பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


ஈயம் - வெள்ளீம், காரீயம் சுத்தி 1

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு 

                                                             -     திருக்குறள்

                                                         

Lead

 

            கருப்பு எனும் பொருள்படும் கார் + ஈயம் = காரீயம் மற்றும் வெள்ளை+ஈயம் =வெள்ளீயம் என்னும் இரு ஈயங்களையும் சுத்தி என்னும் தூய்மை செய்யும் முறைகளைக் காண்போம்.

        அனுபவ வைத்தியம் 40 என்னும் நூல் மற்றும் அகத்தியர் லோக மாரணம் 110 ஆகிய நூல்களிலிருந்து வெள்ளீயம் மற்றும் காரீயம் சுத்தி செய்யும் முறைகளைக் காண்போம்.

 வங்கநா கஞ்சுத்தி வன்காடி கோசலமும்

மங்காமோர் கொள்ளுச்சாறு அறுகம்பால் -  இங்கெண்ணை 

தாண குறிப்பால்  தனித்தனியே தானுருக்க

வேண்டும் படி சாய்க்க மேல்  

( அ,வை 40)


அகத்தியர் லோக மாரணம் 110 ல் சொல்லியடி

 சொல்லுகிறேன் பொன்வெள்ளி இரும்பு செம்பு

தோராத காரீயம் வெள்ளீயந்தான்

கொல்லுகின்ற மித்திரத்தின் வகையைக் கேளு

கோமயமோர் காடியெண்ணெய் எருக்கம் பாலில்

நல்லபழச் சாறுகாண பழச்சாறு தன்னில் ...

            இவ்விரு நூல்களிலும் கூறியபடி காடி,கோமியம்,மோர், கொள்ளுச்சாறு,எருக்கம்பால் (அருக்கம் பால்) , நல்லெண்ணெய் முதலியவற்றில் முறையே தனித்தனியாக உருக்கிச் சாய்க்க வேண்டும். பின் கழுவி எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி