பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கந்தக இரசாயணம்


                                    கந்தக இரசாயணம்

                                                            (புலிப்பாணி  - 500)

             இராசயணம் என்பது சரக்குகளைச் சூரணம் செய்து, சர்க்கரையும் நெய்யும் எடைப்படி சேர்த்து,  இளகலாகப் பிசைந்து எடுத்து வைத்துக்கொள்வதாகும். இவை 6 மாதங்கள் வன்மை உடையது.


Sulphar
கந்தகம்


தேவையான பொருட்கள்

1. சுக்கு                                                                    16.8 கிராம்

2. மிளகு                                                                  16.8 கிராம்

3. திப்பிலி                                                               16.8 கிராம்

4. கிராம்பு                                                              16.8 கிராம்

5. ஏலம்                                                                    16.8 கிராம்

6. இலவங்கப்பட்டை                                         16.8 கிராம்

7. இலவங்கப்பத்திரி                                         16.8 கிராம்

8. சாதிக்காய்                                                       16.8 கிராம்

9. தாளிசப் பத்திரி                                             16.8 கிராம்

10. சிறுநாகப்பூ                                                   16.8 கிராம்

11. விலாமிச்சம் வேர்                                        16.8 கிராம்

12.  பெருஞ்சீரகம்                                               16.8 கிராம்

13. குரோசாணி ஓமம்                                      16.8 கிராம்

14. சிற்றரத்தை                                                   16.8 கிராம்

15. சித்திர மூலம்                                                16.8 கிராம்   

16. திப்பிலி மூலம்                                              16.8 கிராம்

17. பூலாங்கிழங்கு                                             16.8 கிராம்

18. ஆனைத் திப்பிலி                                         16.8 கிராம்

19. கருஞ்சீரகம்                                                   16.8 கிராம்

20. கூவை நீர்                                                        16.8 கிராம்

21. திராட்சை                                                       16.8 கிராம்

22. சந்தனம்                                                          16.8 கிராம்

23. தக்கோலம்                                                     16.8 கிராம்

24. அதிமதுரம்                                                     16.8 கிராம்

25. கோரைக்கிழங்கு                                        16.8 கிராம்

26. சடாமாஞ்சில்                                                16.8 கிராம்

27. கொத்தமல்லி                                               16.8 கிராம்

28. பேரீச்சம் பழம்                                              16.8 கிராம்

29. நெல்லிக்காய்                                               16.8 கிராம்

30, கடுக்காய்                                                       16.8 கிராம்

31. தான்றிக்காய்                                               16.8 கிராம்

32. சாதிப்பத்திரி                                                16.8 கிராம்

33. வெட்டிவேர்                                                    16.8 கிராம்

34. குங்குமப் பூ                                                    16.8 கிராம்

35. நிலப்பனை                                                    16.8 கிராம்

36.  அமுக்கிறா                                                    16.8 கிராம்

37. நெருஞ்சி முள்                                               16.8 கிராம்

38. நீர்முள்ளி விதை                                          16.8 கிராம்

39. பூனைக்காலி விதை                                  16.8 கிராம்

40. ஓமம்                                                                 16.8 கிராம்

41. பரங்கிச்சக்கைத் தூள்                             700 கிராம்

42. நாட்டுச் சர்க்கரை                                      700 கிராம்

43. சீனி                                                                    350 கிராம்

44. கந்தகம்                                                            140 கிராம்

45, தண்ணீர்விட்டான்  கிழங்குச்சாறு     8.4 லிட்டர்   

46. நெய்                                                                 1.4 லிட்டர்       

47. தேன்                                                                1.4  லிட்டர்.  

செய்முறை

                தண்ணீர்விட்டான் கிழங்குச் சாற்றில் நாட்டுச் சருக்கரை, சீனி இவைகளை இட்டுக் கரைத்து, வடிகட்டி, அடுப்பேற்றி பாகு செய்து . அதில் சுத்தி செய்து பொடித்துச் சலித்த, எண் 1 முதல் 41 வரை உள்ள சரக்குகளைத் தூவி மேலும் கந்தகப் பொடியையும் தூவிக் கலந்து  நெய்விட்டு கிளறி , இறக்கி சிறிது ஆறியபின் தேன் கலந்து நெல்புடம் பத்துநாள் வைத்து எடுக்கவும்

               நெல் புடம் என்பது , நன்கு காயவைத்த புது நெல் குவியலின் நடுவே, செய்த மருந்தை வைத்து குறிப்பிட்ட நாள் கழித்து எடுப்பதாகும்.

அளவு                     

                 3 கிராம்.

தீரும் நோய்கள்

1.      வளி 80  - வாதம்  -   உந்தியின் கீழ் பிறந்து உடம்பு முழுவதும் பரவி, சுவாசம்,  பசி, தாகம், முதலியவைகளுக்கு ஆதாரமாக விருந்து கொண்டு பல விகாரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முப்பிணிகளில் ஒன்று. இது 80 வகைப்படும்.

2.     அழல்  - 40  (வெப்பு நோய்கள், வெப்பு -  சுரநோய்கள்)

3.  நீர்ச் சுருக்கு  -  6. 

4. கிரந்தி  

5. சூலை  - 18      - குன்மத்தினால் கீழ்வயிறு பக்கவிலாவில் வாயு தங்கிக் குத்தலையுண்டாகும் ஓர் நோய். இவ்வலி பொதுவாக  விலாப்பக்கம், முதுகு, இடுப்பு இவ்வடங்களிற் காணும். இந்நோய் உடம்பிற்கு ஒவ்வாத உணவுப் பொருட்களைத் தின்பதாலும் மற்றும் வேறுவகைக் காரணங்களினாலும் உடம்பில் வாயுகதித்து அதனால் ஏற்படும். அப்பொழுது உடம்பில் குத்தல், வலி, இசிவு முதலியனவுண்டாகி உள்ளுறுப்புளைத் தாக்குவதால் சூலத்தால் குத்துவதைப்போல் காணப்படும்.  இதனால் மூச்சுத் திணறும்.

6.  குன்மம்  

7. வெளுப்பு 

8. ஊதல் 

9. இருமல்

10. மேகம்

11. பசி மந்தம். முதலிய நோய்கள் தீரும்.

   

சித்தம்.                    

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி