பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அமெரிக்காவிலும் அஞ்சறைப் பெட்டி

அமெரிக்க நண்பர்கள் "இங்கு பல மூலிகைகள் கிடைப்பதில்லை, ஆனால் கிடைக்கும் மளிகை, கீரைகளைக் கொண்டு எப்படி  சிலபல வியாதிகளைக் குணப்படுத்துவது ? " என்றனர் அவர்களுக்காக...
அஞ்சறைப் பெட்டி மூலம் சில பெரிய பிணிகளுக்கு கூட தீர்வு.

தலைச் சுற்றல் (BP)

        பித்தம் அதிகரித்தால் இரத்தத்தின் நீர்மைத் தன்மை அதிகமாவதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும், பித்தம் தலைக்கு ஏறுவதால் மயக்கம், கிறுகிறுப்பு உண்டாகும்.

         ஒன்று அல்லது இரண்டு அங்குல இஞ்சியை (Ginger) எடுத்து அதன் மேல்தோலை சீவிக் கழித்து, அரைத்து, அந்த விழுதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி,  சிறிது நேரம் அசையாமல் வைத்திருக்க வேண்டும். சற்றொப்ப அரை மணி நேரம் கழிந்தபின் அதன் தெளிவை மட்டும் இறுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி திறமான தேன் (Honey) சேர்த்து கலக்கி குடித்து வரவும்.  ஒரு மண்டலம் அளவு கொள்ள பித்த வீறு தணியும்.தலைச்சுற்றல் , கிறுகிறுப்பு நீங்கும். 

மூலம்/Piles.

      மூலச் சூட்டின் காரணமாக, எருவாயில் முளைகள் ( உள்மூலம், வெளி மூலம்) உண்டாகி வலியுடன், இரத்தமும் போகும், அதற்கு மருந்தாவது...


சுக்குத் தூள்                      - 35 கிராம்
(Dried Ginger Powder)

கடுக்காய்ப் பிஞ்சு தூள்- 17¹½ கிராம்
(Terminalia chebula, commonly known as black- or chebulic myrobalan)

எருமைத் தயிர் - தேவையான அளவு

நெய் -  தேவையான அளவு.
(The word curd is used in Indian English to refer to homemade yogurt)


தேவையான சுக்கு எடுத்து ( வாய்ப்பிருந்தால் அதற்கு  சுண்ணாம்பு குழைத்து பூசி  அடுப்பில் வாட்டி பின் சுக்கின் மேல்தோலை சுண்ணாம்போடு சீவிக் கழிக்கவும்) பொடித்து துணியிலோ, வடிகட்டி மூலமாகவோ வடிகட்ட வேண்டும்,  சுக்கின் நார்களை தவிர்க்க வேண்டும்.

பிஞ்சுக் கடுக்காய் கிடைக்காவிட்டால், கடுக்காயை உடைத்து தோலை மட்டும் எடுத்துக் கொண்டு (விதையை கண்டிப்பாக நீக்கவும்) அதைப் பொடித்து வடிகட்டவும்.

சுக்கு மற்றும் கடுக்காய்ப் பிஞ்சு தூள்களை அளவுப்படி  தயிரில் ( வாய்ப்பு இருந்தால் எருமைத் தயிர்) மூன்று மணி நேரம் ஊற வைத்து, அதை வெண்ணை போல மைய அறைத்துக் கொள்ளவும் .  ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக பசுவின் நெய்விட்டு அரைத்த விழுதை இட்டு இள வறுப்பாக வறுத்து ஆறவிட்டு , பின்பு முன்பு போல் வேறு தயிர் விட்டு வறுத்த மருந்தை  மூன்று மணி நேரம் ஊற விட்டு மறுபடி பசுவின் நெய்விட்டு இளவறுப்பாக வறுத்து, மூன்றாவது முறையாகவும் தயிரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து பசுவின் நெய்யினால் பொன் வண்ணமாக வறுத்து ஆறவிட்டு வெண்ணை போல் அரைத்து  சுண்டைக்காய் அளவுள்ள உருண்டைகளாக செய்து கண்ணாடி, பீங்கான் கலனில் பத்திரப்படுத்தவும்.

       ஒரு உருண்டையை எடுத்து அதற்குத்தக்க தேன் அல்லது நெய் சேர்த்து கலக்கி உண்டு வர மூலம் என்னும் எருவாய்முளை நோய் மற்றும் சீதபேதி நீங்கும்.

வயிற்று கோளாறுகள்

     வயிற்றின் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கது செரிமானம் ஆகாமை, பசி இல்லாது இருத்தல் . மேலும்  வாயு அதிகரித்ததால் உடல் முழுதும் ஏற்படும் வலி ஆகியவை தீரும்.

1. சுக்கு                          -35 கிராம்
     Dried Ginger 
2. திப்பிலி                    - 35 கிராம்
     Long pepper
3. மிளகு                       - 35 கிராம்
     Pepper
4. சீரகம்                         -35 கிராம்
      Cummin.                   
5. கருஞ்சீரகம்           -  35 கிராம்
     Black cummin/ kala jeera
6. இந்துப்பு                   -35 கிராம்
      Himalayan salt
7. ஓமம்                           -35 கிராம்
      Trachyspermum ammi
8. பெருங்காயம்         -8.75 கிராம்
      asafoetida

செய்முறை
1 முதல் 8 வரை உள்ள சரக்குகளை ( வாய்ப்பிருந்தால் சுத்தி என்னும் தலைப்பிட்ட போஸ்டில் சொல்லி உள்ளபடி, சரக்குகளைச் சுத்தி செய்து மருந்து செய்ய 100% பலன் குடுக்கும்) தனித்தனியே வறுத்துப் பொடித்து தூள் செய்து, வடிகட்டி, அளவுப்படி நிறுத்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒன்று அல்லது ஒன்னரை டீஸ்பூன் அளவு எடுத்து சாப்பாடு சாப்பிடும் முன் ஒரு கவள சாப்பாட்டில் இந்த மருந்தை போட்டு சிறிது நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டு பின்னர் சாப்பாடு சாப்பிட வயிற்றில் குடலில் எந்த கோளாரும் வராது.

ஆஸ்த்மா வியாதி உடையவர்கள் வயிற்றில் உப்புசம் கண்டபோது இம்மருந்தை சுடு தண்ணீர் அல்லது தேனில் சாப்பிட நல்ல பலனைத் தரும்.

ஒரு முறை மருந்து செய்தால், மூன்று மாதங்கள் வரை இது கெடாது. வெயிலில் வைத்து வரவும்.

அனைத்து சரக்குகளும் Amazonல் கிடைக்கிறது.

 
Long pepper
திப்பிலி




காலா ஜீரா
கருஞ்சீரகம்

கடுக்காயின் பிஞ்சு
கடுக்காய்ப் பிஞ்சு


ஓமம்

இந்துப்பு



சுக்கு இளகம்/ சுக்கு லேகியம்

தேவையானவை
 
சுக்கு (தோல் நீக்கியது)- 3500 கிராம்
Dried Ginger
2.  ஓமத் தூள்               -700 கிராம்
Trachyspermum ammi
3. கருவேப்பிலைத் தூள் - 700 கிராம்
Currey leaves.  
4. சர்க்கரை                    - 700 கிராம்
Sugar
5. நெய்                              - 350 கிராம்
Ghee

        மேல்த்தோல் நீக்கிய சுக்கை இடித்துப் பொடித்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு பதினாறு படி தண்ணீர்விட்டு அடுப்பேற்றி இரண்டு படியாக சுண்ட வற்ற வைத்து, இறக்கி ஆறவிட்டு,  இளஞ் சூட்டில் அதைப் பிசைந்து வடிகட்டித் திப்பி நீக்கிய கியாழத்தை எடுத்து வைத்துக் கொள்க.
      அந்த கியாழத்தில் மேற்சொன்ன சர்க்கரையைக் கரைத்து அடுப்பேற்றி பாகுசெய்து, பாகுபதத்தில் ஓமத்தூள் மற்றும் கருவேப்பிலைத் தூள்களை சிறுக சிறுக போட்டுக் கிண்டி, அனைத்து தூள்களையும் போட்ட பின் நெய்யையும் விட்டு நன்றாகக் கிண்டி ஆறின பின் கண்ணாடி அல்லது பீங்கான் கலன்களில் பத்திரப் படுத்தவும்.

மருந்தளவு
      அரு நெல்லிக்காய் அளவு முதல் பெருநெல்லி அளவு வரை எடுத்துக் கொள்ளலாம்.

தீரும் பிணிகள்

- நீடித்த மூலம் (piles)
- வாயு தொடர்பான பிணிகள்         
   (stomach gas problems)
- அனைத்து பேதிகள் ( Diarrhea)
-   கைகால் முடக்கு வாதம் ( Stroke)
- பசியின்மை (Anorexia)
- இரைப்பை (stomach)தொடர்பான பிணிகள் அனைத்தும் நீங்கும்.

மூச்சுக் குழாய் அழற்சி/ அதிகாலை இருமல்

       அதிகாலை நேரமாகிய 4 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து,  இரண்டு மூன்று மணிநேரம் இருமல் வந்து தொல்லை குடுக்கும், மருந்துக்கும் கட்டுப்படாது. இதை bronchitis என்பர்


மருந்து
    கடுகை (Mustard) பட்டுப் போல் அரைத்து ஒரு சிட்டிகை (pinch) எடுத்து தேன் கலந்து சாப்பிட இரண்டு வேளைகளிலேயே குணமாகும்.


கல்லீரலில் கொழுப்பு சேராதிருக்க...


1. சுத்தி செய்த சுக்குதூள்     - 10 கிராம்
2. கறிவேப்பிலை                      - 50 கிராம்
3.துவரம் பருப்பு                        - 200 கிராம்
4. உப்பு                                          -வேண்டிய அளவு

       கறிவேப்பிலையை நெய்யில் வறுத்து சித்தப்படுத்திக் கொள்ளவும்.
      சுக்கு, கறிவேப்பிலை, து. பருப்பு,  உப்பு அனைத்தையும் தனித்தனியே பொடித்து வடிகட்டி ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொண்டு , சாப்பாடு உண்ணும் போது முதல் சில கவளங்கள் இந்தப் பொடி போட்டு நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட ருசியாகவும் இருக்கும், பசியைத் தூண்டும், கல்லீரலில் கொழுப்பு சேர விடாது.

( சுத்தி முறைகளை முறையாகச் செய்ய,  சுத்திகள் என்னும் போஸ்ட் பாருங்கள், blogஐ follow செய்யுங்கள்)

வாதநோய் , பக்கவாத வகைகள் - பாகம் 1

             காலம் போன காலத்துல வாதம் வந்தது என்பது ஒரு கிராமிய சொலவடை அதற்கு தாங்க முடியாத துயரம் தாங்க முடியாத நேரத்தில் வந்தது என்பதாம். வாதம் அவ்வளவு கொடுமையான நோய், அது ஏன் ஏற்படுகிறது அதன் வகைகள் என்னென்ன அதன் அறிகுறிகளையும் பார்ப்போம்.

Vadham





வாதம்னா என்ன?

                நரம்புகளின் துவாரத்தில் கெட்ட நீர் தஙகி , அக்கெட்ட நீர் தசையில் ஊறி   வாயு அதிகரித்து வலி , சோர்வு, உடல் முழுதும் பற்றி வாயு உண்டாவது வாதம் எனப்படும். அதன் அறிகுறிகள் என்னவெனில் உடல்,கை,கால் நொந்து, அதிக சோம்பலாகவும், தூங்கிக்கொண்டே இருக்கும்.

வாதத்தின்  வகைகள் என்ன?

= துடிவாதம்

=நடுக்குவாதம்

=அண்டவாதம்

=சந்து வாதம்

=ஓடு வாதம்

=தோல்வாதம்

=பக்கவாதம்

=கழுத்து வாதம்

=சிரசுவாதம்

=தம்பனவாதம்

=தந்தவாதம்

=சுரணிவாதம்

=அகுலி வாதம்

=முன்கை வாதம்

=வதன வாதம்

=அரை வாதம்

=வருளை வாதம்

=துடைவாதம்

=முழங்கால்வாதம்

=கெண்டைவாதம்

=குதி வாதம்

=தாடைவாதம்

=தண்டுவாதம்

=வாணவாதம்

=தனுர்வாதம்

=அசீரணவாதம்

=சுரோணிலவாதம்

=கபவாதம்

=குடல்வாதம்

=சுழல்வாதம்

=திமிர் வாதம்

=முகவாதம்

=சஙகுவாதம்

=சோளவாதம்

=எரிவாதம்

=நெஞசிற் குத்து

=விலாக்குத்து

=மூச்சுக்குத்து

=முலைக்குத்து

=நரம்பு பிடிப்பு 

=உள்ளங்கால் குத்து

வாதம் 80 ,84 உன்று பல ஆய்வாளர்களால் பலவாறு சொல்லப்பட்டாலும் ,  தமிழ் பெயர்கள் குறைவாகத்தான் கிடைத்தன . வேறு இடங்களில் இருக்கக் கூடும்.ஆய்வு தொடரும்.


சுத்தி முறைகள் பாகம் 2 .

சித்தர்கள் அறிவுரை


ஒன்னான சரக்கு சுத்தி ஒருவரும் உரைக்கவில்லை
கண்ணான சரக்குக் கெல்லாங் கன்மமுந் தீராவிட்டால்
பண்ணான மருந்திற் சேர்த்து  பருகிடப் பிணியாளர்க்கு
கண்ணான செந்தூரங் களுட்படும் நண்ணாகாதே


                        பாடுகின்ற சித்தர்தம் நூல்கலெல்லாம்
                           பரிபாடை தெரியாத பாவியோர்க்குத்
          தேடுகின்ற பொருளழியச் சொன்னதல்லாற்
                     றினையளவு பொன்காணச் சொல்லவில்லை
வீடிழந்து மாடிலந் துள்ள செம்பொன்
                            வேணதெல்லாந் தானிழந்து மெய்தோன்றாமல்
                    காடுறைந்து போவதற்கோ பெரியார் சொல்வார்
                                காணாமற் புதைத்த சொல்லலைக் கண்டுதேறே.

சித்தர்களின் அறிவுரைப்படி  மருந்துப் பொருட்களின் தீக்குணம் நீக்க, பரம்பரை சித்த மருத்துவர்களும்  சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவ மாணாக்கர்களும் இந்த BLOGஐ பின் தொடர்ந்து படித்து பயன் பெறலாம். 

குரோசாணி ஓமம்

        1.  இதனை மணலில் போட்டு நன்றாய்த் தேய்த்துப் புடைத்து உமியை நீக்கிக் கொள்ள வேண்டும்.
Omam
குரோசாணி ஓமம்

கொம்பரக்கு

        1. இதை கீழி கட்டி   நல்ல நீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும் , இவ்வாறு மூன்று முறை செய்துகொள்ளச் சுத்தியாகும்.
Kombarakku
கொம்பரக்கு


சீந்திற்கொடி



        1.  கொடியின் மேல்த் தோலை நீக்கி எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.


Seenthil kodi

Seenthil kodi
சீந்தில் கொடி


சேங்கொட்டை

        1.  ஒருநாள் முழுவதும் நல்ல தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் எடுத்துக் கொள்ள சேங்கொட்டை சுத்தியாகும். பால் நம் உடம்பில் பட்டுவிடாமல் மூக்கு போன்ற பகுதியை வெட்டி எரிந்து விட்டு சாணிப் பாலில் போட்டு கொதிக்க வைத்துக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். 

        2. சேங்கொட்டை மூக்கை வெட்டி நல்லெண்ணையில் வறுக்கச் சுத்தியாகும்.

Senkottai
சேங்கொட்டை
Senkottai
சேங்கொட்டை



தான்றிக்காய்

        1. இதன் கொட்டையை நீக்கிவிட்டு மேற்பகுதியை (சதைப் பகுதி ) எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thandrikkai
தான்றிக்காய்

Thandri kai
தான்றிக்காய்


தாளிசாதி

               தாளிச பச்சை ஒரு கடைச்சரக்கு , அதன் இலையை தூய்மையாக ஆய்ந்து, வாணலில் மிக சிறிதாக நெய் ஊற்றி சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாளிசாதி
தாளிச பச்சை





 நாவி என்னும் நாபி. 



        1.  சிறுகீரைச் சாற்றில் ஒரு நாள் ஊறவைக்கச் சுத்தியாகும். 


        2 .  நாவியைப் பாக்குபோல வெட்டி ஆட்டு மூத்திரத்திலாவது , கோமியத்திலாவது மூன்று நாட்கள் ( 3 நாட்கள் வெயிலில் வைக்க சுத்தியாகும் என்பது வேறு முறை )  ஊறப்போட்டுக் கழுவி நிழலில் உலர்த்திப் போடச் சுத்தியாகும்.

        3. வெட்டின நாவியை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறப்போட்டுக் கழுவி நிழலில் உலர்த்திப் பின்பு பசு மூத்திரத்தில் ஒருநாள் வைத்துக்கழுவி நிழலில் உலர்த்த சுத்தியாகும்.

        4. நாபியைச் சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் நீரில் ஒருநாள்விட்டு  எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.

        5. நாவியை நாய் மூத்திரம், வெள்ளாட்டு மூத்திரத்தில் தனித்தனியே ஒருநாள் ஊற வைத்து எடுத்துக் கழுவிக் கொள்ள சுத்தியாகும்.

        4.   நிர்விசம் ( விசமற்ற ஓர்வகை நாவிக் கிழங்கு ) , இதைப் பசுவின் பாலில் புட்டவியல் எந்திரம் மூலம் அவித்து எடுக்க சுத்தியாகும்.

        5, இருவி ( வச்ச நாவி) , இதைப் பசுவின் கோமியத்தில்  அவிக்க சுத்தியாகும்.

        6. கருநாவி , இதை எருமைக் கோமியத்தில் ஒன்றே கால் மணி நேரம் அவித்து எடுக்கச் சுத்தியாகும்.

        7. எருமைத் தயிரில் அவிக்க நாவி சுத்தியாகும்.

        8.  நாவியைப் பசுவின் பாலிலே கொதிக்க வைக்கவும், அதிலே மூன்று நாட்கள் ஊறவைக்க சுத்தியாகும்.

        9. நாவியை வெள்ளாட்டு மூத்திரத்தில் மூன்று நாட்கள் ஊற வைத்துக் கழுவி, மறுநாள் பசுவின்கோமியத்தில் ஒரு சட்டியில் வேகவைக்கச் சுத்தியாகும்.

        10. நாவியைப் புளியங்கொட்டை அளவு நறுக்கி ஒருநாள் பசுவின்  மூத்திரத்தில் ஊறப்போடவும், அடுத்த நாள் பசுவின் நெய்யில் ஊறப் போடவும், ஊறாவிட்டால்  நெய்யைத் தடவி மூன்று நாட்கள் வெயிலிலே வைக்கவும், உலைமூடி நிறையே கோமியம் வார்த்து அதிலே நாவியைப் போட்டு மூன்று நாட்கள் வெய்யிலிலே வைக்கச் சுத்தியாகும்.

11. நாவியைப் பருத்தியிலைச் சாற்றில் ஆறு மணி நேரம் ஊறப் போடவும், பின்னர் ஆமணக்கு இலையில் சுற்றி குப்பியில் சொருகி இருபத்து நான்கு நிமிடம் பொறுத்து எடுக்கவும், சீந்தில் கசாயத்தில் தோலாயந்திரமாகக் கட்டி எரித்து எருக்கன் பாலில் ஊறவைத்து கோமியத்தில் கழுவி எடுக்கச் சுத்தியாகும்.

Nabi Navi
நாவி/ நாபி





நிலாவரை


            1.  நிலாவரையை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து பசுவின் பாலில் பிட்டவியல் செய்து காயவைத்து எடுக்க சுத்தியாகும்.

