பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இலுப்பை மரம்

                         இலுப்பை மரம் ( Bassia Longifolia)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செயின்.

            குணங்கள் சிறந்த பெரியவர்கள் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் , பெரும் பொருளும் இருந்தென்ன பயன்?

                                                - திருக்குறளும், சாலமன் பாப்பையா ஐயா உரையும்.

இலுப்பைக்காய்
இலுப்பை மரம்

                இலுப்பைமரம் 40 அடி உயரம் வரை வளரும். இது நாட்டு இலுப்பை, காட்டு இலுப்பை, சீமை இலுப்பை என வகைப்படும். இம்மரத்தின் இலைகள் முட்டை வடிவமாயும் அதன் நுனி ஈட்டி முனை போல இருக்கும்.கிளைகளின் நுனியில் இலைகள் கொத்தாக இருக்கும். கொம்புகள், காம்புகள் மொசுமொசசுப்பாயிருக்கும். பூவிதழ் உட்புறம் எட்டு வகுப்பாயிருக்கும், பூந்தாதுக்கள் குறைவாக இருக்கும். ஒரு கிளையில் 16 லிருநது 20 வரை வெண்நிற பூக்கள் இருக்கும். காய்கள் பச்சையாகவும், பழுத்தபின் சிறிது மஞ்சளாக இருக்கும். ஒரு கொத்தில் 8 அல்லது 9 விதைகள் தனித்தனியாக இருக்கும். 

                இலுப்பையின் தன்மைகளாக பசியைத் தூண்டி, பலமுண்டாக்கும் தன்மையும், 


இலுப்பைப் பட்டை

            இலுப்பை மரத்தின் பட்டையிலிருந்து பிசின் போலப் பால் வடியும். இலுப்பைப் பட்டைன் குடிநீர்ச் செய்ய,  அது துவர்ப்பாக இருக்கும். இலுப்பைப் பால், கைகால் பிடிப்பு மருந்துகளில் பயன்படும். சொறி சிரங்கு மருந்துகளில் பயன்படுத்துவர். 


இலுப்பைப் பிசின் 

                இலுப்பை மரத்திலிருந்து எடுக்கும் பிசின் , இதை வைத்தியர்கள் வாதப் பிடிப்புகளுக்கு பயன்படுத்துவர்.


இலுப்பைப் பூ

இலுப்பை

            இலுப்பைப் பூ இம் மரத்தில் பெருமளவில் பூத்து உதிரும். இப்பூக்களை காயவைத்து உண்பதோடில்லாமல் திண்பண்டமாச் செய்வர், இத் தின்பண்டத்தை மீனுக்கும், அரிசிக்காவும் பண்டமாற்று செய்வர். இப்பூவிலிருந்து சர்க்கரையும் , கற்கண்டும் செய்வர், சாராயமும் காய்ச்சுவார்கள்.

            இலுப்பைப் பூவைக் குடிநீராக்கி இருமலுக்கு மருந்தாகத் தருவார்கள்.

            இப்பூவைப் பாலுடன் கலந்து பலவீனத்தால் ஆண்மையற்றவர்க்கு மருந்தாகக் குடுக்கலாம்.

            உலர்ந்தப் பூவை விரைவீக்க நோய்க்கு ஒத்தடம் குடுக்கலாம்.


இலுப்பைச் சர்க்கரை

            இலுப்பை மரத்தின்பூவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. முற்காலத்தில் இது சாதாரண சர்க்கரை போல் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்தச் சர்க்கரை நோயாளிகட்கு மற்ற கரும்புச் சர்க்கரை விட சிறந்ததென கூறப்படுகிறது. 

இலுப்பைக் கற்கண்டு 

                இலுப்பைப் பூவினின்று தயாரிக்கும் கற்கண்டு. இது சீனாக்கற்கண்டை விடக் குணத்தில் மிகச் சிறத்ததென்று  வைத்தியர்கள் சொல்வர்கள்.


 இலுப் பெண்ணெய்

                இது இலுப்பை கொட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது.மக்கள் தேங்காயெண்ணெய், நெய்க்குப் பதிலாக பலகாரம் சுட பயன்படுத்தி யிருக்கிறார்கள். இந்த எண்ணெய் தடிப்பாகவும் பசுமையும் , மஞ்சள் கலந்த நிறமாகவும் இருக்கும். இவ்வெண்ணெய் பிழியும்போதே உறைந்துபோகும். வெண்ணெயைப் போல்  உபயோகிக்கலாம். காற்று புகாதபடி அடைத்து வைத்து இருக்காவிட்டால் 10 ,15  நாளில் கெட்டு விடும்.


இலுப்பைப் பிண்ணாக்கு

                இலுப்பை விதையினின்று எண்ணெய் எடுத்தப்பின் எஞ்சியத் திப்பி. இது வாந்திக்காகவும். மீன்களைக் கொல்லவும் பயன்படுகிறது.   எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எண்ணெய் முறிய புண்ணாக்கு பயன்படுகிறது. இதன் புகை பூச்சிகளையும் எலிகளையும் கொல்லும்.

இலுப்பை சாராயம்

            இலுப்பை மரத்தின் பூவிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் சாராயம். பூக்களைப் புளிக்க வைத்து காய்ச்சுவதனால்  சாராயம் இறங்கும். இது மேனாட்டு ஐரிஷ் விஸ்கியைப்போல் மணமாயிருக்கும். கஞ்சம் தேசத்தில் காண்டு சாதியினரும் இதை மிகுதியாக பயன்படுத்துவர். சாராயம் இறக்கிய உடனே குடிப்பது மிக கெடுதி. இது மிக்கப் போதையைத் வருவதாயும், புகைநிறம் உடையதாயும், எலியின் வாசனையை ஒத்தது. இது சுருசுருப்பையும், வலிமையையும் தரும். இதை நாட்பட வைத்திருக்க பிராந்தியின் குணம் இதற்கு உண்டாகும். இதைத் தண்ணீரோடு கலந்து குடிக்க அவ்வளவு கெடுதல் செய்யாது.


சித்தம்

                

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி