பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


நாகம் (துத்த நாகம்) - சுத்திமுறை

                 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

                  மெய்ப்பொருள்   காண்ப தறிவு.                                                                                                                                                                 - திருக்குறள்.

                எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை எதுவென ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

zinc
துத்தநாகம்


இந்திய மருத்துவம்  ஓமியோபதித் துறை வெளியிட்டுள்ள "சரக்கு சுத்தி செய் முறைகள்"  நூலில் கூறியுள்ள முறைகளைக் காண்போம்.

    1.        நாக வங்கத்தைத் தகடாய்த் தட்டி கள்ளிப்பால்,கோமியம், நல்லெண்ணெய் முதலியவற்றில் தனித்தனியாக ஏழு , ஏழு முறை நாகத் தகட்டைக் காய்ச்சி உருக்கி சாயத்துக் கொள்ள சுத்தியாகும்.

    2.      ஒரு வாணலியில்   நாகவங்கத்தை  இட்டு அதனுடன் ஆட்டு நெய்விட்டு உருக்கிக் கொள்ளவும். 

                ஆட்டு சிறுநீர், எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் நவச்சாரம், கல் சுண்ணாம்பு சேர்த்துக் கலக்கி அதில் மேல் சொல்லியபடி காய்ச்சிய நாகத்தை பத்து முறை உருக்கிச் சாய்த்து எடுக்க சுத்தியாகும்.

    3. ஒரு சட்டியில் இலுப்பை எண்ணெய் எடுத்துக்கொண்டு அதன் இரு பக்கமும் எண்ணெயுள் பாதி மூழ்கும்படியாக நவச்சாரக்கட்டியை வைத்து பின் வேறொரு இரும்புச் சட்டியில் நாகத்தை வைத்து உருக்கி அதை நவச்சாரம் இருக்கும் சட்டியில் ஊற்றவும், இப்படியே இருபத்து ஒருமுறை உருக்கிச் சாய்க்க சுத்தியாகும்.

    4, உருத்திராட்சத்தை சந்தனக் கல்லில் இழைத்துச் சேர்த்த குழம்பில், புன்னை மரத்தின் மகரந்தக் குழம்பைச் சேர்த்து அதனுடன் தேன் சேர்த்து , அதில் துத்தநாகப் பொடியிட்டு வெயிலில் வைக்கவும். இந்தப்படியே ஒரு மாத காலம் செய்ய சுத்தியாகும்.


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி