பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கக்குவான் இளகம்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்,

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற பெரும் பொருளும் இருந்தும் என்னபயன்.

                                 -  திருக்குறளும். மு.வரதராசனார் உரையும்.

Thalisa Pathiri
தாளிச பத்திரி


                                            கக்குவான் இளகம்

1. கண்டங்கத்திரிச் சாறு                       - 44  கிராம்
2. கருந்துளசிச் சாறு                                - 88 கிராம்.
3. ஆடாதோடைச் சாறு                           - 132 கிராம்.
4. தேன்                                                           - 264 கிராம்
5. சுக்கு                                                           - 2 கிராம்    
6. மிளகு                                                          - 2 கிராம்
7. திப்பிலி                                                      - 2 கிராம்
8. கடுக்காய்                                                 - 2 கிராம்
9. நெல்லிக்காய்                                          -  2 கிராம்.
10. தான்றிக்காய்                                        - 2 கிராம்      
11. இலவங்கம்                                              - 2 கிராம்  
12. இலவங்கப்பட்டை                               - 2 கிராம்
13. ஏலம்                                                           - 2 கிராம்
14. சிற்றரத்தை                                            - 2 கிராம்
15. பேரரத்தை                                              - 2 கிராம்
16. அதிமதுரம்                                              - 2 கிராம்
17. சாதிக்காய்                                             - 2 கிராம்
18. தாளிசபத்திரி                                        - 2 கிராம்
19. சாதிபத்திரி                                            - 2 கிராம்

செய்முறை

            எண்1 முதல் 4 வரை உள்ள பொருட்களை ஒரு மட்பாண்டத்திலிட்டு அதனுள் மற்ற சரக்குகளை சுத்தி செய்து பொடித்து, அளவுப்படி அளந்து போட்டு, அடுப்பேற்றி சிறுதீயில் மெதுவாகக் கிண்டி, பாகுபதத்தில் இறக்கி பதனம் பண்ணி வைக்கவும்.

அளவு

            100 - 300 மி.கிராம் 
            தினம் ஆறுவேளை, விரலில் தேய்த்து நக்கவும்.

தீரும் நோய்

            கக்குவான் - குக்கல் நோய்,  இது குழந்தைகளுக்குப் பால் அல்லது சலதோசத்தினால் வாயு அதிகரித்து மார்பில் தங்கி இருக்கும் சளியானது இளகும்போது, இரு விலாப் பக்கங்களும் இழுக்க இருமலுண்டாகி, அத்துடன் தும்மல் , மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் முதலிய குணங்களைக் காட்டுவதுடன் குடித்தப் பால் அல்லது உண்ட உணவை கக்குதலும், சிற்சில சமயம் கேவுதலுடன் மூச்சுத் திணறி, விழிபிதுங்கி , இரத்தம் கக்கித் துன்புறுத்தும் நோய். இது 90 நாட்கள் வரை கூட நீடித்திருக்கும். இது ஒரு தொத்துநோய்.


சித்தம்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி