பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


மஞ்சள் நோய் (எ) காமாலை

     பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

         அல்லல் உழைப்பிக்கும் சூது.

                சூது, உள்ள பொருளைக் அழித்துப்பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்து , பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்,

                                                   - திருக்குறளும், மு,வரதராசனார் உரையும்.


                                            காமாலை

             பித்தக் காமாலை அல்லது மஞ்சட் காமாலையால் உடம்பின் தோல், சவ்வு , நீர் முதலியவைகள் பித்த நிறம்போல் அதாவது மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
Jaundice
மஞ்சட் காமாலை


குழந்தைகளின் காமாலை


            இவ்வியாதி முக்கியமாய் குழந்தைகளைத் தாக்கும், இந்நோய்க்குக் காரணம் யாதென்றால் தாயின் கர்ப்ப காலத்தில் சாம்பல்,மண்போன்ற கெட்ட பழக்கங்களினால் குழந்தையின் உடம்பில் இரத்தம் கெட்டு, உணவு செரிக்கும் தன்மை குறைந்து , பித்தம் அதிகர்த்து அதனால் உடம்பு முழுதும் மஞ்சள் நிறமாய்க் காணப்படும்.

பெரியவர்களுக்கான காமாலை

நோய்க்கராணங்கள்

            ஈயம், பித்தளை , வங்கம், தாமிரம் இவைகளை உருக்கும்போது வெளியாகும் புகைகளை அடிக்கடி சுவாசிப்பதாலும்,  நல்லெணெய் நவாச்சாரம், தாளகம் இவைகளின் புகையை அடிக்கடி சுவாசிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகமாக புசிப்பதாலும், அதிகம் சிந்தனை செய்வதினால் பித்தம் கதிப்பதினாலும் - பித்தப்பை  தடைபட்டு இவ்வியாதி உண்டாகும்.

                    விளம்பவே பாண்டுமுற்றி யிருக்கும்போது
                    பீறியே பித்தவஸ்து தனைப் புசித்தால்
                    புளம்பவே மங்கையுடன் புணர்ச்சி செய்தால்
                    பூண்டிடுமே காமாலை யென்னும்  ரோகம்
                                                                                                        - யூகி 800.


காமாலையின் விளைவுகள்
                    இதனால் நோயாளிகளுக்கு அதிக துன்பம் விளைவிக்காவிட்டாலும்,

 1.  உணவு செரியாமை
2.  கை கால் சோர்வு
3. மூத்திரம் , கை,கால் நகங்கள் மஞ்சள் நிறமாதல்
4. காணப்படும் காட்சிகள் மஞ்சள் நிறமாக இருத்தல்
5. பெண்கள் மேல் இச்சை இல்லாமை.

            இதற்கு மருந்தாக சாதாரணமாக வைத்தியர்கள், கோழியவரைச் சாறு அல்லது கரிசாலைச் சாறு குழந்தைகளுக்கு அரைச் சங்கு அளவும், பெரியவர்களுக்கு ஒன்றரை சங்கு அளவு குடுத்து பத்தியமாக ,  உப்பில்லாத பால்சோறு அல்லது தயிர் சோறு புசிக்கும்படி நியமிப்பார்கள்.

காமாலையின் வகைகள்


1. ஊதுகாமாலை  -  Jaundiceattended with swelling

2. கும்ப காமாலை  -  absorption of bile into blood vesseles

3. வாத காமாலை

4. சிலேட்டும காமாலை 

5.  வறட் காமாலை  -  இரத்தசோகையுடன் கூடிய காமாலை இதன் பண்புகளாக இரத்த சோகை, சிறுநீரின் நிறமாற்றம், மாலைக்கண் வியாதிகளாக அமையும் . jaundice attended  with anemia , discoloration of urine, acute painand night blindness.

6. அழற் காமாலை  - உடல் எரிச்சலுடன் கூடிய காமாலை.

7. செங் கமலக் காமாலை

8. பித்தக் காமாலை - இரத்தத்தில் பித்தநீர் அதிகம் காணப்படுதல்

9. தொந்தக் காமாலை  - Hemolytic jaundice

10.  அழகுக் காமாலை  -  தோல் மினுமினுப்பாய் அழகாகத் தோன்றுவதான  குறிகளுடன் கூடிய காமாலை.

11. பஞ்ச பிரமியக் காமாலை

12. இயம காமாலை  - பசியின்மையுடன் கூடிய காமாலை

13. தம்ப காமாலை  - கோபம் மற்றும் அச்ச மிகுதியுடன் கூடிய காமலை

14.  வால காமாலை  - இளமையின் மீது தாக்குதலை நடத்தும் காமாலை.

15. கருங்காமாலை  -  பிறந்த குழந்தைகளைத் தாக்கும் காமாலை- Icterus melas

16. விஷக் காமாலை  - பாம்புக் கடி போன்ற நஞ்சுக்கடிகளினால் உண்டாகும் காமாலை - Toxemic jaundice.


மஞ்சட்  காமாலைக்கான மருந்துகள்


1. இலிங்கப் பதக்கம்
2. கீழா நெல்லித் தைலம்
3. கௌசிகர் குழம்பு
4. கௌரி சிந்தாமணிச் செந்தூரம்
5. தாளிசாதிச் சூரணம்
6. பூரண சந்திரோதயம்
7. மகா ஏலாதிக் குளிகை
8. மகா வசந்த  குசுமாரகம்
9. மண்டூராதி அடைக் குடிநீர்
10, வான் மெழுகு
12. வெடி அன்னபேதிச் செந்தூரம்
13. வெள்ளிச் செந்தூரம்.


சித்தம்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி