பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


நெல்லிக்காய் இளகம்

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

            குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு, தானாகவே கெடும்,

                            - திருக்குறளும், கலைஞர். மு.கருணாநிதி உரையும்.

நெல்லி
நெல்லிக்காய்


                        நெல்லிக்காய் இளகம்

                                        ( வைத்தியச் சில்லறைக் கோவை )

1. நெல்லி வற்றல்                                 2500 கிராம்

2. தண்ணீர்                                              21.5 லிட்டர்

3. சர்க்கரை                                            350 கிராம்

4. சுக்கு                                                     35 கிராம்

5. திப்பிலி மூலம்                                 35 கிராம்

6. கிராம்பு                                               35 கிராம்

7.  ஓமம்                                                   35 கிராம்

8. தக்கோலம்                                        35 கிராம்

9. ஏலம்                                                    35 கிராம்

10. வெண் குங்கிலியம்                    35 கிராம்        

 11. பூனைக்கண் குங்கிலியம்      35 கிராம்

12. வாய் விளங்கம்                            35 கிராம்

13. சீரகம்                                                35 கிராம்

14. கொத்துமல்லி                               35 கிராம்

15. கூகைநீறு                                        35 கிராம்

16. அதிமதுரம்                                      35 கிராம்

17. நெய்                                                  1400 மி.லிட்டர்

செய்முறை

                           முதல் இரண்டு சரக்குகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்து எட்டொன்றாக ( அதாவது 2700 மி.லி ஆக ) வற்ற வைத்து வடித்த கியாழத்தில் சர்க்கரை சேர்த்துக் கரைத்து,  வடித்து , பாகு செய்து, அதில்  16 வரையிலான  சரக்குகளைச் சூரணம் செய்து தூவி, அதில் நெய்  1.4 லி விட்டுக் கிளறி  மெழுகு பதத்தில் எடுத்துப் பத்திரப்படுத்தவும். 

அளவு

             2 -  4 கிராம்.


தீரும் நோய்கள்

மேக நோய்


1. மேகம்  -  மேகநோய் ,  Venereal  disease. ; இளமைப் பருவத்தில்   பெண்களை மோகித்து, தினம் போகம் செய்வதாலும், மந்தம் ,பசி, செரியாமையா யிருக்கும் பொழுதும், அகாலங்களிலும், முறை தவறி புணர்ச்சி செய்வதால் ஏற்படும் ஓர்நோய். 

            மேகநோய் கொண்டவர்களின் சம்பந்தத்தினால், மூத்திரத்திலும் , மூத்திரத் தாரையிலும், மூத்திரப்பையிலும், , மூத்திரக்குண்டிக்காயிலும் காணப்படுகிற ஒரு நோய்க்கிட்ட பொதுப்பெயர்.   

2. என்புச் சுரம்

3. உழலை  - பெருந்தாகம், Intense thirst  Anadipsia ; dipsosis

4. காந்தல்  

5. நிணக் கழிச்சல் - ( நிண= கொழுப்பான ) 

6. பொருமல் -  வயிற்றுப்பொருமல் wind noise in stomach. Owing to indisestion  - flatulency 

7. இருமல் 

8. என்புருக்கி நோய்   - எலும்பைத் தாக்கும் நோய் இதனால் உடம்பு இளைக்கும். சாதாரணமாக எலும்புகளைத் தாக்கி, உடம்பின் சதைப் பாகங்களை மெலியச் செய்யும் நோய்களுக்கே இப்பெயர் பொருந்தியதாயினும், வேறுவகை நோய்களினால் எலும்புகளுக்கு யாதொரு கெடுதியுமில்லாமலே , உடம்பு மட்டும்   மெலிவடைந்து அதனால் எலும்பு பாகங்கள் வெளித்தோன்றும் படிச் செய்யும் நோய்களுக்கும் , இதுவே காரணப் பெயராக விளங்கும். 

9. ஈளை  -  சுவாசக் குழல்கள் சுருக்கமடைந்து அதனால் மூச்சு தாராளமாய்ப் போக இடமில்லாமலும், நெஞ்சில் கபம் அடைத்துக் கொண்டும், துன்புறுத்து மோர் வகைச் சுவாசநோய் . Brcnchitis. 

                    எப்போதும் இருமலுடன், கோழையும், கபமும், இடைவிடாது உற்பத்தியாகி, பூனைக்குட்டி சத்தத்தோடு மூச்சுவிட துன்பப்படச் செய்யும் ஓர் நோய். Bronchial astma.                                                                                   


சித்தம்.                

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி