பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


வெண்பூசணி இளகம்

                நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

                உண்மை யறிவே மிகும்

          ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும்  , அவனுக்குப் பின்னும் அவன் ஊழாகிய பேதமை (அறியாமை) அறிவே மேம்பட்டு நிற்கும்.     

                            - திருக்குறளும், திருக்குறளார் வீ.முனுசாமி  ஐயா உரையும்.



                            வெண்பூசணி இளகம்

                                        (அகஸ்தியர் வைத்திய ரத்னச் சுருக்கம்)  பா.சி.ம.செ.கு


வெண்பூசணி
வெண்பூசணிக்காய்

தேவையான மருந்து சரக்குகள்

1. வெண்பூசணிக் காய்ச்சாறு            5600 மி.லி

2. தாழைவிழுதுச்சாறு                            1400 மிலி

3. தென்னம்பூச் சாறு                                1400 மிலி

4. பழச்சாறு                                                  1400 மிலி

5. பசும்பால்                                                  1400 மிலி

6. சர்க்கரை                                                  350 கிராம்

7. சீரகம்                                                            35 கிராம்

8. கொத்துமல்லி                                            35 கிராம்

9. கோட்டம்                                                      35 கிராம்

10. மிளகு                                                           35 கிராம்

11. மாசிக்காய்                                                35 கிராம்

12. ஏலம்                                                             35 கிராம்

13.  சாதிக்காய்                                                35 கிராம்

14. சாதிப்பத்திரி                                            35 கிராம்

15. அதிமதுரம்                                                35 கிராம்

16. தாளிசபத்திரி                                           35 கிராம்

17. நெய்                                                             700 மி,லி

18. தேன்                                                             700 மிலி


செய்முறை

                எண் 1 முதல் 6 வரை உள்ள சரக்குகளைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பேற்றி, பாகுபதம் வந்தவுடன் , எண் 7 முதல் 16 வரையுள்ள சரக்குகளைப் பொடித்து சலித்து, பாகில் தூவிக் கிண்டி , நெய்யும் பிறகு தேனும் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.

மருந்தின் அளவு 

                        5 முதல் 10 கிராம்

தீரும் நோய்கள்

1. காமாலை ( மஞ்சள் நோய் )  

2. ஊதல்  - இந்நோய் வாதம் தொடர்பான வியாதியாகும். உடம்பில் குளிர்படும் போது வாதநோயினால் வீக்கம் உண்டாவது.

3. என்புச் சுரம் 

4. என்பு வெட்டை

5. பிரமியம் - பிரமேகம் - அனேக நேரங்களிலும் பெண்கள் தொடர்பில் ஈடுபடுவதாலும், தம்பனச்சூடு, மன வருத்தம் ஆகிய இவைகளினால் பிறந்து, முதுகந் தண்டெலும்புகளைப் பற்றி பின் நாபியைச் சுற்றிக்கொண்டு குய்யம் மூலாதாரத்தை  அணுகி சோணிதத்தில் கலந்து அடிவயிற்றில் இசிவை உண்டாக்கி மிதமிஞ்சி மூத்திரம் பலவாறாக வெளிப்படும் ஒருவித மேகநோய். இதனைத் தமிழில் வெள்ளை, நீரொழுக்கு என அழைப்பர்.

6. நீர்ச்சுருக்கு  -  நீரெரிச்சல் - சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல்  -  burning sensation while passing urine ; Dysuria

7. வெப்பு நோய் 


சித்தம்.     

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி