பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


செம்பு என்னும் தாமிரம் சுத்தி

             செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

            உய்யா விழுமந் தரும்.

                                                            - திருக்குறள்.

            தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால் செய்த பிறகு தப்ப முடியாத துன்பத்தையே தரும். 

Copper


        செம்பினைக் களிம்பறுத்து நாட்டினால்... என்பது சித்தர்கள் வாக்கியமாகும். செம்பினைக் களிம்பு எனப்படும் பச்சை நிறக் கசடு ஊறாது கட்டி மாற்றுவதே வேதையாகும்.

        மருந்துகளில் செம்பின் சுத்தி முறைகளில் பாரதத்தின் சித்த மருந்து செய் பெரு முறைகள் என்னும் நூலில் கூறியுள்ளதைக் காண்போம்.

        செம்பினைத் தகடாய்த் தட்டிக் காய்ச்சி, மோர், காடி, புளியயிலை சாறு, குப்பைமேனிச்சாறு இவைகளில் முறையே தனித்தனியாகத் தோய்த் தெடுத்துக் கழுவிக் கொள்ளவும். செம்பு சுத்தியாகும்.  

        அனுபோக வைத்திய ராஜரத்தின சிந்தாமணி 1896 எனும் பதிப்பு நூலில் கூறியுள்ளதாவது

     "   அமுரியொன்று, பழச்சாறுவொன்று சாரமும் தாளகமும் கூட்டிக் கலக்கி வெயிலில் வைத்து நீரினால் கழுவிப் போட சுத்தியாகும் "

அமுரியை சிறுநீர் என்று மயங்காமல் ஆராய்ந்து தெளிந்து செயலைச் செய்ய வேண்டும். அமுரியை சிறுநீர் என்றது தெரிந்தே சித்தர்கள் செய்த கபடு என்பதையும் உணர்க.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி