பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கரிசாலை இளகம்

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

                மனைவியுடன்  வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

                                 - திருக்குறளும் , சாலமன் பாப்பையா ஐயா உரையும்.


                           கரிசாலை இளகம்

        (அகத்தியர் வைத்ய ரத்னச் சுருக்கம், பாடல் எண் 66 - 72) பா.சி.ம.செ

Karungali pattai
கருங்காலி பட்டை

சரக்கு சுத்திகள் Click here

I. 

    1. பொற்றலைக்  கையான் சாறு  - 2.800 லிட்டர்

    2. நெருஞ்சில் சாறு                               - 2.800 லிட்டர்

    3. சிறுகீரைச் சாறு                                - 1.400 லிட்டர்

    4. பொடுதலைச் சாறு                           - 1.400 லிட்டர்

    5. கீழ்க்காய் நெல்லிச் சாறு                - 1.400 லிட்டர்

    6. செருப்படைச் சாறு                            - 1.400 லிட்டர்  

II. 

    1. நாவல் பட்டை                                        - 35 கிராம்

    2. கருங்காலிப்பட்டை                            - 35 கிராம்

    3. அத்திப்பட்டை                                        - 35 கிராம்

    4. தென்னம் பூ                                               - 35 கிராம்

            இந்நான்கை 22.4 லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி 2.8 லிட்டராகக் குறுக்கிக் கொள்ளவும்.

III.

    1. மிளகு                                                            - 105 கிராம்

    2. மிளகரணை வேர்                                    - 105 கிராம்

    3. அவுரி வேர்                                                   - 105 கிராம்

    4. சிற்றாமுட்டி வேர்                                      - 105 கிராம்

    5. பேராமுட்டி வேர்                                        - 105 கிராம்

    6. விலாமிச்சம் வேர்                                      - 105 கிராம்

                 இவை ஆறு சரக்குகளையும் 22.4 லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி 2.8 லிட்டராகக் குறுக்கிக் கொள்ளவும்.

IV.

    1. பனை வெல்லம்                                         - 280 கிராம்

    2. கரும்பு வெல்லம்                                        - 280 கிராம்

    3. பசும்பால்                                                       - 5.6 லிட்டர்   

V. 

    1. சீரகம்                                                                - 35 கிராம்

    2. ஏலம்                                                                 - 35 கிராம்

    3. கிராம்பு                                                           - 35 கிராம்

    4. சாதிக்காய்                                                    - 35 கிராம்

    5. சாதிப்பத்திரி                                                - 35 கிராம்

    6. ஓமம்                                                                    - 35 கிராம்

    7. குரோசாணி ஓமம்                                         - 35 கிராம்

    8. சிறுநாகப்பூ                                                       - 35 கிராம்

    9.கற்கடகசிங்கி                                                    - 35  கிராம்

    10. கோட்டம்                                                            - 35 கிராம்

    11. அக்ரகாரம்                                                        -35 கிராம்

    12. அதிமதுரம்                                                        - 35 கிராம்

    13. தாளிசபத்திரி                                                    - 35  கிராம்

    14. திரிகடுகு ( சுக்கு, மிளகு திப்பிலி            - 35 கிராம்

            வகைக்கு) 

    15. கடுக்காய்                                                            - 35 கிராம்

    16. நெல்லிக்காய்                                                    - 35 கிராம்

     17. தான்றிக்காய்                                                    - 35 கிராம்

                        இவை பத்தொன்பதையும்  பொடித்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

VI.  ஆவின் நெய்                                                            700 மி,லி

VII. தேன்                                                                         1.400  லி

VIII. 

    1. திரிலோகச் செந்தூரம்                                      35 கிராம்

    2. மண்டூரச் செந்தூரம்                                           35 கிராம்


செய்முறை

            எண் I, II, III யையும் கலந்து IV. ஐயும் கரைத்து, வடிகட்டி,  அடுப்பிலிட்டுப்  பாகுபதம் வந்தவுடன்    V.  ஐச் சிறிது சிறிதாகத் தூவிக்கலந்து  இளகம் பதமான வுடன்    நெய்விட்டுக் கிண்டி , இறக்கி இளஞ்சூட்டில் தேன்விட்டுக் கிண்டி கடைசியில் இரண்டு செந்தூரங்களையும் கூட்டி நன்கு மெழுகுபோல் ஆகும் வரை கிண்டி  வைக்கவும். 

 

 மருந்தின் அளவு

                2 - 4 கிராம்.    45 நாட்கள்.


தீரும் நோய்கள்

    1.  நாட்பட்ட வெளுப்பு நோய்  -  இந்நோய் சாதாரணமாக , உடம்பின் ,ரத்த ஓட்டம் தடைபட்டு , அதன் நீர்ப்பாகம் அக்குழாயினின்றும் வெளிப்படுவதினால்    அதைச் சார்ந்த பாகங்களில் நீர் தங்கி , கால்  அல்லது    இடுப்பின் பாகங்களில்  வக்கம் காணும்,  சில சமயம் வயிறு, மார்பு, முகம் இவைகளிலும் வீக்கம் கண்டு இரத்தம் மாறி சேகையால் வெளுப்பு காணும். சில பாகங்களில் விரல்களால் அழுத்தக் குழி விழுந்து பிறகு மாறி விடும்.

2. அழல் வெட்டை  -  பித்த வெட்டை

3.  கைகால் ஓய்ச்சல்

4. கை கால் எரிவு

5. வாந்தி 

6. மயக்கம்

7. வீக்கம்

8. நீர் சுரப்பு

9. நிணக் கழிச்சல்

10,. ஊண் வெறுப்பு.


சித்தம்       



No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி