பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அரச மரம்

                     மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

                    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

            தம் மக்களை தழுவி  மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் தரும்.

                                                                                                 -  திருக்குறள்.


The peepul tree
அரச மரம்

            இந்தியாவில் எங்கும் விளைகின்ற பெருமர வகையைச் சார்ந்தது அரச மரம். ஆனி முதல் ஆவணி வரை இம்மரம் பூக்கள் பூக்கும். உயிர்வளியை (ஆக்ஸிஜன்)  பெருமளவில் உற்பத்தி செய்கிறது.

             அரச மரம் போல மனிதர்களுக்கு நன்மை செய்யும் மரம் வேறு இல்லை என்பதாலேயே  அதற்கு மரங்களின் அரசன் என்னும் பொருள்பட அரசமரம் என அழைத்தனர். வாழை மரமும் அதன்  அனைத்து பாகங்களும் பயன்படுகிறது ஆனாலும் அதற்கு கூட மரங்களின் அரசன் என பெயர் இல்லை. ஏன்? படிப்பறிவு , சிந்தனை செய்யும் வலிமை இல்லாதவர்கள் கூட இந்த மரத்தை வெட்டக் கூடாது என்று அரச மரம் என்று பெயரிட்டனர், கிராமங்களில் இன்னும் நுட்பமாக அரசு அல்லது ராஜன் என்ற  பெயருடையவர்தான் அரச  மரங்களை வெட்ட வேண்டும் என்பர். இது மூட நம்பிக்கையாக இருந்தாலும் அரச மரத்துக்கு ஒரு விதத்தில் பாதுகாப்பாகிறது. 

அரச மரத்தின் வேறு பெயர்கள்

            அத்திமானி, அதிரசம், வேந்தன் மரம், ஆள்வணங்கி மரம், காகோளி, சித்தி ரேகை, போதி மரம், மண்ணில் வேந்தன், வாணகெந்தி.

அரச மரத்தின் படங்கள்

இதன் வகைகள்

            1,கொடியரசு  - Ficus Arnottiana

            2. புண்ணியவரசு - Ficus Religiosa

            3. பூவரசு  - Thespesia Popules

            4.  கல்லரசு  - Urostiguia  arnottianum

            5. மலையரசு - Ficus vagans.


                அரச மரத்தின் விதை குளிர்ச்சியைத் தருவதால் அதை லேகியத்திலும், சூரணங்களிலும் சேர்த்துக் குடுக்கப்படுகிறது.

                இரச மரத்தின் கனி செரிமான வலுவை அதிகப்படுத்துவதுடன், மலத்தை இளக்கும் தன்மை வாய்ந்தது.

            அரச மரத்தின் பட்டைக் குடிநீரால் வெள்ளை, மேகம், விக்கல்,சொறி , சிரங்கு முதலிய நோய்கள் தீரும்.

            இதன் பட்டையின் குழம்பு வீக்கத்தை வாங்கும்.

            அரசமரத்தின் பட்டையை எரித்தச் சாம்பலை  நீரில் கரைத்து ஊற வைத்து தெளிவை வடித்துக் குடிக்கக் குடுக்க விக்கலை நிறுத்தும்.


சித்தம்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி