பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இரும்பு சுத்திமுறைகள்.

                 வணக்கம் நண்பர்களே,

            மனிதன் வேட்டையாடுவதறகும், பகையை அழிக்கவும், வாகன பயன்பாட்டுக்காகவும், ஆபரணங்களுக்கும் அவனுக்கு உறுதியான,தேயாத அல்லது எளிதில் அழியாத உலோகங்கள் தேவைப்பட்டன. அதற்காக அவன் ஆராய்ச்சி செய்து பல உலோகங்களைக் கண்டு பிடித்தான். அதில் மிக முக்கிமானது இரும்பு.



        இரும்பு வலிமையான உலோகமாக இருந்தாலும்அதில் துருபிடிக்கும் தீயகுணம் இருப்பதால் அதை உற்பத்திப் பொருள்களில் பயன்படுத்தலாம்.  ஆனால் மருந்துகளில் பயன்படுத்ததும்போது அதில் உள்ள பல தீயகுணங்களை நீக்கிவிட்டுத்தான் மருந்தாக சமைக்க வேண்டும், அந்த செயலை சுத்தி செய்தல் என்கிறோம், இரும்பின் சுத்தி செய்யும் முறைகளைக் காண்போம்,

இரும்பு சுத்திமுறை 1,

            கருவேல மரத்தின் மேல் பட்டையை எடுத்து அதன்  கரடு முரடான புறணியை செதுக்கி  நீக்கி , சதையை உரலில் இட்டு இடித்து சாறு எடுக்க வேண்டும், அந்தச் சாற்றை  ஒரு மண்பாண்டத்திலிட்டு, அதில் இரும்புப் பொடியை போட்டு இரண்டு சாமம் அதாவது  ஆறு மணி நேரம் எரித்து , சாற்றை வடித்து விட்டு அந்த அரப் பொடியை காடிவிட்டு  கழுவி எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.

                                                    


துருத்தி
அயம் கொல்லர் உலை

                    

இரும்பு சுத்தி முறை 2

          (1) இரும்பை துருத்தி உலையில் வைத்து ஊதி காய்ச்சி, நல்லெண்ணெயில் மூன்று முறை தோய்த்து பின்,

        (2)மறுபடி இரும்பைப் காய்ச்சி காடியில்  தோய்க்க வேணடும் இது போலவே மொத்தம் 3 முறை செய்ய வேண்டும்,

           (3) அடுத்து அந்த இரும்பைக் காய்ச்சி, பசு நெய்யில் தோய்க்க வேண்டும் இதுவாறே  3 முறை செய்ய வேண்டும்,

            (4) அடுத்து அந்த இரும்பைச்  பழுக்க சூடு செய்து அதை, கொள்ளு வேகவைத்தது வடித்த நீரில் தோய்க்க வேண்டும், இம்முறைப்படி 3 முறை செய்ய  இரும்பு சுத்தியாகும்,


இரும்பு சுத்தி முறை 3

            அயத்தைப் பொடியாக்கி சுத்தி செய்வதே சிறந்த முறை. 

            (1)இரும்பைப் பொடியை  , எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து அயப்பொடி மூழ்கும் வரை ஊற்றி  24 மணி நேரம் வைத்திருந்து பின்பு அந்த சாறை வடித்து விட்டு வேறு புதிதாக பிழிந்த சாற்றை ஊற்றி 24 மணி நேரம்  ஊற வைக்க வேண்டும்,  நேரம் கழிந்த பின் அந்த சாற்றையும் கீழே ஊற்றி விட்டு புதிய எலுமிச்சம் பழச்சாற்றை இரும்புப் பொடி மூழ்கும் வரை ஊற்றி 24 மணி நேரம் ஊற  வைக்க வேண்டும், சுத்தி முறையில் இது முதற்படியாகும்,

            (2) மேற்கண்டபடி ஊறவைக்கப்பட்ட அயப் பொடியை எள் எண்ணெயில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் , எண்ணெயை வடித்த பின்பு அரப் பொடியை இரும்பு கடாயிலிட்டு சிவக்க வறுத்து அதை முன்பே செய்து தயாராக வைத்திருக்கும் கொள்ளுக் குடிநீர் அல்லது  வேலமரத்துப் பட்டைக் குடிநீரிலோ பலதடவை மூழ்கடித்து எடுக்க இரும்பு சுத்தியாகும்.

                                                    

iron
இரும்பு தோய்த்தல்

சித்தம்!

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி