பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கருப்பை என்னும் சூலகப் பிணிகள் - திரட்டு

Cervix
கருப்பை / கர்பப்பை


கருப்பை என்பது கருவைத் தரித்து வளர்த்துக் காலம் வந்தவுடன் அதைப் பிதுக்கித் தள்ளி விடும் உறுப்பேயாகும். கன்னிகளுக்கு கருப்பை சப்பையாகவும் அத்திப்பழ வடிவாகவுமிருக்கும்
 

        கர்பப்பை இயற்கையாகவே பாதுகாப்பாக உடல் உறுப்புகளிடையே அதிக வெப்பமாகவும் இல்லாமல் அதிக குளிர்ச்சியும் இல்லாமல் படைக்கப்பட்டுள்து. அதில் ஏற்படும் பிணிகளும் அதை நீக்கும் மருந்துகளின் தொகுப்பையும் பார்ப்போம்.


கர்ப்பக் கிருமி



            கருக்குழியில் கிருமி இருப்பதன் அறிகுறி, புணரும் வேளையில் முதுகு நொந்து வலிக்கும், 

கரு அழிவு

நாய் நாக்கு   - இலைக்கள்ளி 




புளி நரளை




கர்ப்ப சூலை 



உள்ளி  -  வெள்ளைப்பூண்டு

வெள்ளை வெங்காய பூண்டு
உள்ளி


இஞ்சி 

Inji
இஞ்சி


இந்துப்பு

பாறையுப்பு Inthuppu
இந்துப்பு


சிவதை வேர்

Sivathai root
சிவதைவேர்




சீந்தில்

சீந்தில் கொடி


நிலவாகை

Nilavagai
நிலவாகை


வால்மிளகு

tailed pepper
வால்மிளகு


திப்பிலி

Indian long pepper



ஏரண்ட எண்ணெய்

ஏரண்டம் = ஆமணக்கு

ஏரண்ட எண்ணெய் = விளக்கெண்ணெய்


முடக்கொற்றான் இலை


கழற்சிக் கொடி


சாரணை வேர்

Saranai
சாரணை



கொடுவேலி

koduveli
கொடுவேலி


குலாவு  - பூனைக்காலி     

பூனைக்காலி click here and follow the link


வெளித்திப் பட்டை . முருங்கப்பட்டை

முருங்கை மரத்தின் பட்டை

மரமஞ்சள்

Mara Manjal
மரமஞ்சள்


மிளகு


கடுகு



பெருங்காயம்

Perungayam
பெருங்காயம்


சதகுப்பை

Sadhakuppai
சதகுப்பை


இலங்கம்=இலங்காசிகை=நாகப்பூ=சிறுநாகப்பூ

Sirunagapoo
சிறுநாகப்பூ


 சீதாரி = செம்புளிச்சை

 காராம்பூ = கிராம்பு

சாதிக்காய்

சதகரம்= தான்றிக்காய். சாதிக்காய் , சாதிக்காய் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டதால் தான்றி என எடுத்துக்கொள்ளப் படுகிறது,                

வசுவாசி = சாதிப்பத்திரி

நேர்வாளம்

           

                

                


கர்ப்ப வாயு


கர்ப்ப வாயு எண்ணெய் ( வேறு)




கர்ப்ப வாயு  (வேறு) 




கர்ப்ப விப்புருதி



அசோகமரம் கருப்பைப் பிணிகளைத் தணிக்கும். அசோக மரம்



உடற்கூறு   - டாக்டர். இரா. தியாகராசன் எல்.ஐ.எம்

Pending 30/08/2022





இஞ்சியை முதன்மையாகக் கொண்ட மாமருந்துகள்•

 

Inji
இஞ்சிக் கிழங்கு

        சுக்கு என்பது அறக் காய்ந்த இஞ்சி என்பதையும் அதன் பண்பு நலன்களையும் முந்தைய பதிவுகளிள் பார்த்தோம். இஞ்சியை முதன்மையாக உள்ள மருந்துகளைப் பற்றி பார்ப்போம்,


இஞ்சிக் குழம்பு


            தலை கிறுகிறுப்பு, வாந்தி, குன்மம், ஏப்பம் தொடர்ந்து வருகிற மாதவிடாய் பிரச்சனைகள்  இஞ்சிக் குழம்பு மருந்தால் நீங்கும்.


இஞ்சி நெய்

வயிற்றுப் பொருமல். அத்தி  சுரம் எனப்படும் என்புச் சுரம்,பாண்டு என்னும் வெளுப்பு , இரத்த சோகை முதலிய பிணிகள் இஞ்சி நெய்யினால் நீங்கும்,




இஞ்சி ரசாயனம்





இஞ்சி இளகம் 


        வாந்தி , பேதி, வயிற்றிலுள்ள கிருமிகள், வயிற்றெரிவு, செரியாமை, கவிசை, பீலிகை, நீராம்பல், வெப்புப்பாவை, செவிக்கோடு, வெளுப்பு நோய் முதலிய பிணிகள் தணியும்.

           



இஞ்சி இளகம் (வேறு)            
            கழிச்சல் (கிராணி) வகை எட்டும் தீரும்                                
      





இதன் பொழிப்புரை 50 பார்வையாளர்கள் பார்வையிட்ட பின் எழுதப்படும்.








அனுபவ வைத்திய முறை  Government Oriental Library. Madras.



இருமலுக்கு மருந்து - பாடல் திரட்டு

சித்தர் பாடல் 1

                        இண்டிகை மிளகொடு யிசங்கு தூதளை 
                        கண்டுநற் சர்க்கரை கலந்து காய்ந்த நீர் 
                        உண்டிடி லொருவர்க் கீளை வந்திடில்
                        தெண்டமு மிருத்துனான் தேரனு மல்லவே.


இணடு
இண்டு



மறைமொழிகள் (பரிபாசை)

        இண்டிகை - இண்டங்கொடி . புலித்தொடக்கி,ஈயக்கொடி. இண்டை. ஈக்கை கொடி ///

 மிளகொடு -மிளகுடன் /// 

 இசங்கு - சங்கஞ் செடி /// 

 தூதளை - தூதுவளை. முள்ளுகொடிச்சி. நயனசஞ்சவி. சுபநாசினி. அருளகக்கொடி/// 

 கண்டு - கண்டங்கத்திரிச் செடி///
தூதுவேளை
பொருள் விளக்கம் 
             
         இண்டங்கொடி இலை. மிளகு. முட்சங்கன் இலை. தூதுவளை இலை. கண்டங்கத்திரி காய் இவைகளை (நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்தலாம்)  சர்க்கரையுடன் முறைப்படி குடிநீர் (கஸாயம் ) செய்து  அருந்திட ஈளை என்னும் இருமல் நோய் தெண்டனிட்டு ஓடவில்லையெனில் நான் வைத்தியனே இல்லை.
Kandan Kathiri
கண்டங்கத்திரி

mul changan
முட்சங்கன் இலை


மருந்துப் பொருட்களின் குணம்

இண்டு  - பீனிசம், தலையில் நீரேற்றம். தலையில் குடைச்சல் வலி. முக சன்னி குணமாகும்,

மிளகு  - ஐய சுரம். சன்னி. கபம். காது வலி. . இருமல் மற்ற பிற நோய்களும் தீரும்,

சங்கஞ்செடி  -  இதன் இலை வீக்கம். சூலை வாயு,  பித்தம். கிரந்தி இருமல் நீங்கும்

தூதுவேளை  -  விந்து நட்டம். சூலை. காது மந்தம். காதில் தோன்றும் எழுச்சி. இருமல் முதலிய பிணிகள் நீஙகும்.


கண்டங்கத்திரி  -  அனல் வீசும் காய்ச்சல், சன்னி. இருமல், இளைப்பு, செரிமான மந்தம் முதலிய பிணிகள் நீங்கும்.

சித்தம்.


சித்தர் பாடல் - 2

                        உப்பிலியு மோரு முகந்தவிடத் தோலிலையுஞ்
                                  செப்பமாம் முசுமுசுக்கை சீர்கொற்றான் 
                        சொற்பெரிய கோவினுடை  பாலிற் குடிக்க
                                  உளமாந்தை நோவுமீளை யிருமல் விடும்

                        நெல்லி சற்கரை நெற்பொறி  திப்பிலி
                                 நல்ல தேனில் நறுநெய்யில் கொள்வீரால்
                        இல்லை யில்லை யிருமலு மீளையும்
                                  சொல் வேணுமோ சோகையுந் தீருமே,


மறைமொழிகள்

உப்பிலி  -  இண்டு . ஈங்கை , புலித்தொடக்கி

ஓரும்  -  ஆராய / அசைச்சொல்

உகந்த  -  விரும்பத்தக்க

விடத்தோலிலையுஞ்  -  விடத்தேர் மரத்தின் தோலும் (பட்டை) , இலையும்

செப்பமாம்  -  பாதுகாக்கும் 

முசுமுசுக்கை   -  இரு குரங்கின் கை, குரங்கிலை, சுணைக்கொடி, நரியுடை

சீர்        - சிறப்பான

கொற்றான்  -  முடக்கொத்தான்

சொற்பெரிய கோவினுடைய பாலிற் குடிக்க   -  பசுவின் பாலில் குடிக்க

உளைமாந்தை  - உளை மாந்தை எனும் நோயின் தன்மை, 
        உடல் கனத்து குத்திக் குடைந்து வலிக்கும் 
        கைகால் எரிச்சல்
        காய்ச்சல்
        தலைவலி .இருமல், மயக்கத்தில் புலம்புதல்
        நினைவு தடுமாற்றம்
        வாயால் வெள்ளை நிற நுரை தள்ளுதல் , வாய் நீர் வடிதல்
        உணவு வெறுப்பு. உடல்  மெலியும்.        



பொருள் 

                இண்டு இலையும். விடத்தேர் இலை மற்றும் பட்டை, முசுமுசுக்கை , முடக்கத்தான் ஆகியவற்றை எடுத்து அரைத்து சாறு எடுத்து பசும் பாலில் கலந்து குடிக்க உளைமாந்தை, ஈளை,  இருமல் முதலிய பிணிகள் நீங்கும்.

அனுபானம் எனப்படும் துணை மருந்துகளுடன் கொள்ள ஈளை, இருமலுடன், சோகையும் நீங்கும்,  துணை மருந்துகளாவன

நெல்லி, சர்க்கரை, நெற்பொரி, திப்பிலி, தேன், நெய்,


முடக்கத்தான் கொடி
முடக்கத்தான் கொடி


விடத்தேர் மரம்
விடத்தேர் மரம்




முசுமுசுக்கை கொடி
முசுமுசுக்கைக் கொடி


சித்தம்.



மேலும் சில இருமல் மற்றும் ஈளைக்கான மருந்துகள் அதற்கான பொழிப்புரை சில நாட்கள் கழித்து வெளியிடப்படும்,




























த.வை.அ
 MGOS Vol II
குணபாடம்
த.லெக்சிகன்