பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


உடல் வலி (உடல் கடுப்பு)க்கு தாளகபற்பம்

 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

      மட்பகையின் மாணத் தெறும். 

                                                                           -  திருக்குறள்.

வடிவேலின் உடம்பு வலி 😉


வணக்கம் நண்பர்களே!

வாழ்க வளங்களுடன் !           prescription -  🌟🌟🌟/5.                


வைத்தியர்களுக்கானது.

உடல் வலிக்கு தாளக பற்பம்

            பல்வேறு காரணங்களாலும், வாதம் அதிகப்படுவதாலும் முற்றுடல் வலி எனப்படும் உடல் முழுதும் வலி ஏற்படும். இதிலிருந்து குணப்பட தாளக பற்பம் நல்ல மருந்தாச் செயல் படும்.

            தாளக பற்பம் செய்யும் முன் அரிதாரம், மால்தேவி எனப்படும், தாளகத்தைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். சுத்தி செய்யும் முறையினை நம் பழைய இடுகைகளில் பார்த்துள்ளோம். அதன் படி முறையாகவும் கவனமாகவும், சமயோஜிதமாகவும் செய்துகொள்ள வேண்டும்.

பற்பம் செய்யும் முறை

      செயல் 1        

            மாவிலங்க மரத்தின் இலை, பூ, காய், பட்டை,வேர்ப்பட்டை முதலியவைகளை நிழலில் உலர்த்தி, அதை ஒரு கலத்தில் போட்டு தீயிட்டு சாம்பலாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 3 பகுதிகளாக்கி ஒரு பகுதியை வேறொரு மட்கலத்தில் போட்டு அதன் எட்டு மடங்கு தண்ணீர் விட்டு ஒரு பங்காக குருக்கி மாவிலங்கச் சாம்பல் குடிநீராக்கிக்கொள்ள வேண்டும்.

Mavilanga maram
மாவிலங்க மரம்


           செயல் 2 

             இப்போது முன்பு செய்திருந்த ஒரு பகுதி மாவிலங்கச் சாம்பலில் , முற்சொன்ன மாவிலங்கக் குடிநீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசைந்து ஒரு குகை செய்து கொள்ள வேண்டும். அதை கடும் வெயில் படாது நிழலில் வைத்து காயவைத்துக் கொள்ள  வேண்டும்.

            செயல் 3

            சுத்தி செய்து  வைத்துள்ள தாளகத்தை  செயல் 1ல் கூறியபடி செய்த மாவிலங்கமர சாம்பல் குடிநீரில் அரைத்து  வில்லை தட்டிக் காயவைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்த பின் இந்த வில்லைகளை செயல் 2 ன் படி செய்த குகைக்குள் வைத்து அதன் வாயை மேற்படி குகை செய்த கலவையால் மூடி சீலைமண் செய்ய வேண்டும். நன்றாக உலர வைக்க வேண்டும்.

                ஒரு குண்டுச் சட்டியில் மூன்றாவது பாக சாம்பலில் பாதியைக்  கொட்டி, அதன்மேல் சீலைசெய்யப்பட்ட குகையை வைத்துப் மீதி இருக்கும் சாம்பலையும் கொட்டி, அதன்மேலே வாய்பொருத்தமான சட்டியைக் கவிழ்த்து இரண்டு சட்டிகளையும் சீலைமண் செய்து  உலர வைக்கவும்.

            உலர்ந்த பின் அதை அடுப்பேற்றி மூன்று நாட்கள் எரித்து ஆறிய பின் சீலை பிரித்து எடுத்து , பற்பத்தைப் பத்திரப்படுத்தவும்.

        தேன் மற்றும் தக்க அனுபானத்தில் குடுக்க  உடம்புக் கடுப்பு,சயம், இருமல், சூலைவலி முதலிய நோய்கள் தீரும்.

      



சி,வை,தி.

சித்தம்.      

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி