பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


சரபுங்க வில்வாதி இளகம்

 ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

                    ஒரு தன்மையான கற்புடைய மகளிர் போல் பெருமையும் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

                        - திருக்குறளும், மு, வரதராசனார் ஐயா உரையும்.



                    சரபுங்க வில்வாதி இளகம்

(அகத்தியர் வைத்திய ரத்னச் சுருக்கம் ) பா.சி.ம. செ. குறிப்புகள்.

சரபுங்கு என்பது கொள்ளுக்காய் வேளை எனப்படும் முட்காய் வேளை எனும் முக்கா வேளையாம். அவுரி போலவே இருக்கும்.

முக்கா வேளை
முட்காய் வேளை

தேவையான பொருட்கள்

 1, வில்வவேர்க் கட்டை                            1750 கிராம்

2. முட்கா வேளை வேர்                            1750 கிராம்

3. சங்கன்வேர்                                             1750 கிராம்

4. சிற்றாமல்லி வேர்                                 175 கிராம்

5. சிற்றாமுட்டி வேர்                                 175 கிராம்

6. பேறாமல்லி வேர்                                  175 கிராம்

7. ஔவையார் கூந்தல்                           175 கிராம்

8. முள்ளிக்கீரை வேர்                                  175 கிராம்

9. சாரணை வேர்                                       175 கிராம்

10. கண்டங்கத்திரி வேர்                        175 கிராம்

11. விளாமிச்சை வேர்                             175 கிராம்

12. சீந்தில் வேர்                                           175 கிராம்

13. கொடிவேலி வேர்ப்பட்டை              175 கிராம்

14. பொன்முசுட்டை வேர்                       175 கிராம்

15. நன்னாரி வேர்                                      175 கிராம்

16. சிறுதேக்கு                                               175 கிராம்

17. தண்ணீர்                                                   21.5 லிட்டர்

18. சுக்கு                                                                 35 கிராம்

19, மிளகு                                                                35 கிராம்

20. திப்பிலி                                                            35 கிராம்

21. கடுக்காய்                                                       35 கிராம்

22. நெல்லிக்காய்                                                35 கிராம்

23. தான்றிக்காய்                                                35 கிராம்

24. கிராம்பு                                                            35 கிராம்

25. ஏலம்                                                                   35 கிராம்

26. சீரகம்                                                                35 கிராம்

27. கருஞ்சீரகம்                                                    35 கிராம்

28, கோட்டம்                                                          35 கிராம்

29. தாளிசபத்திரி                                                35 கிராம்

30. ஓமம்                                                                   35 கிராம்

31. குரோசாணி ஓமம்                                        35 கிராம்

32. சிற்றரத்தை                                                    35 கிராம்

33. பேரரத்தை                                                      35 கிராம்

34. கொத்தமல்லி விதை                                  35 கிராம்

35. இலவங்கப்பட்டை                                        35 கிராம்

36. அக்கராகாரம்                                                35 கிராம்

37. யானைத் திப்பிலி                                         35 கிராம்

38. வால்மிளகு                                                       35 கிராம்

39. சாதிக்காய்                                                      35 கிராம்    

40. கரும்பு வெல்லம்                                           1680 கிராம்

41. காராம் பசும் பால்                                        2800 மி,லிட்டர்

42. நெய்                                                                    700 மி,லிட்டர்

43. தேன்                                                                    1400 மி,லிட்டர்        


செய்முறை

                எண். 1 முதல் 16 வரையுள்ள சரக்குகளை நீரிலிட்டுக் காய்ச்சி 1 / 8   ஆகக் குறுக்கிக் குடிநீரெடுத்து, வடித்து, அதில் வெல்லத்தையும், பசும் பாலையும்  கூட்டிக் கலந்து வடிகட்டிக் காய்ச்சிப் பாகுபதம் வந்தவுடன் எண். 18 முதல்39 வரையுள்ள சரக்குகளின் சூரணங்களைச் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, தக்க சமயத்தில் நெய்விட்டுக் கிண்டி , இறக்கித் தேன் சேர்த்துக் குழம்புப் பதத்தில் செய்து முடிக்கவும்.      

அளவு 

                    5 கிராம் . தினம் இருவேளை , 45 நாட்கள்.


தீரும் நோய்கள்

1. அழல் வெட்டை

2. அறுவகை அழல் வெளுப்பு

3. எட்டு வகை என்புருக்கி நோய் Click

4.  எண் வகைக் குன்மம்

5. அறுவகை நிணக்கழிச்சல்

6. வெள்ளோக்காளம்

7. பசி மந்தம்

8. வாய்க் கசப்பு.

9. வாய் நீர் ஊறல்

10. சூலை

11. கைகால் காந்தல்

12.   அழல் 40.



சித்தம் .      

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி