மெழுகெடுத்து தாரத்துக்குப்

      பக்குவமாய் கவசமது பதியச் செய்யே - 374


செய்ததொரு கவசமதைத் தீபந்தன்னில்

        திரும்பி  மெள்ள வாட்டினதால் மைந்தா கேளு

கொய்த தொரு தாரமது கெட்டியாக

        குருவான மெருகதினாற் கட்டிப் போகும்

பையவே யிப்படியே நாலுமுறை செய்தால்

       பால்போலே சுத்த வெள்ளையாகு மாகும்

வையக மெல்லாந்து திக்கு மிந்தத்

       தாரமகத்தான தாரமதின் தொழிலைக் கேளே - 375

 

                               நாகக் களங்கு

 கேளப்பா நாகமதை யுருக்கிக் கொண்டு

       கிருபையுள்ள தாரமதை யீந்தால் மைந்தா

கோளப்பா தானகலும் நாகந்தன்னில்

      கொடுமையுள்ள புகையதுவு மடங்கிக் கட்டும்

வேளப்பா எரித்த சிவன் தன்னால் கட்டு

      வெள்ளமணி போலெனவே வெளுமையாகுந்

தாளப்பா தங்கமிடைக் கிடைசேர்த்தால்

      தயவான நாகமணி களங்கமாமே -  - 376

 

 ஆமப்பா களங்கமதை வெள்ளி தன்னில்

     அன்பாக அன்பதுக்கு வொன்று போடு

காமப்பா தன்னருளால் பழுக்கும் வெள்ளி

      கயிலைதனில் பரமகுரு தன்னால் மைந்தா

வாமப்பால் கண்டவனே வாத யோகி

     வலுவான சிவயோகி வாசியோகி

நாமப்பா வென்ற குருதன்னாற் கண்டு

     நடுவான பூரணத்தை நாடு நாடே -  -  377


நாடுவது மூலமுத லாறாதாரம்

     நன்மையுள்ள குரு பரமாமே லாதாரம்

கூடுவது புருவமையந்து வாத சாந்தங்

      குறிப்பறிந்து இடகலையைப் பின்கலை யிற்சேரு

வாடுவது வேண்டாங் காண் புலத்தியனே யையா

      வரிசையுடன் சுழிமுனையில் மனத்தை நாட்டி

தேடுவது பூரணத்தைத் தேடுதேடு

       தெவிட்டாத மதியமுதங் கொண்டுதேறே -378

  

தேறுவது பூரணத்தால் தேறவேணுஞ்

      சிந்தை மனதொன்றாகி நிற்க வேணும்

மாறுவது அஞ்செழுத்தை யறிந்துமாறு

      மகத்தான பூரணத்தை மருவிக் கூடு

சேருவது பிரமமென்ற பதியிற் சேரு

     திரும்புதற்குப் பூரணத்தை நாடியூது

கூறுவது அகத்தீச வென்று கூறு

        கும்பமுனித் தஞ்சமெனக் குறித்து நில்லே - 379


நில்லென்று சொன்னீரே பூரணமே யையா

      நீயென்றும் நானென்றும் வேறேயில்லை

சொல்லொன்றுந் தப்பாது என் குருவேயையா

       சோமநிதி சூரியநிலை யார்தான் காண்பார்

கல்லென்ற கயிலாசங் கண்ட பேர்கள்

      கருவான இருநிதியுங் கண்டே கொள்வார்

வில்லென்ற வொளிதனிலே விதங்கள் மெத்த

      வேதாந்த சாத்திரமே யறிவார் பாரே  -   380

 

பாரப்பா ஆகாசப்பா வெளியில் தான்

      பருதிமதி நின்றிலங்கும் பரத்தைப் பாரு

நேரப்பா நின்றிடத்தை நின்று பாரு

       நிருவி கற்ப சமாதியிலே தன்னைப் பாரு

சேரப்பா மதிதனிலே சுடரைச் சேரு

      சேர்ந்ததே சுடர்மதியாய் நின்ற தப்பா

காரப்பா நின்ற சுடர்மதியை நீதான்

      கலந்துவிடு சூரியனிற் கருவாய்த்தானே  - - 381


                            அஞ்சனம்

 கருவான மை யொன்று சொல்லக் கேளு

    காசினியில் பனிதாங்குங் கறுத்த பூடு

மதுவான திகைப்பூடு ஆர்தான் காண்பார்

      மகத்தானப் பூண்டைக் கருக்கிக் கொண்டு

உருவாக ஏரண்டத்தெண்ணெய் விட்டு

     ஓமெனவே தியானித்து மத்தித்தே தான்

குருவான பதிநோக்கி குருவைப் போற்றி

     கும்பமுனித் தஞ்சமெனச் சிமிழில் வையே  - 382

 

வைத்ததொரு சிமிழெடுத்து கரத்தி லேந்தி

     வசிகரத்தை மோகனத்தால் தம்பனமே செய்து

மற்றவொரு மையெடுத்துத் திலகம் போடு

     மணிமந்திர பூரணத்தை மனதிற் காரு

வுபத்ததொரு வுலக மெல்லா முன்வசமே யாகும்

        உன் வசன மேலாக வுலகில் வாழ்வாய்

கைத்ததொரு அரிதாரமையைக் கேளு

       கயிலாச சின்மயத்தின் கருணையாலே - 383

       

                       அரிதார மை

 கருணைதா வேணுமென அரிதாரத்தைக்

      கவலையுட பாலதினால் கலவத்தாட்டி

மருவு கந்தமலர் வாச மாசத்திலோர் நாள்

       மங்கையர் தங் குங்குமத்தில் வரிசையாக

உருமையுடன் ரெண்டு திங்களரைப் பாயாகில்

      ஓகோகோ குங்குமத்தி னிறமே யாகும்

வரிசையுடன் பீங்கானில் வழித்து வைத்து

      வான்கதிரின் முகங்காட்டின்மையாய்ப்போமே - 384

 

மையான மையதனை தினமு மைந்தா

       வரிசையுடன் பருதி முகத் தினமும் வைத்தால்

மெய்யான மெய்யுருதி என்ன சொல்வேன்

      மேதியுட சிமிழ்தனிலே பதனம் பண்ணு

வையகத்தில் மானிடரை மயக்குமை தான்

      மாற்றமென்ற வுரு மாற்றமை தான்

தையலர்கள் கைவசங்களாக்கு மை தான்

      தரணிதனில் வைத்த பொருளெடுக்கு மையே  - 385


                       மை போடும்வகை

 பொருளான பொருள் கொடுக்கும் போதமையே

        போடுகிற விதமுனக்குப் பகலக் கேளு

இருளான அசந்தேறி குருவைக் காத்து

         இருகரத்தில் மை போட்டு இசைய நோக்கி

குருவான பதம் போற்றியிருந்தாயாகில்

       குணமாக வுன்னுருவைப் பார்ப்போர்க்கெல்லாம்

உருவான ரூபமது ஆண்பெண் போலே

        உலகமதில் தோணுமடா வுண்மை தானே - 386

 

உண்மையுள்ள மையெடுத்துத் திலதம் போட்டு

     உருமையுடன் மனோன்மணியைத் தியானஞ் செய்து

நன்மைபெறத் தீட்சையிலே யிருந்தாயாகில்

      நரரான மானிடர்க ளுருவைக் காணார்

தன்மையுடன் நிசத்தொழிலைச் செய்தாயாகில்

      தரணி தனி லதிசயமாய்த்தானே தோற்றும்

விண்ணிமையைச் சதாகாலந் தொழுத பேர்க்கு

         வேண்டலாமை யொளியின் விபரங்கேளே - - 387


கேளப்பாமை யெடுத்து இடக்கரத்தில்

       கிருபையுடன் மை போட்டுக் கீழேபாரு

வேளப்பா எரித்த சுடர் தன்னால் மைந்தா

       வேணநிதி தோணுமடா விபரமாக

ஆளப்பா அந்நிதியைப் பூரணத்தினாலே

      அஞ்சனத்தின் விபரமொன் றன்பாய்க் கேளு

கேளப்பா வொன்றுமில்லை அன்னபேதி

         குறிப்புடனே  நாதநீர் தன்னாலாட்டே - 388

 

ஆட்டுவது ஈரைந்து நாள் தன்னாலாட்டு

         அன்பாகப் பீங்கானில் வழித்து வைத்து

பூட்டுவாய் கடுக்காயை யிடித்துக் கொண்டு

      புதுமையுள்ள நாதநீர் தனிற் கலக்கி

நாட்டுவாய் தெளிவிறுத்து பேதிதன்னில்

    நன்மையுடன் விட்டு நீ குழப்பினாக்கால்

தாஷ்டிகமா யிருக்குமடா மையின் போக்கு

    தயவான நாதம் விட்டுப்பதனம் பண்ணே  - 389

       

பதனமுள்ள மையெடுத்து தியானஞ் செய்து

      பக்குவமா யஞ்சனா தேவி மூலம்

விதனமது இல்லாமல் செபிப்பாய் நூறு

      வேண்டியே மையெடுத்து திலதம் போட்டு

மதனமுள்ள மவுனமதா யிருப்பாயாகில்

       மானிடவ ருன் னேவல் மகிழ்ந்து கேட்பார்

சுதமான காங்கினத்தில் மையைத் தீற்றி

      சூழ் விளக்கி லீந்திடுவாய் சுருக்காம பாரே - 390

 

சுருக்கான மையொன்று கண்ணிற் றீற்றித்

       தூரதுலை பார்த்திட நல் சுகமாய்க் காணு

மிறுக்கி மெள்ள கண் திறந்தால் காசம் பார்க்க

      இருளகன்று வெளிதோன்றி யின்பங் காணு

முருக்கமுடன் விநயமாய் பார்த்தாயாகில்

        ஓகோகோ கயிலாச முகந்து காணுந்

திருக்கறவே யுன்மனையைப் பணிந்து போற்றி

        திருவான லட்சுமிப் பெண் வசமாவாளே - - 391


வசமான இந்நூலி லாறுநூறும்

      வாக்கியங்கள் தப்பாமல் வசமாய்ப் பார்த்தால்

நிசமாகத் தோணுமடா மறைப்பே யில்லை

     நின் னினைவுதான் மறந்தால் நிசங் காணாது

திசமான தீட்சை வீதி நன்றாய்க் காணுந்

      திடஞ் சுத்தியாவது வுந்திடந் தானப்பா

கசமான மானிடர்க்கு இந்நூல் காட்டில்

       கண்மருண்டு பொருளிருளாய் காணுந்தானே - 392

   

                       செம்பு மை

 காணவே இன்னமொரு கருவைச் சொல்வேன்

      களிம்பான செம்பினுட மையைக் கேளு

பேணவே தாம்பிரத்தால் செம்பு பண்ணி

      பிலமான நாதநீர் நிரம்ப விட்டு

தோணவே துரிசதனைப் பொடித்துத் தூவி

     சுண்டியிதின் மேல் பேதி துலங்கத் தூவி

நாணவே ரவிமுகத்தில் வைத்துப் பாரு

        நாலஞ்சு நாளையிலே மை போலாமே - 393


மையான தாம்பிரத்தின் மையிலே தான்

      மாதாந்த சஞ்சீவியை மகிழ்ந்து பாரு

கையாலே மத்திக்கும் போதிலேதான்

       கருவான மை யுறுதி என்ன சோல்வேன்

மெய்யான மேதியுட சிமிழில் வைத்து

       மேன்மையுடன் தினந்தோறும் ரவியில் வைத்தால்

தொய்யாத தாம்பிரத்தின் மையின் வேகஞ்

      சொல்லுவேன் புலத்தியனே துலங்கக்கேளே -  394

 

கேளப்பா மையெடுத்து தியானஞ் செய்து

      கெணிதமுடன் ரேசகபூரகமும் பண்ணி

மேலப்பா கும்பகத்தே நின்றாயானால்

        மேதினியி லுன தேவல் விரும்பிக் கேட்பார்

வாளப்பா வுலகத்தோ டொத்து வாழ்ந்து

       வரிசை பெற அஷ்டசித்து மகிழ்ந்து மாடி

ஆளப்பா குருபதத்தைப் பணிந்து போற்றி

        அஷ்டமா சித்து விளையாடலாமே               -395


                  அறுவகைச்சரக்கு மை

 ஆடுதற்கு இன்னமொரு கருவைக் கேளு

      ஆதியந்த மென்றதொரு வுப்போடொக்க

போடுதற்கு லவணத்தைச் சொல்லக்கேளு

        பொல்லாத சவுக்காரம் வளையலுப்பு

நாடு மெய்த்த வுவருப்பு துருசு சீனம்

        நலமான பேதியுட னாறுங் கூட்டி

தேடுதற்குக் கலவத்தில் பதிய வைத்து

        திரமான நாதநீர் விட்டுஆட்டே -              396

 

ஆட்டியே யயக்கிண்ணி தன்னிலேதான்

        அடுப்பேற்றி தீயெரிக்க அடங்கி வேகு

மாட்டியே கருவெடுத்து கலவத்திட்டு

       மாதாந்த சஞ்சீவியை விட்டு ஆட்டி

நாட்டியே முன்போலே யெரித்துப் பாரு

      நன்மை பெற மை யுறுதி யென்ன சொல்வேன்

காட்டியே ரவிமுகத்தி லஞ்சு முறை யப்பா

       கருத்துறவே வைத்து மிகக் காரு காரே  - 397


காத்ததொரு மை யெடுத்துக் கலவத்திட்டு

        கற்பூர விந்துவினாற் கலர வாட்டி

சேர்த்து மிக ஈரஞ்சு நாள்தா னாட்டி

          சிவசிவா யென்ன சொல்வேன் மையின் போக்கு

பூத்த மலர் சமாதியிலே செய்த மையைப்

       பொன்னான சிமிழ்தனிலே வைத்துக் கொண்டு

நாற்றிசையு மெய்க்கவொரு திலதம் போடு

      நாடு நகருனக்கீடோ சொல்லக் கேளே - - 398

 

கேளப்பா மையெடுத்து தியானஞ் செய்து

       கிருபையுடன் கண்ணிலிடக் குருகு மப்பா

நீளப்பா கரித்து மிக வடிந்த பின்பு

       நிமை யாட்ட மில்லாமல் நிற்கும் பாரு

வாளப்பாராக் காலம் பகற்காலம் போல்

      வரிசையுடன் காணுமடா வளமையாக

காலப்பா விறிசு கொண்டு நடந்தாயானால்

       காதவழி நிமைப் பொழுது காணுங்காணே - 399


காணவே மை யெடுத்துக் கண்ணில் தீற்றி

     கருணை மலர்பூமாதைக் கருத்தில் வைத்து

பேணவே ஆகாசம் பார்க்கும் போது

      பிலமான நட்சத்திரம் பகலேகாணும்

நாணவே சோமகிரி சூரியகிரி ரெண்டும்

       நளினமுடன் தோற்றுமடா நளினமாக

பூணவே பூமி தன்னிலுள்ள பொருளெல்லாம்

         போக்கோடே காணுமடா புதுமை தானே - 4

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி