பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இதயமே... உறுதி பெறு. Update 1


வணக்கம் நண்பர்களே...

        இதயம் உறுதியாய் இருந்தால், உடல் பாகங்களுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தினை சீராக அளித்து உடலை பலம் பெறச் செய்வதோடு , மன நலனயும்  சீராக வைத்திருக்கும்.

          மது, புகை, புகையிலை போன்றவை இதயத்தை பாதிக்கும் நேரடிக் காரணிகள். உதட்டின் நுண் ரத்தக் குழாய்களிலும்,  கையின் பலம் வாய்ந்த தோள் பகுதியிலும் ஒரே ரத்தமே பாய்கிறது. ஆனால் தோள் பகுதியில் பாயும்போது இரத்தம் தடித்தும், உதட்டில் பாயும் போது நீர்த்தும் அதே இரத்தம் பாயும். எப்படியெனில், அது வாத பித்தங்களின் செய்கை.  இதயமே உடல் முழுதும் இரத்த ஓட்டத்தை சீர் படுத்துகிறது. அதைப் பலப் படுத்தும்  மருத்துவத் தன்மை உள்ள பொருட்களைக் காண்போம்.

இதயத்தை வலுவாக்கும்  பொருட்கள்

      சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லிக்காய், ரோஜாப்பூ, செந்தாமரைப்பூ, மாதுளம்பழம், கடுக்காய், கிச்சிலிக்கிழங்கு, குங்குமப்பூ, நாரத்தம்பழம், அகில் கட்டை, இலவங்கம், சடாமாஞ்சில், ஏலக்காய், சன்ன லவங்கப் பட்டை, கோரைக்கிழங்கு,  தாளிச பத்திரி.


 மான்கொம்பு பற்பம்

     கலைமான் கொம்பை சுத்தி செய்து கொள்ள வேண்டும். 

இம்முறையில் மான் கொம்பினை சீவாமல் பிளந்து , சுத்தி முறையில் கூறியது போல குப்பை மேனி அல்லது கோவைச் சாற்றில்  சுத்தியில் ஊற வைத்து சுத்தி செய்து கொள்ள வேண்டும். 

       சுத்தமான பருத்தித் துணியினை பசு நெய்யில் முக்கி எடுத்து, மான் கொம்புத் துண்டுகளின் மேல் 4 அல்லது 5 முறை கவனமாய்ச் சுற்றி தீயிடவும்  கோடு பற்பமாகும். 

       அதை எடுத்து கோவையிலைச் சாறு விட்டு கல்வத்திட்டு அரைத்து,  வில்லை தட்டி வெயிலில் சுக்காய் காய வைத்து, அகலில் வைத்து மேல் அகல் மூடி மூன்று சீலை செய்து 25 வறட்டியில் புடமிட பற்பம் வெண்மையாய் இருக்கும்.

     அதிக இதய துடிப்பு (ரத்த அழுத்தம், பிளட் பிரசர்) காரணமாக வரும் பிணி மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து பிணிகளுகுக்கும், அரை தேக்கரண்டி அளவு பற்பத்தை தேனில் கலந்து குடுக்க பிணி தீரும்.


      வாய்ப்புண், குடற்புண், வெள்ளை, வெட்டை, மேக பிணிகளுக்கு நெய்யில் அல்லது சர்க்கரையில் அரை தேக்கரண்டி அளவு பற்பம் கலந்து குடுக்க பிணி ்தீரும்.


தூதுவேளை- பொலிவான முகம் பெற

    கொடியினத்தைச் சேர்ந்த தூதுவேளை, சிறகு போன்ற இலைகளையும், இலைகளிலும் கொடியின் தண்டுகளிலும் நிறைய,   மெல்லிய முட்களையும் கொண்டிருக்கும். இயல்பாக ஊதாநிற பூக்களையும், அரிதாக வெண்மை நிற பூக்களையும் கொண்டிருக்கும். 


         தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளருகக்கொடி, அளேருகம் , கூத்தனம் , கூதம், கூதளம், சங்கோலப் பத்திரி, சந்துநடந்தான், சாதமூலி  எனவும் இது அழைக்கப் படுகிறது.

     தூதுவேளை கொடியாகிய இது, வல்லாரை, கரிசாலை போன்று மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சித்தசாதன மூலிகையாகவும் இருக்கிறது.

Vallarai
வல்லாரை


      10 தூதுளம் பூக்களை 100 மி.லி பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து  தொடர்ந்து குடித்து வர, உடல் திடமாகி அழகாகும், முகம் பொலிவு பெறும்.

தூதுவேளை ரசம்

      தொடர் இருமல், பசிக்காது இருத்தல், விந்து நட்டம், மார்புச் சளி போன்றவற்றை சரி செய்யும் தூதுவேளை ரசம் செய்ய தேவையான பொருட்கள்

தூதுவேளை இலை  - கைப்பிடி
தக்காளி                -  2
புளி                      - நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு -  கைப்பிடி அளவு
வெந்தயம்         - சிறிது
கடுகு                    -  சிறிது
வரமிளகாய்      + 4
பெருங்காயம் - சிட்டிகை அளவு
மஞ்சள் தூள்    - 2 சிட்டிகை அளவு
பூண்டு                - பற்கள்

       துவரம் பருப்பை வேக. வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம்,  வரமிளகாய், பெருங்காயம் அடுத்தடுத்து போட்டு வதக்கி,  தக்காளிகளை துண்டுகளாக்கிப் போட்டு, மஞ்சள்தூள், கருவேப்பிலை உப்பு சேர்த்து பின் பூண்டு பற்களையும் போட்டு வதக்கி  தூதுவேளை இலைகளைச் சேர்த்து சிறிது வதக்கி, ஊற வைத்த புளித் தண்ணீரும்,  வேக வைத்து கடைந்த பருப்புத் தண்ணீரும் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் ரசப்பொடி சேர்த்து அதனுடன் கொத்துமல்லி இலை போட்டு  கொதிக்க வைத்து நுரை கட்டியவுடன் இறக்கவும். 

மாதம் இரு முறையாவது இந்த ரசம் செய்து சப்பிட்டு வர,  சளித் தொந்தரவு அண்டாது முகம் பொலிவு பெறும்.
 

தூதுவேளைத் துவையல்

      தேவையானவை
1. தூதுவேளை  இலை- 1 கைப்பிடி
2. கருப்பு உளுந்து         - 3 ஸ்பூன்
3. புளி                - நெல்லிக்காய் அளவு
4. பூண்டு                       -  4 பல்
5. வரமிளகாய்             -4
6. எண்ணெய், உப்பு, தாளிக்க உளுந்து தேவையான அளவு.
7. தேங்காய்த் துண்டு -3 துண்டு
(பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்)
     ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி , கருப்பு உளுந்துப் பருப்பு போட்டு மெல்ல வறுத்து, வரமிளகாய், தூதுவேளை இலை சேர்த்து வதக்கி, தேங்காய்த் துண்டு சேர்த்து வதக்கி ஆறவிட்டு, புளி , பூண்டு, தேவையான அளவு உப்பு போட்டு அரைக்கவும்

         வேறு கடாயில் எண்ணெய்விட்டு, உளுந்து, கடுகு போட்டு தாளித்து ஆறவிட துவையல் தயார்.

        இருமல், கெட்டிப்பட்ட மார்புச் சளி இளகி வெளியேறும்.






மனநலம் தரும் மூலிகைகள் update2

 வணக்கம் நண்பர்களே!

     நாம் சில பூக்களைப் பார்க்கும் போதும் முகரும் போதும் நம் மனதில் சிறு உற்சாகமும், இனம் புரியாத மகிழ்ச்சியும் உண்டாகிறது அல்லவா? அதே போல சில மூலிகைகளை நாம் உட்கொள்ளும் போது சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். 

        மூளை, இருதயத்துக்கு ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டிருந்தால் , மனதில் திகில் , மூர்ச்சை, மயக்கம், உடல் நலக் கேடு முதலியன ஏற்படக் கூடும்.

சில மூலிகைகள் அதை சரி செய்யும்,  அத்தகைய மூலிகைகளையும்,  அதன் பிற குணநலன்களையும் காண்போம். 


அன்னாசிப் பூ

      தக்கோலம் என்று  அழைக்கப்படும் அன்னாசிப்பூ உற்சாகமூட்டும், பசியினைத் தூண்டும், வயிற்றில் உண்டாகித் தங்கக் கூடிய வாயுக்களை சொற்ப சூட்டினை உண்டாக்கி வெளியேற்றும்.

அன்னாசிப் பூ
      
                                                   தக்கோலம்
                      

இந்தப் பூ தனக்கே உரிய ரசிக்கத்தக்க வாசனையைக் கொண்டுள்ளது. மட்டன் சிக்கன்  மசாலாக்களில் இதையும் சேர்த்து அரைப்பர். 

       இது பஞ்ச வாசம் என்னும் மனதிற்கினிய மணம் தரும் ஐந்து பொருட்களில் ஒன்று. மற்றவை ஏலம், இலவங்கம், சாதிக்காய், பச்சைக் கற்பூரம். 

       வெற்றிலை பாக்கு போடும் போது, தக்கோலமும் சேர்த்துப் போடுவதுண்டு. அதனால் மனதிற்கினிய மணமும், உற்சாகமும் உண்டாகும். 
      

வாய்விளங்கம்

      கடைச் சரக்குகளில் ஒன்றான வாய்விளங்கம் மனதிற்கு உற்சாகம் ஊட்டும். 
      இதன் வேறு பெயர்கள் காரிகண்டி, கேரளம், தண்டுலிகம், வரவணை, 
கேரளம்

    வாய் விளங்கத்தின் தனிக்குணமாக இரத்தம் பற்றாத வெளுப்பு நோய், வெண்குட்டம், உடல் ஊதல் நோய் ( உடல் மிக பருமனாவது), வாயுப் பிடிப்புகள், வயிற்றிலுள்ள நுண்கிருமிகள் முதலிய பிணிகள் தீரும்.

     இது, வயிற்றில் அற்பச் சூட்டை உண்டாக்கி வாயுவை வெளியேற்றும், மலம் இளகலாகப் போகச் செய்யும், இது தும்மலை உண்டாக்கும்.

       சிறுவர்கள் சாப்பிட அடம்பிடித்தால்,  வயிற்றில் பிரச்னை இருப்பதறிந்து இதன் தனிச் சூரணத்தை அரைத் தேக்கரண்டியளவு குடுத்து பால் குடிக்கச் செய்ய வயிற்றுப் பிரச்சனைகளு்ம், வயிற்றுப் புழுத் தொந்தரவுகளும் நீங்கி நன்கு உண்பர். நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடாது.

      பிற மருந்து சரக்குகளுடன் கூட்டி மருந்து செய்து சாப்பிட மனோதிடத்துடன், உற்சாகம் ஏற்படும்.

திறமிகு திரிபலாதி லேகியம்


2. சூரத் கடுக்காய்த்தோல்  - 1 பங்கு
3. கடுக்காய்ப்பூ                       -1 பங்கு
4. தான்றிக்காய்த்தோல்       -1 பங்கு
5. தரமான நெல்லி முள்ளி   -1 பங்கு
6. பசு நெய்                                -2 பங்கு
7. தேன்                                     - 12 பங்கு

   சுத்தி முறைகளை நாம் எழுதியுள்ள postஐ பார்க்கவும்.

    சுத்தி செய்த சரக்குகளை தனித்தனியே பொடி செய்து அளவுப்படி வைத்துக் கொள்ளவும். சுத்தி செய்த தேனை பதமாகக் காய்ச்சி , அளவுப்படி எடுத்த பொடிகளை அதில் போட்டு ஒன்றாகக் கலந்து , நன்றாகக் கலந்த பின் நெய் விட்டு கிண்டி,  பீங்கான் அல்லது கண்ணாடி கலனில் பத்திரப்படுத்தவும்.

       காலை, மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட ,  மூளை பலப்படும், இரைப்பையின் தளர்ச்சியை நீக்கும், மூல வியாதிகளும் தணியும். 


மூளையின் சூடு தணிக்கும் - பாதாம் பாயாசம்.

        உடற்சூடு மூளைக்கு ஏறி அதனை வறளச் செய்து மனநலம் இயல்பிற்கு மாறாய் இருக்கும், ஆண்மைக்குறைவு ஏற்படும்.
 அதற்கு,



பாதாம் பருப்பு                   - 20கிராம்
தோல் நீக்கிய தேங்காய்- 10 கிராம்
கசகசா                                 - 10 கிராம்
 சுரை விதைப் பருப்பு     - 5 கிராம்
முலாம்பழ விதைப் பருப்பு- 5கிராம்
கோதுமை நொய்              - 10 கிராம்
சீனிச் சர்க்கரை               - 35 கிராம்
பசுவின் நெய்                  - 4 ஸ்பூன்.

பாதாம் பருப்பை  ஓரிரவு ஊற வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும், பாதாம் பருப்பு, தோல் நீக்கிய தேங்காய், கசகசா, சுரை பருப்பு, கோதுமை நொய்  முதலியவைகளை சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து,  அந்த விழுதை மெல்லிய துணியில் முடிந்து 100 மி.லி தண்ணீரில் மெதுவாகப் பிசைய அவ்விழுதின் பால் முடிச்சிலிருந்து இறங்கும். முழுதும் கசக்கி எடுத்தவுடன் அந்தப் பாலை மிதமாக சூடேற்றி, கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், அதே நேரம் சர்க்கரையைப் பாகாகச் செய்து இரண்டையும் கலந்து காய்ச்சிப் பாகு பதத்தில் இறக்கி மேற்படி நெய் சேர்த்து கிண்டி  பத்திரப் படுத்தவும்
      செரிக்கும் அளவுக்கேற்ப தேவையான அளவு சாப்பிடலாம்.

     இதனால் மூளைச்சூட்டை நீக்கி,  மூளை வறட்சி நீக்கி கொழுமை சேர்த்து,  தேகத்தையும் கொழுமை சேர்த்து, மனநலத்தினை  சீராக்கும்.

மாதம் ஒரு முறை  இந்த அல்வா செய்து சாப்பிட உடல் நலனும், மன நலனும் பாதுகாக்கப் படும்


நெல்லிக்காய் அல்வா


      இருதய அதிர்ச்சியினால் உண்டான மனநலக் கோளாறுகளை அகற்ற இந்த அல்வா உதவும்.
 
தேவையானவை
1. நெல்லி முள்ளி     - 420. கிராம்
2. அகரு கட்டை         -30 கிராம்
3. சாதிக்காய்            -30 கிராம்
4. சாதிப்பத்திரி        -30 கிராம்
5. மூங்கிலுப்பு           -30 கிராம்
6. ஏலக்காய்                -30 கிராம்
7. தாளிச பத்திரி       - 30 கிராம்
8. கிச்சிலித் தோல்  - 30 கிராம்
9. சீனிச் சர்க்கரை    - 1500 கிராம்
10.  வெள்ளி ரேக்கு - 8 கிராம்
11. தங்க ரேக்கு         1 கிராம்
    
      சரக்குகள் சுத்தமானதாகவும் புதிதானதாகவும்  எடுத்துக் கொள்ளவும் அகரு கட்டையை  தண்ணீரில் போட்டால் அது மூழ்கிப் போக வேண்டும், மிதந்தால் அதில் சத்து இல்லை என தெளிந்து ஒதுக்க வேண்டும். 

        நெல்லி முள்ளியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைத்து ஆறவிட்டு இளஞ்சூடாக இருக்கும்போது கடைந்து அதிலுள்ள நார் முதலியவற்றை வடித்து நீக்கிவிடவும்.  மற்ற சரக்குகளை சுத்தி செய்து ( சுத்தி என்னும் போஸ்ட் பார்க்கவும்) பொடித்து அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
         
         சீனிச் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து  பாகு காய்ச்சி, பாகு பதம் வந்தவுடன் பொடித்த சரக்குகளையும், வடித்த நெல்லி நீரையும் சேர்த்து மர மத்தினால் துளாவி அல்வா பதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, இளஞ்சூடாக இருக்கும்போது  வெள்ளி, தங்க ரேக்குகளைத்தூவி மரமத்தினால் கிண்டி பத்திரப்படுத்தவும். 

        ரேக்குகள் இல்லாமலும் செய்யலாம், பலனும் குறைவாகவே இருக்கும்.  வெள்ளி ரேக்கினை வராக் என்கின்றனர், 1 ரோல் 200 ரூபாய் அளவில் கிடைக்கிறது. 

        பெரிய நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம்.இருதயம்,  மூளை,இரைப்பை முதலியவைகளைப் பலப்படுத்தி இருதய அதிர்ச்சி நீக்கி மன நலம் காக்கும். 

சித்தம்.

உடல் பருமன் குறைய update1


வணக்கம் நண்பர்களே!

        ஒருவரின் உடலுக்குத் தேவையான கொழுப்பு, தாதுக்கள் மற்றும் மாமிசங்கள் அளவில் இயல்பை விட அதிகமாகவதால், உடல் பருத்து மேல்மூச்சு, களைப்பு, சிந்தனைக் குறைபாடு , தாழ்வு மனப்பான்மை முதலிய சிக்கல்களை உருவாக்கும். ஆண்மைக்குறைவு ஏற்படும்.

       உடற்பயிற்சி செய்வது, மற்றும் முறையாக யோகாசனங்கள் செய்வது உடல் பருமனை குறைக்க உதவும், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி சதையைச் சுருங்கச் செய்து உடல் பருமனைக் குறைக்கும் சில அறிமுகமான மூலிகைகளைப் பார்ப்போம்.

      உடற் கழிவுகளை வெளியேற்றி, தசை நரம்புகளைச் சுருங்கச் செய்து உடல் பருமனைக் குறைக்கும் தாவர பொருட்கள் எவையெனில்

அத்திப்பால்/பிஞ்சு, ஆலம் விழுது, ஆவாரம் பூ, இலந்தைப் பழம், கடுக்காய், கிராம்பு, கருவேலம்பட்டை, கீழ்க்காய் நெல்லி( கீழாநெல்லி), கசகசா, கோரைக்கிழங்கு, சுவற்று முள்ளங்கி, செந்நாயுருவி, தர்ப்பைப் புல், தாளிச பத்திரி, தென்னம் பூ, நாவற்பழம்/ நாவற்பட்டை, புளியம்பட்டை/புளியங்கொட்டை, பொடுதலை, பீளைச் செடி,மதனகாமப்பூ,  மருதம்பட்டை, மாசிக்காய்,  முள் இலவம் பிசின், வாழைநீர்/ வாழைப்பிஞ்சு

அத்திப் பிஞ்சு/ அத்திப் பால்

    


       சூடான குணமுடைய அத்திப் பாலால் பித்த பிணிகள் அறும். மதுமேகம் எனப்படும் நீரிழிவு, சூலை நோய்கள்,  நீர்ச்சுருக்கு போன்ற பிணிகளை நீக்கும்.
      பத்து கிராம் அளவுக்கு அத்திப் பால் எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் பசுவின் வெண்ணெய் சேர்த்து கலக்கி உள்ளுக்குக் கொடுத்து வர, உடல் பருமன் குறைந்து பலமாகி வரும்.

அத்திப்பிஞ்சு

      இதைச் சமைலில் சேர்த்து சமைத்து உண்ண உடற் பருமன் குறையும்.

ஆலம் விழுது

      ஆலமரம் நம்  அனைவருக்கும் நன்கு அறிமுகமான மரமே. அதன் விழுதுகள் அம் மரத்தை நிலை நிறுத்துகின்றன.



        ஆலம்பால் , மேகம் என்னும் பெண்களின் தொடர்பால் ஏற்பட்டு கிளைக்கும் வியாதிகளை ஒட்ட விடாது தவிர்க்கும், இதைக்கொண்டு பல் சுத்தம் செய்ய, அசையும் பல் கூட இறுகும்,  உச்சி குளிரும், வெண்ணீர் என்று சொல்லக் கூடிய விந்து அணுக்கள் ஊறும். உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கும். 

       ஆலம்பாலைச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட உடல் கட்டுக்கோப்பாக ஆவதுடன் எடை குறையும்.

ஆவாரம் பூ

     


       ஆவாரை பூத்திருக்குச் சாவாரைக் கண்டதுண்டா ' என்னும் மருத்துவப் பழமொழிக்கு ஏற்ப இப்பூவைக் குடிநீர் வைத்தோ அல்லது பாகப்படி சமைத்தோ உண்ண. பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு என்னும் அதிகப்படியான உதிரப் போக்கு நிற்கும், சிறுநீர்த்தாரையில்  புண் ஏற்பட்டு,  சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் போகும் வியாது நீங்கும், அதிநீர்வேட்கை என்னும் அடங்காத நீர்த்தாகம் தணியும்.
       இந்தப்பூவை உலர்த்தி குளியல் பொடிகளில் சேர்த்து, அக்குளில் தடவி ஊற வைத்துக் குளிக்க, கற்றாழை நாற்றம் நீங்கும்.
          நிழலில் காய வைத்த ஆவாரம் பூவை குடி நீராகவோ அல்லது பச்சைப் பூவை பாலில் போட்டு கொதிக்கவைத்து அல்லது பூவை பாசிப்பருப்பு போன்ற பருப்புகளுடன் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். உடல் பொன்னிறமாகும்.

கீழாநெல்லி

    


           இதன் இலை தண்டு வேர் எனும் அனைத்து பாகத்தையும் கழுவி நன்றாய் அரைத்து,  நெல்லிக்காயளவு  பசும் பாலில் கலக்கி குடிக்க இரத்த சோகை, பித்தம் அதிகரித்ததினால் உண்டான காமாலை , வெளுப்பு நோய்கள் தீர்ந்து இரத்தம் ஊறும். உடற்கழிவுகள் நீங்கி உடல் பருமன் குறையும்.

செந்நாயுருவி




      உறைப்பும், கசப்பும் கொண்ட இதன் இலைகளை இடித்துப் பிழிந்து அதன் சாறு ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வயிற்றில் ஏற்படும் நோய்களைக் களைந்து நரம்புகளையும், சதைகளையும் சுருங்கச் செய்து உடல் பருமனைக் குறைக்கும். 
      பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக குடுத்தால் சூதக கட்டை உடைத்து இரத்தத்தை வெளியேற்றும், பிண்டத்தையும் வெளியேற்றும் ஆகையால் கருவுற்ற பெண்கள் இதைத் தீண்டக் கூடாது

புளியங் கொட்டை.

      துவர்ப்புச் சுவை உள்ளது. இதன் குணமாவது, கர்பப் பையில்  பெண்களுக்கு ஏற்படும் புண்களினால் உண்டாகும் வெள்ளையை குணப்படுத்தும். சிறுநீர் பாதையில் ஏற்பட்ட அழற்சி மற்றும் புண்ணால் ஏற்படும் சிறுநீர்க்கடுப்பு, பித்தப்பை அழற்சியினால் பித்த சுரப்பு அதிகரித்ததால் உண்டாகும் பித்த பேதி தணியும்.

        புளியங்கொட்டையின் மேல் தோலை எடுத்து பொடித்த சூரணத்துடன் சிறிது சீரகம்,  சிறிது பனை மரத்தின் கற்கண்டு சேர்த்து அரைத்து  பாலில் கலந்து  குடிக்கச் செய்ய உடல் பருமன் குறையும்.
          

பொடுதலை

     பொடுதலை இலையை பாகப்படி உண்டு வந்தால் இரும்ல், பேதி, விலா பக்கத்தில் வாயு தங்குதலஸல் உண்டாகும் வலியான சூலை நோய், வெண்மேகம், வாதமும் போகும்.

    இதன் இலையையும், காயையும் நெய் சேர்த்து வதக்கி உப்பு மிளகாய் கூட்டி அரைத்து துவையல் செய்து,  சாப்பாட்டின் முதல் இரு கவளங்களில்   நெய்யுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர மூலச்சூடு சீராக்கப்பட்டு  உடல் பருமன் நீங்கி உடல் கட்டுக்கோப்பாகும்.
  










மருதம்பட்டை

    மருதம்பட்டையின் குணமாவது நீரிழிவு, மயக்கம், காய்ச்சலின் பினய உண்டாகும் களைப்பு,  வயிற்றில் ஏற்படும் நோய்கள், குட்டம் முதலிய பிணிகள் நீங்கும்

       ஒரு தேக்கரண்டி அளவு மருத மரப் பட்டையின் தூளை, 100 மி.லி  காய்ச்சிய பசும்பாலில் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி  வெறும் வயிற்றில் குடித்து வர,  இருதய சம்பந்தமான நோய்கள் சரியாகி , உடல் பருமன் குறையும்.

 நெருஞ்சிக் குடி நீர் ( நீர் முள்ளிக் குடிநீர்)

உடல் எடை, , உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ஏற்படும் வீக்கம், பெருவயிறு,  சிறுநீர் பிரியாத நீர்க்கட்டு நீங்கி நீரைப் பெருக்கி கழித்து உடல் பருமனைக் குறைக்கும். உடற்பயிற்சியுடன் எடுத்துக் கொள்ள குறிப்பிடத் தக்க முன்னேற்றம் காணப்படும்.

1. நெருஞ்சி சமூலம்      -1 பங்கு
2. நெல்லி வற்றல்          - 1பங்கு
3. நீர் முள்ளிச் சமூலம்  - 1 பங்கு
4. பறங்கிச் சக்கை         -1பங்கு
5. மணத்தக்காளி            -1 பங்கு
     வற்றல்
6. சரக்கொன்றைப் புளி-1 பங்கு
7. சோம்பு                             -1. பங்கு
8. வெள்ளரி விதை         - 1 பங்கு
9. சுரைக்கொடி                 -1. பங்கு
10.கடுக்காய்த்தோல்      - 1 பங்கு
11. தான்றிக்காய்தோல் - 1 பங்கு

சரக்குகளை முறையே சுத்தி செய்து ஒன்றிரண்டாக இடித்து , பொடித்து அளவுப்படி கலந்து  வைத்துக் கொள்ள வேண்டும்.

       இரண்டு மூன்று ஸ்பூன் பொடித்த சூரணத்தை அரை லிட்டர் தண்ணீரில் ஊறப்போட்டு, ஒரு மணி நேரம் சென்ற பின் அடுப்பிலேற்றி ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டச் செய்து வடிகட்டி, குடிக்கவும். சிறிது வெகுட்டல் மணம் இருந்தால் குடித்தபின் ஏலக்காயை வாயிலிட்டுக் கொள்ளலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் இம்மருந்தை எடுத்துக் கொண்டு உடற் பயிற்சி செய்ய எண்ணிய படியே உடற் பருமன் நன்கு குறையும்.

சரக்குகளின் சுத்தி முறைகளை சுத்தி எனும் போஸ்ட்களில் பார்க்கவும்.

திரளாத மகளிர்க்கு / மாதவிடாய் தடைபட்ட பெண்update 1

   

                        சூதகக் கட்டு ஏற்பட்டால்...

            பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர இரத்தப்போக்கு, குறைதல், தாமதப்படுதல், தடைபடுதல் முதலிய செய்கைகளுக்கு பொவான பெயராய் சூதகக்கட்டு எனப்படுகிறது.

கொடிவேலி

வேறு பெயர்கள்
         சுசி, தழல், தழற்கொடுக்கி, வஞ்சகாரம், வல்லிவன்னி, வன்னிவன்னி, அக்கினிக, சித்திரமூலம்










சுத்தி

       கல்சுண்ணாம்பு நீரில் கரைத்து , அசையாமல்  ஒருஇரவு தெளிய விட்டு,  தெளிவு இறுத்த சுண்ண நீரில் கால் மணி நேரம் ஊற வைக்க தீமை நீங்கி கொடுவேலி வேர் சுத்தியாகும். அதை வெயிலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.

       கொடிவேலி வேர்ப்பட்டையை பொடித்து,  முட்டை வெள்ளைக்கரு  விட்டு அரைத்து இரண்டு மிளகு அளவு எடுத்து கோழி முட்டை வெள்ளைக் கருவில் கலந்து கொடுக்க, வீட்டு விலக்கு சரியாக ஆகாத பெண்களுக்கு,  சரியாகும். தினமும் காலை, மாலை இருவேளையும் மூன்று நாள் குடுக்க வேண்டும். இது காரமான மருந்து ஆகையால் வெண்கரு தகுந்தபடி சேர்த்துக் கொள்ளவும்.


முறிவு
        
         அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல மருந்தின் சிறு தீய குணம் மட்டுமல்லாமல், மருந்தின் அதிக அளவின் காரணமாகவும் கூட உடலுக்கு ஒவ்வாமை உண்டாகலாம் அதை முறிக்க வேண்டும்.

      பசு நெய்யில் உளுந்து வடை செய்து சாப்பிட அவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தாலும் அதை முறிக்கும்.

செந்நாயுருவி  Click on the link for Details



முக்கியம்
            கண்டிப்பாக சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி பாகம் - 2.


கழற்சிக்காய்

      சிறகு போன்ற கூட்டு இலைகளைக் கொண்ட கொடியினம். கொடித் தண்டுகளில் முள் நிறைந்து காணப்படும்.இதன் பூக்கள் மஞ்சள்நிறத்திலும்,  விதைகள் உருண்டையாகவும் இருக்கும். நீர்நிலைகள் அருகில் குறிப்பாக ஆற்றங்கரையிலும், கடற்கரைகளிலும் காணப்படும். இது  கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என நான்கு வகையாகக் காணப்படுகின்றன.

மறைமொழிகள்

     கக்கார், பேரீந்து, கழற்காய், கழங்கு, கழல், கற்சூரம், சபவலம், சயவலம், பெண்டுகம், பென்றுகம், முழல், மூழல்,  வச்சிரபீசம்,          

         அச்சமாதாயிதக் கொடி- சிவப்புக் கழற்சிக்கொடி, 

கழற்சிக்காய்
கழற்சிக்காய்




 கழற்சி இலை.



       இரும்புச் சட்டியில்,  வெள்ளை கழற்சி இலைக் கொழுந்துகளைப் போட்டு விளக்கெண்ணை ஊற்றி , அடுப்பில் வைத்து வதக்கி, நன்கு வதங்கியவுடன் ஆறவிட்டு, இளஞ் சூட்டில் வீக்கங்களின் மேல் கட்டி வர வீக்கங்கள் வற்றும். மூலம், விரை வீக்கம்,  போன்ற வீக்கங்ளும் தணியும்.

கழற்சிப் பருப்பின் குணங்கள்

          நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு பலம் சேர்க்கும். நாள்விட்டு நாள் வரும் முறைசுரம் போன்ற வியாதிகள் வரவொட்டாது தடுக்கும் தன்மை உள்ளது.உள் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும் குணம் கொண்டது.

       வெள்ளைக் கழற்சிப் பருப்பை நீர் விட்டு சந்தனக் கல்லில் அரைத்து, அந்த விழுதை அடி வயிறு, இடுப்பு மற்றும் முதுகின் அடிப்பகுதிகளில் பூசி வர நீர்ச்சுருக்கு, நீரடைப்பு,  சிறுநீரகக் கல் என்ற கல்லடைப்பு முதலிய நோய்கள் தீரும்.

பச்சை கழற்சிப் பருப்பைத் தாயப்பாலில் சுத்தமான சந்தனக் கல்லில் உரைத்து குடிக்கச் செய்ய இரத்த வாந்தியாவதை நிறுத்தும்.



பூனைக்காலி விதை

                 
            நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூனைக்காலி வித்தில் பல நிறங்கள் இருந்தாலும், கறுப்பு நிற விதைகளே அதிக பலன்களை அளிக்கும்.இந்த விதை மொச்சைப் பயிரு போலிருக்கும்.


மறைமொழிகள்
    
       தேறுவம், நாகத்தின் சத்துரு, பலாதல், பாதிரம், பூதினம், பூர்வரகம், பூனைக்காய்வேளை, மக்கடி, மச்சி, மறாத்தம், மாக்கடி, மாகத்தம், மாருதம், வெருகடி, வெருகடிக்கொடி, அகரபரணி, அருகியரத்தம், ஆற்றுப்பூக்காலிக்கொடி, இரிசியா, கடிகண்டு, கவி, குப்தம், குரங்குச்சொறி, சுக்கிரம்பர், சுக்கிலவிருத்தி, சொறிவல்லி, தேறுவம்.  

சுத்தி 
          இந்த விதைகளை பாலில் போட்டு வேகவைத்து மேல் தோல் நீக்கி வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை
        சுத்தி செய்த பூனைக்காலி பருப்புகளை தனி மருந்தாகவும், மற்ற மருந்துப் பொருட்களுடன் சேர்த்தும் மருந்துகள் செய்யலாம்

        தனித்த பூனைக்காலி பருப்பை இடித்துப் பொடித்து துணியிலூட்டி (வஸ்திரகாயம்) வடித்து எடுத்துக்கொண்டு , 1.5 கிராம் முதல் மூன்று கிராம் வரை நன்கு காய்ச்சிய பசும்பாலில்  , தேவையான சர்க்கரையுடன் கலந்து  காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பெண்களுக்கு அதிக சூட்டினால் உண்டாகும் வெள்ளை நோயைத் தீர்க்கும், ஆண்களுக்கு விந்து நட்டத்தை போக்கும், ஸ்கலிதம் விரைவில் விந்து வெளியாவதைத் தடுக்கும். 




கோரைக் கிழங்கு.

          
       புல் வகையைச் சேர்ந்தது கோரைக்கிழங்கு.இதன் வேர்க்கிழங்கே மருத்துவப் பயனுடையது.


மறைமொழிகள்

         குருவிந்தம், கோடகங்கு, முத்தக்காசு, செலதம், செவ்வேதகம், சேலகம், துங்கமுட்டு, தூங்கமுட்டி, பஞ்சாகி, பஞ்சாணம், பஞ்சாய், பத்திரமுத்தக்காசு, பன்றி தோண்டும் பூண்டு, பாதாளமூலி,  பித்தகர நாசினி, முயலை, வச்சிரகெந்தம், அம்புதம், எருமைநாக்கி, ஏருவை, கடிரோமம், கனம், கோடங்கிழங்கு, Nut grass, 

சுத்தி முறை

      கிழங்கின் மேற்றோலை கழித்து, ஒரு பாத்திரத்தில் பாலும் தண்ணீரும் சரிசமமாகக் கலந்து, அதன் வாய்க்கு உரத்த துணியால் வேடுகட்டி அத்துணிமேல் தோல் நீக்கிய கோரைக்கிழங்குகளை  வைத்து பொருத்தமான மூடி கொண்டு மூடி,  சிறு தீயாக எரித்து பால் சுண்டியவுடன் இறக்கி உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.

தன்மைகளும்,  நன்மைகளும்

       சிறுநீரையும்,  வியர்வையையும் பெருக்கி கழிவுகளை அகற்றும், நாடி நரம்புகளின் கொதிப்பைத் தணிக்கும், உடலுக்கு பலம் சேர்த்து உற்சாகம் அளிக்கக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்திதரக் கூடியது.


10 கிராம் கிழங்கினை ஒன்றிரண்டாகத் தட்டி 500 மி.லி தண்ணீர் விட்டு, அடுப்பேற்றி 60 மி.லியாகச் சுண்டச் செய்து வடிகட்டி சாப்பிட்டு வர விந்து ஊறும், ஆண்மை பெருகும், உடற் பொலிவு உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி அதிகதிக்கும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு

       கொடி வகையைச் சேர்ந்த இது மெல்லிய நீண்ட இலைகளையும், வளைந்த கூரான முட்களையும் சாறு நிறைந்த கொத்து அமைப்புடைய கிழங்குகளையும் உடையது. வேலிகளில் ஏறி வளரும் தன்மை உடையது.









சிறுநீரைப் பிரித்தெடுப்பதில் சிறு நெருஞ்சில் , சிறு பீளை போன்று சிறப்பாகச் செயல்படும், அதனால் சிறுநீர் பாதைகளில் ஏற்படும் எரிச்சல், சுருக்கு , வலி போன்ற பிரச்சனைகள் தீரும். ஓரிலைத்தாமரை,  சீந்திற் கொடி போல முலைப்பால் ஊறச் செய்து உடலைப் பலப்படுத்தும். கற்பூரப்புல், வசம்பு போல இசிவு நோய்களைக் கட்டுப்படுத்தும். நிலப்பனை, வாதுமை போன்று காமத்தினை அதிகரிக்கும் தன்மை கொண்டது. கூகைநீறு, ஆலம்பால் போல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.

       புதிய தண்ணீர்விட்டான் கிழங்கெடுத்து , தோலைச் சீவிக்கழித்து, கிழங்கை இடித்துப் பிழிந்த, வடிகட்டிய சாறு 50 மி.லியுடன் பாதியளவு தேன் சேர்த்து நன்றாங் கலந்து பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும், வாயிலிருந்து வயிறுவரை பித்த கோபத்தினால் உண்டான புண்கள் ஆறும்.வயிற்று வலி தீரும். 

    

அமிர்தவல்லி (எ)  சீந்தில்

      தோப்புகளின் வேலிகளிலும், காடுகளிலும் காணப்படும் தக்கையான ஆனால் சாறு நிறைந்த தண்டினை உடைய பற்றி ஏறும் கொடியினத்தைச் சார்ந்தது, இதன் இலைகள் இதயம் போன்ற வடிவினனைக் கொண்டவை. இதன் வேர்கள் அறுபட்டாலும் உயிர் வாழும் சக்தி படைத்தவை.  இக்கொடியின் வேர்கள் அறுபட்டாலும், அதன் தண்டிலிருந்து மெல்லிய விழுதுகள் இறங்கி கொடி காயாது காப்பாற்றும். 


சீந்தில் இலை



சீந்தில் கிழங்கு



மறைமொழிகள்

   சதாவேரி, கருடன் கிழங்கு, ஆகாசவல்லி, சாகா மூலி



தன்மைகளும் நன்மைகளும்

       இளநீர், கொள்ளு போன்று சிறு நீரைப் பிரித்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலப்படுத்தும். நன்னாரியைப் போல், வேப்பமரத்து விதையைப் போல உடலிலுள்ள நோய்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தும்.ஆலம் விதைகள், சாதிக்காய் போல மோக உணர்வை அதிகப்படுத்தும். கரிசிலாங்கண்ணி, காப்பிக் கொட்டையப் போல பித்த நீரை அதிகமாக்கி வாத கப குற்றங்களை சமன் செய்யும். வாழைப்பிஞ்சு, மலைவேம்பு போல உடல் தாதுகளை கெட்டுப் போக விடாமல் காக்கும்.


முற்றிய சீந்தில் கொடியை நன்கு பஞ்சு போல் இடித்து அதை ஒரு பாத்திரத்தில் உள்ள குடி தண்ணீரில் நன்கு கசக்கிப் பிசைந்து,  சாறு இறங்கியபின் அந்த பாத்திரத்தை அசையாமல்  ஓரிடத்தில் வைத்துவிட்டு சில மணி நேரங்கள் கழிந்தபின் எடுத்துப் பாரக்க , பாத்திரத்தின் அடியில் வெள்ளை நிறமான மாவுபோன்ற பொருள் படிந்திருக்கும். அதை எடுத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று முறை செய்ய நல்ல வெண்மை நிறமாக இருக்கும் அதை வெயிலில் உலர்த்த. வெண்ணிறப் பொடியாய் இருக்கும் அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். இதனை முறைப்படி சாப்பிட தீராத் தாகம், எலும்புருக்கி நோய், ரத்தம் கக்கும் வியாதி, உடல் சூடு, மதுமேகம் முதலிய பிணிகள் நீண்ட நாட்கள் ஏடுத்துக்கொள்ள தீரும்.


திப்பிலி மூலம்

                திப்பிலிக் கொடியின் வேர்களே திப்பிலி மூலம் அல்லது நறுக்குமூலம் எனப்படுகிறது.

வேறு பெயர்கள்

                தண்டுமூலம், மோடிவேர், நறுக்கு வேர்,தேசாம்பரம்.


நறுக்கு மூலம்
திப்பிலி மூலம்

உடல்வலி,  ஆரம்பகட்ட மேகவியாதிகள், குரல் கம்மல் முதலின நோய்கள் தீரும்.

சுத்தி முறைகள் - Edit 1

மூலிகை, கடை சரக்கு, பாடாணங்களின் சுத்தி முறைகள்

            உன்னத சித்தர்கள், பக்குவம் இல்லாதவர்களின் கையில் இந்த வாத.வைத்தியத் தொழில் சிக்கக் கூடாது என பரிபாசை எனச் சொல்லப்படுகிற மறைமொழிகளில் சொல்லி வைத்தனர். மேலும் அதன் சுத்தி எனப்படுகிற தூய்மைப்படுத்தும் முறைகளையும் மறைத்தனர், வெங்காயத்துக்கு சுத்தி என்பது  அதன் தோலை எடுப்பதுவே. தலைமுறை தலைமுறையாக நாம் வெங்காயத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் தோலுடன் உண்டால் வயிற்று கோளாறு உண்டாகும் . அதுபோல மருந்துச் சரக்குகள் , தனிமங்கள் , உலோக ரச உபரசங்களைச் சுத்தி செய்து அதன் தீக்குணங்களை அகற்றும் முறைகளைச் சொல்ல முயல்வோம்.


ஒன்னான சரக்கு சுத்தி ஒருவரும் உரைக்கவில்லை
கண்ணான சரக்குக் கெல்லாங் கன்மமுந் தீராவிட்டால்
பண்ணான மருந்திற் சேர்த்து  பருகிடப் பிணியாளர்க்கு
கண்ணான செந்தூரங் களுட்படும் நண்ணாகாதே


பாடுகின்ற சித்தர்தம் நூல்கலெல்லாம்
   பரிபாடை தெரியாத பாவியோர்க்குத்
          தேடுகின்ற பொருளழியச் சொன்னதல்லாற்
                     றினையளவு பொன்காணச் சொல்லவில்லை
வீடிழந்து மாடிலந் துள்ள செம்பொன்
                            வேணதெல்லாந் தானிழந்து மெய்தோன்றாமல்
                    காடுறைந்து போவதற்கோ பெரியார் சொல்வார்
                                காணாமற் புதைத்த சொல்லலைக் கண்டுதேறே.


தங்கம்

  


       தங்கத்தினை தகடாய் அடித்து அதற்கு செம்மண்ணை அரைத்து தகட்டுக்குப் பூசி கவசஞ் செய்து கொல்லன் உலையில் வைத்து ஊதி பழுக்கக் காய்ச்சி கழுவ தங்கத்தின் மாசுகள் நீங்கி சுத்தியாகும்.








அக்கராகாரம்

   1.  ஒன்றிரண்டாய்த் தட்டி சிறுக வறுத்தெடுக்கவும்.

    

    2. மேல்தோலைச் சீவிப் போக்கி எடுத்துக்கொள்ள சுத்தியாகும்


அதிமதுரம்  

     நன்றாகத் தண்ணீரில் கழுவித் துடைத்து, மேல்த் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்  உலர்த்த சுத்தி.


அமுக்குறாக் கிழங்கு

1, அமுக்கிறாக் கிழங்கை இடித்துச் சூரணம் செய்து , ஒரு பானையில் பசுவின் பால் விட்டு , பானையின் வாயைத் துணியால் வேடுகட்டி , துணியின் மேல்  இடித்த சூரணத்தை வைத்து சிறுதீயாய் எரித்து , பால் சுண்டும் வரை எரித்தெடுத்து , காயவைத்து எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.



ஆனைத்திப்பிலி 

1.     ஆனைத்திப்பிலியை காடியிலாவது அல்லது செம்மறியாட்டு மூத்திரத்திலாவது ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரம் நனைய வைத்து  வெயிலில் உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.



இலிங்கம்

             A) தாய்ப்பாலில் இருபத்துநான்கு மணிநேரம் ஊறவைத்து எடுதுக் கழுவித் துடைத்து மறுபடி தாய்ப்பாலில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் இது போலவே மறுமுறையும் செய்து கழுவி எடுத்துத் துடைக்க சுத்தியாகும்

     

Lingam
லிங்கம்
        B)          ஒரு பானையில் பாதியளவ கற்சுண்ணத்தைப் போட்டு அதன்மேல் சுத்தி செய்ய வேண்டிய லிங்கத்தை பெருங்கட்டிகளாக வைத்து அதன் மேல் கற்சுண்ணாமபைப் போடடு முடியிட்டு  சீலை செய்து அடுப்பில் வைத்து ஒரு சாமம் அதாவது 3 மணிநேரம்  சிறுதீயாக எரித்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும், கைவல்யமான முறை,

        C)    ஒரு மண் மடக்கை ( தட்டு) அடுப்பி லேற்று முன் கோதுமை மாவால் (சப்பாத்தி மாவு பதம்) லிங்கத்தின் அளவைவிட பெரியதாக வட்டமிட்டு அதனுள் லிங்கக்கட்டியை லைத்து சிறுதீயாக எரித்து சற்று சூட‘டேறியதும் நாட்டுக் கோழிமுட்டை வெண் கருவால் சுருக்குக் குடுக்க வேண்டும் இப்படியே ஒரு மணிநேரம் குடுக்க லிஙக்ம் சுத்தியாகும்,


சுருக்கு குடுப்பது என்பது ஒரு பொருளை சூடு செய்து அதன்மேல் குறிப்பிட்ட திரவத்தை சொட்டுச் சொட்டாக விடுவதேயாகும். 

        D)  

நண்ணானகச் சரக்குசுத்தி நவிலுவோம் லிங்கத்துக்குப்

பண்ணான பழச்சாறோடே பருகிய பாலுங்கூட்டி

சண்ணாக மேனிச்சாறு    முன்றையுஞ் சமனாய் சேர்த்து

சுண்ணாக லிங்கத்திற்குச் சுருக்கிடச் சுத்தியாமே


        ஊமத்தன் விதை

    1. எழுமிச்சம்பழச் சாற்றை ஒரு பானையில் ஊற்றி , அதில் சுத்தி செய்ய வேண்டிய ஊமத்தன் விதைகளை துணியில் தளரத்  கட்டி சாற்றினுள் பானையின் அடி படாதவாறு தொங்கவிட்டு சிறு தீயாக 3 மணிநேரம் ( ஒரு சாமம்) எரித்து வெயிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.


2.     ஊமத்தன் விதையை மூன்று மணி நேரம்  தண்ணீரில் ஊறப் போடச் சுத்தியாகும்.


எட்டிவிதை

      1. எட்டி விதையை ஒரு துணியில் தளர்வாகக் கட்டி அதனை ஒரு பானையில் தொங்க விட்டு,  எட்டி விதைக் கீழிக்கு மேல் நான்கு விரற்கடை,  சிறு கீரையை ( சிறுரை வேர்ச்சாறு என்பது பாட பேதம் )  இடித்துப் பிழிந்த சாற்றை விட்டு,  சிறு தீயாக எரித்து மூன்று மணி நேரமான பின் இறக்கி,  விதையின் மேல்த்தோலைச் சீவிக்கழிக்க சுத்தியாகும்.

      2. வாயகன்ற பானை அல்லது காரைச்சட்டியில் மணல் பரப்பி அதன் மேல் எட்டிக் கொட்டைகளைப் பரப்பி பின் அதன் மேல் மீண்டும் மண் பரப்பி தண்ணீர் தெளித்து,  மூன்றுநாள் ஆன பின் எடுத்து தோலைச் சிவிக் கழிக்கவும். எட்டிப் பருப்பைப் பிளந்து முளையினைக் கழிக்க சுத்தியாகும்.

கவனமாக உபயோகிக்க வேண்டிய பொருள் பித்த உபரி உடலைப் பாதிக்கக் கூடும்.

3.ஒரு பானையில் கரு ஊமத்தைச் சாற்றை விட்டு,  அதன் வாய்க்கு துணியால் குழிவாக  வேடு கட்டி ,  துணியின் மேல் எட்டி விதையை வைத்து அப்பானையின் மேல் வாய் பொருந்திய மற்றொரு பானை கவிழ்த்து சிறு தீயாய் எரித்து எடுத்து , எட்டி விதையின் தோலைச் சீவிக் கழிக்கவும்.

4. எட்டிக் கொட்டையைப் பிளந்து மூன்று நாட்கள் காடியில் ஊறவிட்டுப்  பின்னர் கோணியில் ( சணல் சாக்கு) தேய்த்து எடுக்க வெயிலில் உலரவிட்டெடுக்கச் சுத்தியாகும்

5. எட்டிக் கொட்டையைக் குப்பைக் கீரைச்சாற்றில் மூன்று மணி நேரம் வேகவைத்து உலர்த்த சுத்தியாகும்

6. எட்டி விதையைத் தேற்றான் வேர் மற்றும் சாற்றில் 48 நிமிடம் ( இரண்டு நாழிகை) எரிக்கச் சுத்தியாகும்.

7, எட்டிக் கொட்டையை நெல்லில் அவித்து சிறுகீரைச் சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டுத் தேற்றான் கொட்டைச் சாற்றில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளச் சுத்தியாகும்,

ஓமம்

       சுண்ணாம்புத் தெளிவு நீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து வெயிலில் உலர்த்த சுத்தியாகும்.

கடுக்காய்

     1.  குமரி என்றழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை  மடலைக் கீறி, அதனுள் கடுக்காய்த்தூளைப் போட்டு சாய்வாக வைக்க அதிலிருந்து நீர் இறங்கும், இதை குமரி நீர் என்பர். இந்த குமரி நீரில் கடுக்காயை மூன்று நாள் ஊற வைத்து எடுத்து காய வைத்துக்கொள்ள சுத்தியாகும்.

2.     எவ்வித சுத்தி செய்தாலும் இதன் கொட்டையை/ விதையை நீக்கி விட்டு சதைப்பாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்,

3.  மஷ்த்தகி என்னும் கடுக்காயை எலுமிச்சம்பழச் சாற்றிலே நனைத்து வெயிலிலே உலர்த்தச் சுத்தியாகும் அல்லது நாய் மூத்திரத்திலே நனைத்து எடுக்க சுத்தியாகும்.




கரியபோளம் என்னும் மூசாம்பரம்

     1. வெள்ளாட்டின் சிறுநீரில் மூசாம்பரத்தைக் கரைத்து வடிகட்டி பானையிலிட்டு அடுப்பேற்றி சிறுதீயாய் எரித்து  சுண்டக் காய்ச்சி எடுக்க சுத்தியாகும்.

    2. காடியில் வேகவைக்க கரியபோளம் வெள்ளைப் போளம் சுத்தியாகும்,

    3.  கறுத்த போளம் , வெளுத்த போளம் இவற்றைக் காடி வார்த்து மூன்று மணி நேரம் அரைத்து வெயிலிலே வைக்கச் சுத்தியாகும். 


கலைமான் கொம்பு

      பாக்குச் சீவலை செதுக்குவது போல மான் கொம்பினை சீவி, அதை குப்பைமேனிச் சாற்றில் போட்டு நாள் முழுதும் ஊறவிட்டு, மறுநாள் சாற்றை மட்டும் இருத்து/ வடித்துவிட்டு, வேறு புதிய குப்பைமேனிச் சாறு விட்டு ஊற வைக்க வேண்டும். இவ்வாறே மூன்று நாட்கள் ஊறவிட கலைக்கொம்பு சுத்தியாகும்.
வெட்டிய பாக்கு

    மேற்கண்ட பாக்கு சீவல் போல் கலைக்கோடினை சீவிக் கொள்ள வேண்டும்.

         

    2. பாக்குச் சீவலை செதுக்குவது போல மான் கொம்பினை சீவி, அதை கோவை இலை போட்டு நாள் முழுதும் ஊறவிட்டு, மறுநாள் சாற்றை மட்டும் இருத்து/ வடித்துவிட்டு, வேறு புதிய குப்பைமேனிச் சாறு விட்டு ஊற வைக்க வேண்டும். இவ்வாறே மூன்று நாட்கள் ஊறவிட கலைக்கொம்பு சுத்தியாகும்.

கழற்சிக்காய்

     1. கழற்சிக்காயின் தோல் நீக்கி, அதன் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சுடு தண்ணீரில் கழுவி எடுத்து, முளை நீக்க சுத்தியாகும்.


கிராம்பு

      மொட்டுபோல் உள்ள பூவைக் கழிக்க சுத்தியாகும்.

குக்கில் என்னும் குங்கிலியம்

       1. குங்கிலியத்தை ஒருநாள் வரை மோரில் ஊறப் போட்டு எடுக்க சுத்தி

       2. குக்கிலை உருக்கி,  ஒரு பானையில் நிறைய இளநீரை விட்டு  உருக்கிய குக்கிலை சிறிது சிறிதாய் ஊற்றி எடுக்க சுத்தியாகும். அதிக சுத்திக்கு இந்தப்படியே இரண்டு மூன்று முறை செய்யலாம்.

        3. எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தினால் சுத்தியாகும்


        4. கடுக்காய், நெல்விக்காய், தான்றிக்காய் இவற்றின் குடிநீரில் (கசாயம்), குங்கிலியத்தை மூட்டை கட்டி  ஊறப் போடச் சுத்தியாகும். இதே குடிநீரில் , கீழி கட்டி  ,  தோலா எந்திரமாக எரித்தெடுக்க சுத்தியாகும் என்பது வேறு முறை,


        5. பேய்ப்புடல், வேப்பம்பட்டை, ஆடாதோடை இவற்றைச் சரி அளவு கூட்டி நீர் விட்டு கொதிக்க வைத்து வடித்து  அதில் குக்கில் பொடியைக் கலந்து வைக்கச் சுத்தியாகும்.


        6.  வேப்பம்பட்டையை இடித்துக் குடிநீராக்கி அதில் குங்கிலியத்தைத் தோலாயந்திரமாக கீழி கட்டி காய்ச்சிப் பிழிந்து எடுத்துக் கொள்வும் பின்னர் பூவரசம்பட்டை அல்லது பூவரசம் பூவில் கசாயம் வைத்து அதில் காய்ச்சிக் கொள்ள சுத்தியாகும்.


        7.  திரிபலை. தேவதாரம். பேய்ப்புடல் இவற்றை இடித்துக் கசாயம் செய்து அதில் குக்கிலைக் கீழி கட்டி இட்டு பனிரெண்டு மணி நேரம் எரிக்கவும், பின்பு பேய்ப்புடல், பத்திரி , வேம்பின் பட்டை இவற்றைக் கசாயம் செய்து அதிலிட்டுக் காய்ச்சிக் கொள்ள சுத்தியாகும்.

        8. வேப்பம்பட்டை, கண்டங்கத்திரிவேர் , பேய்ப்புடல், ஆடாதோடை இலை இவை இவை வகைக்கு 35கி கூட்டித் துவைத்து 2லி தண்ணீரில் போட்டு எட்டிலொன்றாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும், பானையில் வேடுகட்டி குங்கிலியம் மேலே வைத்து மூடி எரியவிட்டு மெழுகு பதமாக இறக்கவும், அந்தத் தண்ணீரில் குஙகிலியத்தைக் கழுவ சுத்தியாகும்.


கொத்தமல்லி விதை

       இளஞ் சூட்டில் நன்றாக வறுத்துத் தேய்த்து புடைத்தெடுக்கவும்.


சாதிக்காய்

         சாதிக்காயின் மேல்த் தோலினை சீவி, ஒரு சட்டியில் நெய் விட்டு சிறு தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.


சிவதை வேர்

        1. வேர், கிழங்குகளின் பொது விதியான தோலைச் சீவிக்கழித்து, நடு நரம்புகளை நீக்கி, சிறுதுண்டுகளாக்கி,  புட்டவியல் முறையில் பாலில் அவித்து எடுத்துக்கொள்ள சுத்தி.


சீரகம்

      1.  வேறு பொருட்கள், தூசு தும்பு இல்லாமல் ஆய்ந்து, வாசனை கிளம்பும்படியாக வறுத்து எடுக்க சுத்தியாகும்.


        2. சீரகம் கருஞ்சீரகம்  இவற்றைச் சுண்ணாம்புத் தெளிவு நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.


சுக்கு

    1.  நல்ல சதைப்பற்றான. தரமான சுக்கின் மேற்றோல் நீக்கி, சுண்ணாம்புத் தெளிநீரில் ( சுக்கு என்னும் post பார்க்கவும்) ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வெயிலில் காய வைக்கவும்.

        2.  சுக்கை நொச்சிச் சாற்றில் ஒன்பது முறை நனைத்து எடுக்கச் சுத்தியாகும்.


        3.  சுக்கைத் தோல்போக்கி சுண்ணாம்பு பூசி மூன்றுமணி  நேரம் வெயிலில்  உலர்த்திக் கழுவி எடுக்கச் சுத்தியாகும். 


        4. மாச்சுக்காகத் தேர்ந்தெடுத்து கற்சுண்ணத்தில் சேர்த்துத் தாளித்துக் கழுவி எடுத்து மேற்றோலைச் சீவி நீக்கிக் கொள்ள வேண்டும்,


திப்பிலி

         1. சித்தர் மூலம் என்னும் கொடிவேலி வேரினை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எட்டொன்றாய்க் குறுக்கி, அதை வடித்த கியாழத்தில் திப்பிலியை ஊற வைத்து எடுத்து உலர்த்த சுத்தியாகும்.

        2.  திப்பிலியை எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவைத்து எடுக்க  சுத்தியாகும்.

        3. திப்பிலியை செம்மறியாட்டுக் கோமியத்திலாவது , காடியிவாவது  மூன்று மணி நேரம் ஊறவைக்க சுத்தியாகும்.


தேத்தான் கொட்டை /தேற்றான்விதை 

     1.  ஒருநாள்  தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்து, கொட்டையின் மேல்தோலை  ஓட்டு வில்லையின் மேல் தேய்த்த பின் அதை சுத்தமான நீரில் கழுவித் துடைத்து எடுத்துக்கொள்ள சுத்தி.

        2. தேத்தாங்கொட்டையைப் பசுவின் பாலில் ஊறவைத்து நீரில் கழுவி உலரவிட்டு எடுக்க சுத்தியாகும்.


தேன்

      திறமான தேனை சட்டியிலிட்டு சூடு செய்து, நுரை நீக்கி வடிகட்டி எடுக்க மாசு புழுக்கள் நீங்கி ஒருவாறு சுத்தியாகும்.

நெல்லி வற்றல்/ நெல்லிமுள்ளி

      1. நெல்லி வற்றலை பசும்பாலில் வேக வைத்து கொட்டை நீக்கி உலர்த்த சுத்தியாகும்.


புகையிலை  

        புகையிலையை,  அகத்திக்கீரையின் நடுவே வைத்து நீர் விட்டு சிறிது நேரம் எரித்து எடுக்க சுத்தியாகும்.

பூரம் (எ)  ரசகற்பூரம்

     A)  கல்சுண்ணாம்பை ஒரு பானையின் பாதியளவு போட்டு அதன்மேல் பூரத்தைக் கட்டியாக வைத்து பானையில் மீதமுள்ள கற்சுண்ணத்தைப் போட்டு அழுத்தி, பானையின் வாயை மண்தட்டு கொண்டு   முடி , அடுப்பேற்றி சிறுதீயாக ஒரு சாமம் எரிக்க ரசகற்பூரம் சுத்தியாகும்

       B)   வெற்றிலை, பாக்கு சேர்த்து இடித்து அதைக் கியாழம் எனப்படும் கசாயம் என்னும் குடிநர் செய்து , அந்தக் குடிநீரில் ரசகற்பூரத்தை ஊறவைக்க வேண்டும், இவ்வாறாக 3 நாள் ஊறவைத்துப் பின், ஊறவைக்கப்பட்ட பூரத்தை ஒரு துணியில் கட்டி, அதே குடிநீரில் தோளாயெந்திரமாக, அதாவது துணியில் கட்டப்பட்ட( கீழி) பூரத்தை அதே குடிநீரின் மட்டத்துக்கு மேலே இருக்குமாறு மேல்முடியில் துளையிடடு கயிறு கட்டி தொங்க விட வேண்டும . பின் சிறு தீயாக எரித்து  அவித்து எடுக்க சுத்தியாகும்,


     

ரசகற்பூரம்
பூரம்


பூலாக்கிழங்கு  

       மேல்த்தோல் சீவி வெயிலில் காயவைத்து ஏடுக்கவும்.


பெருங்காயம் 

       1. பெருங்காயத்தைப் பொடித்து,  சட்டியை அடுப்பிலேற்றி சிறிதளவு நெய்விட்டு சிறுதீயில்  பெருங்காயத்தைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

        2. பெருங்காயத்தை  வெற்றிலைச் சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவைத்து உலர்த்த சுத்தியாகும்.

        3. பெருங்காயத்தை தாமரையிலைத் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து  வெயிலில் உலர்த்த சுத்தியாகும்.

        தாமரையிலைச் சாற்றிலே மூன்று மணிநேரம் அரைத்து வெயிலிலே வைக்கச் சுத்தியாகும்.

        4. பெருங்காயத்தை தாமரைக்கிழஙகு சாற்றில் அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாகும்.

        5. பெருங்காயத்தை விளக்கெண்ணையில் வேக வைக்க சுத்தியாகும்.

        6. பெருங்காயத்தை ஆட்டுப்பாலில் வேகவைக்க சுத்தியாகும்.

மாசிக்காய்   

      1.  பசுவின் நெய்யை சூடாக்கி மாசக்காயைப் போட்டு அது பொரிந்து,  வெடிக்கும் பக்குவத்தில் எடுக்க சுத்தியாகும்.

       2. மாசிக்காயை கொட்டை நீக்கி ,  தேன் வார்த்து அரைத்து உருட்டி வளைத்துச்சுற்றி இரட்டைப் புடவையில் கட்டி கொள்ளுச்சாறு , கோமூத்திரம், காடி  இவைகளிலே தோலாயந்திரமாக நாற்பத்தெட்டு மணிநேரம் எரிக்கச்சுத்தியாகும். 


மிளகு

      1. பழைய சோற்று நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்

      2. சட்டியிலிட்டு சிறு தீயாக எரித்து, வறுத்து,  வாசனை வந்தவுடன் இறக்கி ஆற விடவும்.

       3.  மிளகை கரிசலாங்காணிச் சாற்றில் ஏழு முறை நனைத்து எடுக்கச் சுத்தியாகும்.

        4. மிளகை. நெல்லிக்காய்ச் சாற்றில் ஊற வைக்கச் சுத்தியாகும்.

        5. மிளகைக் காடியில் ஊறப்போட்டு வெயிலில் வைக்கச் சுத்தியாகும்.

        6. மிளகைப் புளித்த மோரில் ஒன்றே கால் மணி நேரம் ஊறப்போட்டு உலர்த்தி வறுக்கச் சுத்தியாகும்.

        7. மிளகை எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாகும். 


முத்து

      ஊமத்தை இலையை இடித்தெடுத்த சாற்றில் துளையிடப் படாத நன்முத்தினை ஒருநாள் முழுவதும் ஊறப் போட்டு, மறுநாள் புளிய மரத்து இலையை இடித்து வடித்த சாற்றில் ஒரு பொழுது ஊற வைத்து எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்க சுத்தியாகும்.


வீரம்

மருத்துவர் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே, பொது மக்களுக்கு இல்லை. 

    A)     தென்னை மரத்தின் குரும்பைகளை இடித்து சாறு எடுத்து வடித்து அதனை ஒரு மட்கலத்தில் ஊற்றி வீரத்தை ஒரு துணியில் கட்டி அதை அந்த மட்கலத்துக்குள் செலுத்தி மட்கலத்தை தொடாதவாறு தொங்கவிட (தோளா எந்திரம்)  வேண்டும், பின் சிறுதீயாக எரிக்க வீரம் சுத்தியாகும், இதன் புகை நஞ்சாகையால் புகை கண்ணிலும், மூக்கிலும் படாதவாறு மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். பாதுகாப்பு வழி முறைகளையும் , பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும்.

Veeram
வீரம்



  வீர முறிவு


            வீர நஞ்சாகிவிட்டால் உடனடியாக இதைக் குடுக்க வேண்டும்


 
         சாறு எடுத்துக் குடுக்க வேண்டியவை  -  தேங்காய்ப்பபால்., பழரசம், தென்னங்கள், நீலி, நெருஞ்சிச்சாறு, கறுபசளை,

கியாழம் அதாவது கசாயம் செய்து குடுக்க வேண்டியவை  - மிளகு, பேய்ப் பீர்க்கு.

அப்படியே குடுக்க வேண்டியவை - நல்லெண்ணெய், கம்மாறு வெற்றிலை, எருமை வெண்ணை, முட்டை வெள்ளைக் கரு, 

அனைத்து  மருந்துகளையும் மணிக்கொரு தரம் குடுக்க வேண்டும்,
                                                                  

வெள்ளை வெங்காயம் 

    வெள்ளை வெங்காயம் முளை வாங்கச் சுத்தியாகும் 


அ,க,சூ  -  ளருய / 1887

சரக்கு சுத்தி செய்முறைகள், சித்த மருத்துவ நுல் வெளியீட்டுப் பிரிவு , இந்திய மருத்துவத் துறை , ஓமயோபதித் துறை

    இணையம்