நிலாவரை  Click here for pic.


நேர்வாளம்

குறிப்பு 
         
        அ.  நேர்வாளம் வேலை செய்யும் போது வயிறு முட்ட கூழ் குடித்து விட்டு , உடலெங்கும் தேங்காய் எண்ணெய் தடவி,  தேங்காய் சில்லை வாயில் போட்டு மென்றுகொண்டேதான் வேலைகள் செய்ய வேண்டும்.

        ஆ.  எவ்விதம் சுத்தி செய்தாலும் , நேர்வாளத்தின் ஓடு, முளை, விதையிலை களை கண்டிப்பாக நீக்கவும்.

        இ. நேர்வாளத்தின் கழிவுகளை உடனே குழி தோண்டிப் புதைக்க வேண்டும், ஆய்வகத்தில் வைத்திருத்தல் ஆகாது.  சுத்தி முறைகளை திருப்பித் திருப்பிப் படித்தால் கூர் சிந்தனை உள்ளவர்கள் நன்முறையை உண்டாக்குவர்.

        1 .  நேர்வளத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் சுத்தியாகும்.

        2,  பூவரசம் பூ ஊறிய தண்ணீரில் நேர்வாளக்கொட்டையை எட்டு நாட்கள் ஊறவைத்து எடுக்கச் சுத்தியாகும்.

        3, நேர்வாளத்தை எருமைச்சாணி, அரைக்கீரை, கற்றாழைச் சாறு ஆகிய இவற்றில் தனித்தனியாக வேகவைத்து எடுக்கச் சுத்தியாகும்.
 
        4. நேர்வாளத்தைச் சாணியில் கொதிக்க வைத்துக் கொள்ளவும், இதனை 1.3லி காடியில் வேகவைக்கச் சுத்தியாகும்,

        5. நேர்வாளத்தைப் பசுவின் பாலில் வேக வைத்தெடுக்க சுத்தியாகும்,

       6. முதலில் சாணிப்பாலில் இரண்டாவது புளியிலைச் சாற்றில் , மூன்றாவது எருமைப்பாலில் கொதிக்க வைக்க சுத்தியாகும்.

        7, நேர்வாளத்தை எலுமிச்சம்பழத்தில் புதைத்து உமிக் காந்தலில் உள்ளே வைத்தெடுக்க சுத்தியாகும்,.

        8. வாளத்தை காடியில் பத்து நாட்கள் ஊறவைக்க சுத்தியாகும்., சாணிப்பாலில் வேகவைத்து நஞ்சு (முளை) போக்கி அரைக்கீரைச் சாற்றில் வேகவைக்க சுத்தியாகும்.

        9, நேர்வாளத்தின் தோல் போக்கி பசுவின் கோமியத்தில் போட்டு வைக்கச் சுத்தியாகும். (தவிர்)

        10. நேர்வாளத்தின் ஓடுபோக்கி பசுவின் சாணித்தண்ணீரில் வேகவைத்து உலர்த்த சுத்தியாகும். நேர்வாளத்தின் ஓடு  நீக்கி பருப்பு எடுத்து கற்றாழஞ் சாற்றிலும் வெல்லப் பானகத்திலும் பசுவின் பாலிலும் நெய்யிலும் தினம் தனித்தனியே வேகவைக்கச் சுத்தியாம்.

        11. எருமைச் சாணத்தில் காடி விட்டுக் கலந்து அதில் நேர்வாளத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். நஞ்சு (முளை) நீக்கிய நேர் வாளத்தை மோர் எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.

        12. இதனைச் சாணம் கரைத்த நீரில் வேகவைத்து எடுத்துக் கழுவி மேலோட்டை நீக்கிவிட்டு எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவிட்டு விதைக் கதுப்புகளைப் பிசைந்து முளையையும், சவ்வு போன்ற விதை இலைகளையும் நீக்கிப் பருப்பை உலர்த்தி எடுத்துச் சிறிது நெய்விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.

        13. நேர்வாளத்தைச்  சாணியில் வேகவைத்து  ஓட்டையும் , முளையையும் நீக்கி தழுதாழை மடலில் வைத்து சாணி பூசி, உமிக் காந்தலில் வைத்து வேகவைத்துப் பின்பு கழுவி பாலில் வேகவைத்துக் கழுவி எழுமிச்சம்பழச் சாற்றில்  ஊற வைக்கச் சுத்தியாகும்.

        14. கற்றாழஞ் சாற்றில் வேகவைத்துப் பிறகு எருமைச் சாணியில் வேகவைத்து  நஞ்சு நீக்கி சிறுகீரை, பொன்னாங்காணியை நறுக்கிப் பாலில் போட்டு நேர்வாளமுங் கூடப் போட்டு வேகவைத்து   உலர்த்தி , பசுவின் நெய்யில் வறுக்க சுத்தியாகும்.

        15. நேர்வாளத்தின் உள்விரையை நீக்கி மேல் ஓடு தள்ளி விட்டு பசுவின் பாலிலே  வேக வைத்து எடுத்தால் சுத்தியாகும். அதன்பிறகு காடியில் சாணி கரைத்து  தோலா எந்திரமாகக் கட்டி எரிக்கச் சுத்தியாகும்,பிறகு சர்க்கரைத் தண்ணீரிலும் கலந்து போட்டு வேக வைக்கவும், பின்பு நெய்யில் இளம் பதமாக வறுக்க சுத்தியாகும். 

        16. நேர்வாளத்தைப் பொட்டணங்கட்டி , எருமைச் சாணியைக் குழம்பாய்க் காடியில் கரைத்து இட்டு மூன்றுமணி  நேரம் எரியவிடவும், வெந்த பிறகு எடுத்து ஓடு தள்ளி, நஞ்சு நீக்கி கழுவி கற்றாழை , மணிச்சாற்றில் முக்கால் மணிநேரம் புடமிடவும். சோறுகரைத்த நீரில் , வெல்லத் தண்ணீரில், பசுவின் பாலில் , நெய்யில் புடமிடவும் , ஒவ்வொரு புடத்திற்கு இடையேயும் கழுவிக்கொள்ளவும்.

Ner valam
நேர்வாளம்


Ner Valam
நேர்வாளம்





 பரங்கிச் சக்கை 


        1.   பரங்கிச் சக்கையை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து பசுவின் பாலில் பிட்டவியல் செய்து காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


Parangi Chakkai
பரங்கிச் சக்கை







வீரம் எனப்படும் சவ்வீரத்தின் சுத்தி

    ஆச்சுது வீரத்துக்கு அடைவுடன் சொல்லக்கேளு

பாச்சுது இளநீர் விட்டு பண்பாக அவித்துப்போட்டு

ஊச்சுது கடிகை முன்று உற்பனங் கண்டுகொள்ளு

காச்சுது இளநீருக்குள்ளே கழஞ்சி கற்பூரஞ்சேரே

  

கடிகை  =  நாழிகை

            ஒரு பானையில் தென்னை இளநீர் விட்டு அதில் (கழஞ்சி) 5.12 கிராம் ரசகற்பூரம் சேர்த்து  அதன் வாய்க்கு மூடி செய்து அதில் சிறுதுளையிட்டு அதன் வழியே  கயிறு நுழைத்து அதில் வீரத்தினைக் கட்டி இளநீரில் படாதவாறு மேலே வைத்துக்கட்டி மூடியை மூடி சிறுதீயாய் 75 நிமிடங்கள் எரிக்க வீரம் சுத்தியாகும்,

சவ்வீரம் கண்டிப்பாக மருத்துவர்கள் மட்டுமே கையள வேண்டும் , கடும் நஞ்சின் குணமுடையது,

வீரத்தின் மற்ற சுத்தி முறைகள் . சுத்தி முறைகள் பாகம் 1ல் காணலாம்,

வீரம் click here for 

சரக்கு சுத்தி செய்முறைகள், சித்த மருத்துவ நுல் வெளியீட்டுப் பிரிவு , இந்திய மருத்துவத் துறை , ஓமயோபதித் துறை

    இணையம்