பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அசோக மரம்

           நகைவகைய  ராகிய நட்பின் பகைவரால்

            பத்தடுத்த கோடி உறும்.

சிரித்துப்பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் கோடி மடங்கு நன்மையானது எனக் கருதப்படும். 

                                                                - திருக்குறள். 


Saraca Indica
அசோக மரம்

அசோகு - Saraca indica Linn 

            பொதுவாக அசோக மரம் என்று மக்கள்  நெட்டிலிங்க மரத்தை சொல்லுவார்கள். நெட்டிலிங்க மரம் மெல்லிய குட்டையான கிளைகளுடன் உயரமாக நீண்டு வளரும், ஆனால் அசோகமரம் பலமான பக்கக் கிளைகளுடன் அகண்டு உயரமாக வளரும். இம்மரம் இயல்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள், கஞ்சம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வளர்கிறது. இதன் பூக்கள் ஒரு பூங்கொத்துபோல் செம்மை நிறத்துடன் மனதைக் கவரும். இம்மரம் மாசி பங்குனி மாதங்களில் பூக்கும்.

                இது கருப்பையில் உண்டாக்குகிற பிணிகளை நீக்கும் உதிரவேங்கை, விளாமரம், விடத்தலான் மரம் போன்ற மரங்கள் போன்றே கருப்பை நோய்களை தணிக்கும்.

                இம்மரம் ...

கருப்பை அழற்சி  (inflamation of the womb, Hysteritis ; Uteritis) .

 கருப்பையிலிருந்து உண்டாகும் இரத்தப்போக்கு ( பெரும்பாடு) (An immoderate section of  the menstrul discharge - Menorrhagia)

இரத்தப் பித்தம் - இரத்தாதிக்கத்தினாலும், இரத்தக் கெடுதியினாலும் உடம்பினின்று நவ துவாரங்கள் வழியாகவும் வெளிப்படும்  இரத்த ஒழுக்கு . பித்தம் இரத்தத்துடன் சேர்ந்து இரத்தத்தைக் கெடுத்து இரத்தத்திற்குச் சமமான வாசனை, நிறம் முதலியவைகளை அடைவதால் இப்பெயர் பெற்றது.

இரத்த பேதி  - இது நோயினாலும் அல்லது குடலுக்குள்ளிருக்கும் இரத்த குழாய்களுக்கு ஏற்படும் கெடுதியினாலும் , இரத்தம் குடலில் நிரம்பி மலத்தோடு  சேர்ந்து பேதியாக செல்வதாகும். (Malaena )

பித்தப் பிணிகள்

நீரிழிவு  - Diabetes   முதலிய வியாதிகளில் வேலை செய்து பிணியைத் தணிக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி