பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


எஃகு சுத்தி முறை

 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

                                            கற்றான் கருதிச் செயல்.

       - திருக்குறள்

வணக்கம் நண்பர்களே !

வாழ்க வளங்களுடன் !


            சித்த மருத்துவத்தில் பல தாதுக்கள் மற்றும் பாடாண, உபரச, மூலிகைகளை சுத்தி முறைகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக உருக்கு என்னும் எஃகு-ஐ சுத்தம் செய்யும் முறைகளைக் காண்போம்.

பலாசு மரம்
புரச மரம்

             எஃகினைச் செந்தூரமாக்குவதற்கு முன், அதனை முறையாகச் சுத்தி செய்தால்  அதன் சிறந்த குணமான இரத்தம் பற்றாக்குறையால் உடல் வெளுத்து வரும் நோய், செரியாமை, உடல் பலவீனம், இளைப்பு இருமல் மற்றும் மேகப் பிணிகளால் நடமாட முடியாமல் படுத்துக் கிடப்பவர்களையும் குணப்படுத்தும், மேலும் விந்து அழிவு, பல்நோய்கள் என அனைத்து நோய்களையும் 'பகலவன் முன் பனி'யென விரட்டும்.

பலாசு மரம்
புரச மரம்
சுத்திமுறை 1            

ஒரு கலத்தில் புரசம்பட்டைகளைப் போட்டு அதில் நெருப்பிடவும்  (காற்றில் சாம்பல் ஓடாதிருக்க), எரிந்து ஆறியபின் அச்சாம்பலை நீரில் கரைத்து அசையாது ஓரிடத்தில் வைத்து தெளிய விடவும். குறைந்தது 3 மணி நேரம் கழித்து கரைசலின் மேலே மிதக்கும் மாசுக்களை நீக்கி விட்டு பின் தெளிந்த நீரை மட்டும் வேறு கலத்தில் மாற்றி விடவும். 

            கொல்லர் உலையில், இரட்டைத் துருத்தி கொண்டு ஊதி  அதில் உருக்குக் கம்பிகளை வைத்து கம்பி பழுக்கக் காய்ச்சி அதை, புரசைமரத் தெளிநீரில் தோய்த்து எடுத்தால் எஃகு பொடியாகும் இதுபோலவே பல முறை செய்து எஃகு பொடி சேர்த்துக் கொள்ளவும், அதனைச் செந்தூரமாகச் செய்ய சிறப்பாக அமையும்.

சுத்தி முறை 2 

                    ஆட்டின் சிறுநீர் மற்றும் மாட்டின் சிறு நீர் இரண்டையும்  சம அளவாக ஒரு மட்கலத்தில் எடுத்துக் கொண்டு, கொல்லர் உலையில் உருக்குக்  கம்பிகளை பழுக்கக் காய்ச்சி அதில் தோய்க்க எஃகு பொடியாகி சுத்தியாகும்.

உருக்கு
எஃகு



No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி