பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


தாளகம் எனும் அரிதாரம் சுத்தி முறைகள்

அரிதாரம் சுத்தி முறைகள்


            பொன்னரிதார சுத்தி

                        பொன்னரிதாரத்தை எடுத்து தூளாக்கி ஒரு துணியில் கீழி கட்டி ,  (1) சுட்டகல்சுண்ணாம்பை ஒரு பானையில் பாதி  போட்டு அதன்மேல் மேற்சொன்ன கீழியை வைத்து அதன்மேல் கல்சுண்ணாம்பை போட்டு ,  நீரைக் கொதிக்க   வைத்து , அந்த நீரை பானையில்  உள்ள சுண்ணாம்பில் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொண்டு  , (2) ஈரவெங்காயம் இடித்தெடுத்த சாற்றோடு காடியைக் கலந்து ஒரு பானையில் இட்டு சுண்ணாம்பில் சுத்தி செய்த தாளகக் கீழியை தோலா எந்திரமாக கட்டி  சிறுதீயில் வற்றும் வரை எரித்து எடுத்துக் கொள்ளவும்,

                (3) சித்தர்மூலம் என்னும் கொடிவேலி வேரின் பட்டையை எடுத்து அதை ஒரு கலத்திலிட்டு நீர்விட்டு அடுப்பேற்றி , சிறுதீயாய் எரித்துக் கொதிக்க வைத்து வடித்து அந்த நீரில் முன் சொன்னதுபோலவே தோலாந்திரமாக கட்டி எரித்துக் கொள்ள மூற்றாம் நிலை சுத்தியாகும்,

                (4)  புளியம்பழ சதையை கொட்டை, கோது இல்லாமல் நீக்கி கரைத்து வடித்த சாற்றில் அந்தக் கீழியைத் தோலாயந்திரமாக கட்டி எரித்து எடுக்க நாலாம் நிலை சுத்தியாகும்.

                (5) கொள்ளு ஊறவைத்து, வேகவைத்து வடித்து எடுத்த நீரில் அரிதாரக் கீழியை தோலாயந்திரமாகக் கட்டி எரித்து எடுத்துக் கொள்ள ஐந்தாம்நிலை சுத்தியாகும்.

                (6) பூசணிக்காயை இடித்து எடுத்து வடிகட்டப்பட்ட சாற்றில் மேற்படி கீழியை தோலா எந்திரமாகக் கட்டி சிறுதீயாய் சாறு வற்ற எரித்து எடுக்க ஆறாம் நிலை சுத்தியாகும்,

                (7)  சோற்றுக் கற்றாழை மடல்களைக் கீறி அதனுள் கடுக்காய்த்தூள் செலுத்தி சாய்வாக வைக்க , கற்றாழை மடலிலிருந்து  நீர் இறங்கும், இதனைக் குமரி நீர் என்றும் கூறுவர். கல்வத்தில் மேலே கூறிய  ஆறுமுறைப்படி சுத்தி செய்த தாளகத்தை இட்டு குமரிநீரை, தாளகம் முழுகும் வரை ஊற்றி ஊறவிட்டு பின்பு அரைத்து வடையளவில் வில்லை செய்து காயவைக்க முழு சுத்தியாகும்,

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி