பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


லிங்கக் கட்டு

 கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

        வேண்டுமளவு குடுத்தலும், இன்சொற் கூறுதலும் செய்வானாயின் தனக்கு முன்னாகியும், பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன். இது ஒழுகுந் திறம் கூறிற்று.

                                 - திருக்குறளும், மணக்குடவர் உரையும்.

                                    லிங்கக் கட்டு        

லிங்கம்
லிங்கம்
    

            கட்டு என்பதன் இயல்பு , மருந்துப் பொருட்களை நெருப்புக்கு எதிர் நிற்கும் (ஓடாமல்) தன்மையுடையதாய்ச் செய்தலே ஆகும்.

            இது , பாடாணங்களைத் தனித்தனியேயாவது , இரண்டு முதல் சில சரக்குகள் சேர்ந்து இறக்கப்பட்ட புகைநீரிலாவது, மூலிகைச்சாறிலாவது, குடிநீரிலாவது, தாய்ப்பாலிலாவது, தேனிலாவது, தனிச் சரக்குக் குழிப்புட நெய்யாலாவது , சில சரக்குகள் சேர்ந்த குழிப்புட நெய்யாலாவது சுருக்குக் குடுத்துக் கட்டிக் கொள்வதாகும்.

            கட்டுகள் மாத்திரைக் கல் எனப்படும்.

            சாதிலிங்கம் இது ஒரு பிறவிச் சரக்கு, இது இரசம் எடுக்கப்படும் சுரங்கங்களில் இருந்து கிடைக்கப்படுகிறது. இது சிவப்பு நிறத்திலும் , அதிக எடை உள்ளதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

              வைப்புச் சரக்காக  உலாந்தா லிங்கம் ,உலந்தா தேசத்திலிருந்து வருவதால் அப்பெயர் பெற்றதாம். அது பவளம்போல சிவப்பாகயிருந்தால் அதற்கு பவளமனோசிலை எனவும், சாதிலிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அதற்கு வடமொழியில் தரதம் அல்லது  இங்குளம் அல்லது இங்குலிகம் என்றும் பெயர். இதனின்று எடுத்த ரசத்தை வெகுசுத்தம் என்றெண்ணி சித்த வைத்தியர்கள் மருநது செய்ய உபயோகிப்பர்.  இதை பற்பம், செந்தூரம், சுண்ணம் முதலின செய்வர்.

தேவையான பொருட்கள் 

1. இலிங்கம்                                     35 கிராம்

2.  பளிங்குச் சாம்பிராணி        35 கிராம்

3. கற்பூரம்                                        35 கிராம்

4. தாய்ப்பால்                                தேவையான அளவு


செய்முறை 

                இலிங்கத்தைத் தாய்ப்பாலில் போட்ட ஊறவைத்து பத்துநாள் கழித்து எடுத்து ( பத்து நாளும் புதிய புதிய பாலை மாற்றுவதும் உண்டு) கழுவி, உலர வைக்கவும். லிங்கத்தின் எடைக்கு எடை பளிங்குச் சாம்பிராணியையும், கற்பூரத்தையும் எடுத்து கல்வத்திலிட்டு, மெழுகாகும்படி அரைத்து, சூடாக வழித்துப் பத்துப் பங்காக்கி , ஒருபங்கைச் சீலையிலூட்டி, இலிங்கத்தை உருட்டி விளக்கில் கொளுத்தவும்.ஆறியபின் எடுத்துக் கரியைச் சுரண்டி எடுத்துவிடவும்.பிறகு மற்றைய ஒன்பது பாகங்களையும் தனித்தினியே முன்போவலே செய்து எடுக்கவும்.  (மூளை உள்ள பிள்ளை வென்று பிழைக்கும்.) 

மருந்தின் அளவு 

            இரண்டு அல்லது மூன்று இழைப்புகள் , ஒரு நாளைக்கு இருவேளை.


துணை மருந்துகளும் தீரும் நோய்களும்.

I   வாய்வு  - வாயுநோய் இது எண்பது (80 ) வகைகாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்தை தேனில் இழைத்து நக்க வாயுநோய்கள் போம்.

II. திரிகடுகில் மருந்து அருந்த

        1. சந்நிதோடம் - ஜன்னி தோஷம்  - சன்னி தீரும்

        2. பொல்லாத மாரடைப்பு

        3. மூர்ச்சை  - மயக்கம்

        4. கழிச்சல்

        5. வயிறூதல்  - உணவு உண்ட பின் வயிறு பெரியதாதல்.

III . இஞ்சிச் சாறில் மருந்தருந்த        

            1. சூலை

            2. அழல் - சுரம்  - காய்ச்சல்

            3. வெளுப்பு

            4. விடபாகம்

           5. வயிற்றுவலி  -  மலச்சிக்கல்   உண்டாகி, மூலத்தில் கனல் மிகுந்து குடல் முறுக்கி , கத்தியில் குத்தியது போன்று வலி ஏற்படும் பிணி.

                6. ஊதல் 


பா.சி.ம.செ.பெ.மு.

சித்தம்.


                




No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி