பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


இத்தி மரம்

 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்கை வினை.

பொருள்கள் வருகின்ற வழிகளை விரியச் செய்து செல்வங்களை வளர்த்து , அவற்றிற்கு உண்டான இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன், மன்னனுக்குத் தொழில்செய்ய வேண்டும்.

                                     -திருக்குறளும், திருக்குறளார் வீ.முனுசாமி ஐயா உரை.


இச்சி மரம்
இத்தி மரம்

மேலும் சில இத்தி மரப் படங்கள்             

               இத்தி மரம், இது இச்சி மரம், இந்திரி,இறலி, சுவி என்றும் அழைக்கப்படும்.  இம்மரம் Rhomboid - leaved fig என்னும் பொதுப் பெயரிலும்,  Ficus gibbosa alias F. virens என்னும் கலைச் சொற்களாலும் அழைக்கப்படுகிறது. 

                இது தென்னிந்தியாவில் ஏராளமாகக் காணப்படுகிறது. இது ஆல் மர வகுப்பைச் சார்ந்தது. இம் மரங்களிலும் விழுதுகள்  காணப்படுகின்றன. இதன் காய்கள் ஆலமரத்து பழங்கள் போலவே ஆனால் அளவில் சிறிதாய்க் காணப்படுகின்றன. கல் ஆல், கல் இச்சி என இருவகைப்படுவதாகத் தெரிகிறது.

இத்திப் பிஞ்சு 

                    அதிசாரம் (எ)அஜீரணபேதி, சீதபேதி - Diarrohea or Disentery

                    பெரும்பாடு  - Menorrahagia               ( பெண்கள் மாதவிடாய் ஆகுங் காலத்தில் ஒழுகும் இரத்தம் சரியாய் வராது தடைபடுவதால் பெரும்பாடு உண்டாகும் ; கருப்பையின் நுனியில் உள்ள இரத்த சரங்கள் பலங்குறைந்து நார்கள் தளர்ச்சியாகி கருப்பை கன்றி உடம்பில் இரத்தம் உபரியாய் படும். 

                    உட்சூட்டினால் உற்பத்தியாகும் பிணியினங்களைப் போக்கும்.


இத்திப் பிஞ்சு, இத்திப்பட்டை

                    இம்மரப் பிஞ்சுகளை அரைத்துக் கொடுத்தாலும், இதன் பட்டையை குடிநீராக்கிக் குடுத்தாலும் கீழ்க்கண்ட நோய்கள் தீரும்.

                    வாயு  - நரம்பின் வழியாய் வாதநீர் அதிகரித்து, அபானத்தில் நரம்பின் வழியாயும் வேறு பற்பல வழியாயும் இறங்கி உண்டாகும் ஓர் நோய். 

                    மலக்கட்டு -  மலச் சிக்கல்  ; constipation of the bowls ; costiveness 

                    மலக்கழிச்சல் 

                    கால் வழியே சாயு மசிர்க்குள்ளே தங்கு வெப்பும் நோய் இனங்கள்


இத்திக் காய் 

                இதக் காயை நெய் விட்டு வெதுப்பி உண்ண வாத மலக் கட்டு நீங்கும்.


சித்தம்

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி